தூள் உப்பைக்கொண்டு தூளான டிப்ஸ்கள்:

1/ புதிதாக வாங்கிய காட்டன் கலர் துணிகளை உப்பு கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் கலர் நீண்ட நாட்கள் மங்காமல் இருக்கும். 2/ கொசு கடித்த இடத்தில் சிறிதளவு உப்பு தூளை ஈரமாக்கி  தேய்த்தால் அரிப்பு நீங்கும். Advertisements

விரலில் மறைந்திருக்கும் கத்தி !

ஆப்பிள் வாங்கியச்சு ! ( ஒன்னே ஒன்னு மட்டும் ! விக்கிற வெலைக்கு பின்ன டஜனா வாங்க முடியும் ?) இருப்பது இரண்டு பேர், வெட்ட கத்தியில்ல ! என்ன செய்ய !(அதற்கு முன்னாடி நல்லா கழுவிக்கோங்க ! மேல மெழுகு கோட்டிங்க் இருந்தா சொரண்டிக்கோங்க !) உங்க கையையே கத்தியாக மாற்றும் வித்தை இதோ இங்கே ! இப்படி எடுத்து காட்டனுங்கர அவசியம்லா இல்ல ! நேரா அடுத்த படத்துக்கு போய்ரலாம் !

முட்டையின் மஞ்சள் கருவை சுலபமாக பிரித்தெடுப்பது எப்படி ?

பல நேரங்களில் மருத்துவ அல்லது அழகுக்கலைக்காக  முட்டையின் மஞ்சள் அல்லது வெள்ளை கருவை பிரித்தெடுக்க வேண்டியது இருக்கும். அப்படி பிரித்து எடுப்பது மிக சிரமமான காரியமாக இருப்பதை நாம் அறிவோம். அதற்கு சுலபமாக ஒரு வழியை இங்கு காண்போம் !

முத்தான மூன்று டிப்ஸ்-1

வீட்டுச்சுத்தம்: தற்போது ஒட்டடைக்குச்சிகள் பிளாஸ்டிக் குஞ்சங்களால் தயாரிக்கபபட்டு வருகின்றன. இவை ஒட்டடைகளை சரியாக நீக்குவதில்லை.  இக்குறையை போக்க ஒரு பழைய சாக்ஸை அக்குஞ்சத்தின் மீது மாட்டி துடைத்துப் பாருங்கள் ! நல்ல தரமான பெயிண்ட் அடிக்கும் பிரஸ் (1 1/2 அல்லது 2 இஞ்ச் அளவுள்ளது) ஒன்றை வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டால் பல பொருட்களை தூசி தட்டவும், சுத்தம் செய்யவும் உபயோகப்படும். முக்கியமாக கம்ப்யூட்டர் கீ போர்ட், மற்ற எலெக்ட்ரிகல் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள், பீரோ, ஷெல்ஃப் போன்றவற்றின்…