மின்னணு குறியீடுகள்

Electronic symbols எனப்படும் மின்னணு குறியீடுகள் Circuit எனப்படும் மின்சுற்றை படிக்க உதவுகிறது. மேலும் சில பிரசுரங்களில் ஸ்விச், மோட்டார் போன்றவற்றை குறிப்பிட இந்த குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். இவற்றை அனைவரும் அறிந்து வைத்திருப்பது நலம். Advertisements

எளிய மின்சுற்று (A simple circuit )

மின்சார மற்றும் மின்னனுவியலில் மின்சுற்று அல்லது சர்க்யூட் என்பது அடிப்படையான ஒன்றாகும். இந்தப்பரிசோதனையில் ஒரு எளிய மின்சுற்றை உருவாக்கவும் அதே போல் இனி வரும் பாடங்களில் நமக்கு மின்சார சப்ளை தேவைப்படுவதாலும் மின்கலன்களை அதாவது பேட்டரிகளை இணைத்து எப்படி மின்சார சப்ளை பெறுவது என்றும் இப்பாடத்தில் காணவிருக்கிறோம்.