வித்தியாசமான எண்கள்-1

ஒரே மாதிரியான எண்களை கொண்ட இலக்கங்களில் 1 கொண்டு உருவாக்கும் எண்களுக்கு சிறப்பு இடமுண்டு. பின் வரும் கணக்கை பாருங்கள்: இதை நீட்டிக்கொண்டே போனால் சுழல் முறையில் மீண்டும் இதே வரிசையில் விடை வருவதை காணலாம். Advertisements

கணித வித்தை

இதோ ஒரு கணித வித்தை ! இதை எப்படி செய்ய முடிகிறது என்பதை உங்களால் விளக்க இயலுமா ? இதை உங்கள் நண்பர்கள் கூட்டத்தில் செய்து மகிழலாம். உங்கள் நண்பர்கள் யாரேனும் ஒருவரை ஒரு துண்டு காகிதத்தை எடுத்து மூன்று இலக்க எண்ணை எழுதச்சொல்லுங்கள்.  அந்த எண் எவ்வகையிலும் இருக்கலாம். அதாவது பூஜ்யங்கள் போன்றவற்றுடன் இருக்கலாம். அந்த எண்ணை உங்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

கணிதப்புதிர்கள் – 1

( Image courtesy:cwcboe.org) கணிதப்புதிர்கள் – 1 1/ இரண்டு இலக்கங்களை கொண்டு எழுதகூடிய மிகச்சிறிய முழுவெண் என்ன ? 2/ பத்து இலக்கங்கள் அனைத்தையும் (0-9) உபயோகித்து 1 ஐ எழுதுங்கள். 3/ ஐந்து 9 களைக்கொண்டு 10 ஐ எழுதுங்கள். 4/ பத்து இலக்கங்கள் அனைத்தையும் (0-9) உபயோகித்து 100 ஐ எழுதுங்கள் 5/ ஒரே மாதிரியான ஐந்து இலக்கங்களைக் கொண்டு 100 ஐ எழுதுவதற்கு வெவ்வேறான நான்கு வழிகளை காட்டுங்கள் 6/ நான்கு…

இரு பற்சக்கரங்களின் புதிர்

எட்டு பற்களை கொண்ட ஒரு பற்சக்கரம் இருபத்திநான்கு பற்களை கொண்ட மற்றொரு பற்சக்கரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. பார்க்க படம். பெரிய சக்கரத்தை ஒரு தரம் சுற்றிவர சிறியது அதண் அச்சை மையமாக கொண்டு எத்தனை சுற்றுக்கள் சுற்ற வேண்டும் ? அதே போல் ஒரு ரூபாய் நாணயத்தை தரையில் வைத்து அழுத்திக்கொண்டு  அதே அளவுள்ள மற்றொரு நாணயத்தை கொண்டு அதை சுற்றி உருட்டினால் எத்தனை முறை சுற்றி வரும். பார்க்க படம். உங்கள் பதிலை சரிபார்க்க:  

கணித வித்தை

நண்பர்கள் கூடியிருந்த போது கணக்காசிரியரான ஒரு நண்பர் “ நான் ஒரு கணிதவித்தை செய்து காட்டுகிறேன், இதை எப்படி என்னால் செய்யமுடிகிறது என்பதை நீங்கள் விளக்க வேண்டும். யாராவது ஒருவர் இதை செய்யலாம். மூன்று இலக்க எண் ஒன்றை எழுதிக்கொள்ளுங்கள்; அந்த எண்ணை எனக்குச்சொல்ல வேண்டாம்.”

கடிகார முகக்கணக்கு

  மேலே உள்ள கடிகார டயலை ஆறு துண்டுகளாக ஒவ்வொரு வெட்டவேண்டும் ஆனால் இரண்டு கண்டிஷன்கள்; ஒவ்வொரு துண்டிலும் இரண்டு எண்கள் இருக்க வேண்டும். இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 13 ஆக இருக்க வேண்டும். வெற்றி பெற வாழ்த்துக்கள். விடை: இறைவன் நாடினால் அடுத்தவாரம் இதே பதிப்பில் வெளியாகும். தொடர்பில் இருக்க பதிவு செய் ! என்ற லிங்கில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தால் பதில் உங்களுக்கு பதில் தானாக வந்து சேரும். Image Courtesy: http://www.printfree.com/Kids/ClockFace.htm