மின்காந்தம்

ஒரு கருவி மின்சாரத்தை கொண்டு சுற்றுகிறது அல்லது சுழல்கிறது என்றால் அதில் கண்டிப்பாக மின்காந்த செயல்பாடு இருக்கும். அது செல்போனில் இயங்கும் வைப்ரேஷன் ஆகட்டும் மிகப்பெரிய ஆலைகளை இயக்கும் மின்  மோட்டர்கள் ஆகட்டும் அல்லது உங்களது தலைக்கு மேல் சுழலும் மின்விசிறி ஆகட்டும் அனைத்தும் இந்த மின் காந்த  அடிப்படையிலேதான் இயங்குகின்றன. இவை அனைத்திற்க்கும் மிக அடிப்படையான மின்காந்தம் உருவாக்கப்படும் விதத்தை இந்த எளிய பரிசோதனை மூலம் காண்போம். Advertisements

நேர்,மாறு மின்னோட்டம் A.C.,D.C.Current

  மாறு மின்னோட்டம்,நேர் மின்னோட்டம் என்றால் என்ன ? தற்காலத்தில் நாம் மின்சாரத்தை இரண்டு வழிகளில் பெறுகிறோம். ஒன்று மின் கம்பி மூலமாக வீடுகளில் உபயோகப்படுத்தும் மின்சாரம். இதை மாறு மின்சாரம் அல்லது மாறு மின்னோட்டம் என்று அழைக்கப்படுகிறது.