மின்காந்தம்

magnet

ஒரு கருவி மின்சாரத்தை கொண்டு சுற்றுகிறது அல்லது சுழல்கிறது என்றால் அதில் கண்டிப்பாக மின்காந்த செயல்பாடு இருக்கும். அது செல்போனில் இயங்கும் வைப்ரேஷன் ஆகட்டும் மிகப்பெரிய ஆலைகளை இயக்கும் மின்  மோட்டர்கள் ஆகட்டும் அல்லது உங்களது தலைக்கு மேல் சுழலும் மின்விசிறி ஆகட்டும் அனைத்தும் இந்த மின் காந்த  அடிப்படையிலேதான் இயங்குகின்றன. இவை அனைத்திற்க்கும் மிக அடிப்படையான மின்காந்தம் உருவாக்கப்படும் விதத்தை இந்த எளிய பரிசோதனை மூலம் காண்போம்.

Continue reading

Advertisements

எளிய மின்காந்த மோட்டார்

full

இன்றைய உலகம் இயங்கி கொண்டு இருப்பது சக்கரத்தில்தான் அதாவது வாகனங்களால்தான். அந்த வாகனங்களை இயக்க வைக்க அல்லது சர்க்கரங்களை சுழல வைக்க மோட்டார் என்ற சாதனம் அவசியமாகிறது. Continue reading

மின்காந்தம்

electromagஒரு கருவி மின்சாரத்தை கொண்டு சுற்றுகிறது அல்லது சுழல்கிறது என்றால் அதில் கண்டிப்பாக மின்காந்த செயல்பாடு இருக்கும். அது செல்போனில் இயங்கும் வைப்ரேஷன் ஆகட்டும் மிகப்பெரிய ஆலைகளை இயக்கும் மின்  மோட்டர்கள் ஆகட்டும் அல்லது உங்களது தலைக்கு மேல் சுழலும் மின்விசிறி ஆகட்டும் அனைத்தும் இந்த மின் காந்த  அடிப்படையிலேதான் இயங்குகின்றன. இவை அனைத்திற்க்கும் மிக அடிப்படையான மின்காந்தம் உருவாக்கப்படும் விதத்தை இந்த எளிய பரிசோதனை மூலம் காண்போம்.   தேவையான பொருட்கள்:

  1. இரண்டல்லது மூன்று அங்குலம் நீளமுள்ள தேனிரும்பு ஆணி
  2. சுமார் 3 அடி நீளமுள்ள சிறிது தடிமனான காப்பிடப்பட்ட கம்பி
  3. டார்ச் லைட் பேட்டரி (D size)
  4. சில பேப்பர் கிளிப் அல்லது காந்தத்தால் கவரக்கூடிய சிறிய இரும்பு பொருட்கள்

செய்முறை:

  • ஆணியை மேல் முனையில் காப்பிடப்பட்ட கம்பியின் ஒரு முனையில் சுமார் எட்டு அங்குல அளவுக்கு விட்டு விட்டு இடைவெளியில்லாமல் ஆணியின் மறு முனை வரை சுற்றி வரவும்.
  • சுற்றிய பின் காப்பிடப்பட்ட கம்பி அதிகமாக மீதமிருப்பின் சுமார் எட்டு அங்குலம் விட்டு விட்டு மீதத்தை  நறுக்கி எடுத்து விடவும்.
  • கம்பி காப்பிடப்பட்டு இருப்பதால் அதன் மேற்பகுதியில் மின்சாரம் பாயாது எனவே கம்பியின் இரு முனைகளிலும் ஒரு அரை அங்குலம் அளவு சுரண்டி விட வேண்டும். இதை எளிதாக சொரசொரப்பான தரையில் வைத்து லேசாக உரசினால் போதும். அல்லது கத்தியை கொண்டும் சுரண்டி விடலாம். கத்தியை உபயோகிக்கும் போது மிகவும் கவனம் வேண்டும். சிறியவர்களாக இருப்பின் பெரியவர்களை செய்து தரச் சொல்லலாம்.
  • கம்பியின் இரு முனைகளையும் பேட்டரியுன் இரு துருவங்களிலும் இணைத்துக்கொண்டு ஆணியின் கீழ் முனையை    பேப்பர் கிளிப்புக்களின் அருகில் கொண்டு வாருங்கள். என்ன நிகழ்கிறது ?
  • பேப்பர் கிளிப்புகள் ஆணியின் முனையில் ஒட்டிக்கொள்வதை பார்ப்பீர்கள்.
  • பேட்டரி இணைப்பை துண்டித்தால் அவை கீழே விழுவதை காணலாம். ( இணைப்பை துண்டித்த பிறகும் ஒரு சில கிளிப்புகள் சில சமயம் ஒட்டிக்கொண்டு இருக்கும். காரணம் ஆணி காந்த் சக்தியை சிறிது நேரம் தக்க வைத்துக்கொண்டிருப்பதே காரணமாகும்.

electromagnet

காரணிகள்: கம்பி வழியாக பாயும் மின்சாரம் ஆணியில் உள்ள மூலக்கூறுகளை வகைப்படுத்துவதால் அவை குறிப்பிட்ட சில வகை உலோகங்களை கவர்கிறது. மின்னோட்டம் உள்ள ஒரு காப்பிடப்பட்ட கம்பிச்சுருளினுள் ஒரு இரும்பு கம்பி நுழைக்கப்பட்டால் அக்கம்பியின் முனை காந்தமாக மாறுகிறது. மின்னோட்டம் தடைபட்டால் அந்த கம்பி காந்த தன்மையை இழக்கிறது. இதையே தற்காலிக காந்தம் என்றும் அழைக்கிறார்கள். இதையே ஒரு மாமா வீடியோவில் செய்து காட்டுகிறார் பாருங்கள்.