நேர்,மாறு மின்னோட்டம் A.C.,D.C.Current

  மாறு மின்னோட்டம்,நேர் மின்னோட்டம் என்றால் என்ன ?

தற்காலத்தில் நாம் மின்சாரத்தை இரண்டு வழிகளில் பெறுகிறோம். ஒன்று மின் கம்பி மூலமாக வீடுகளில் உபயோகப்படுத்தும் மின்சாரம். இதை மாறு மின்சாரம் அல்லது மாறு மின்னோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

ac dc.jpg

இரண்டாவது வகை சேமித்து வைத்து  நகரும் வகையில் உபயோகப்படுத்தும்  பேட்டரி மூலம் கிடைக்கும் மின்சாரம். இவ்வகை நேர் மின்னோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இவ்விரண்டும் குணம் தன்மைகளால் மாறு பட்டவை.

முதலில் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய நேர் மின்னோட்டம் பற்றி பார்ப்போம். நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பேட்டரியை (மின்கலம்) சிறிது உற்று நோக்கினால் போதும்.

நேர் மின்னோட்டம்:

DURACELL-Alkaline-batteries.lg

ஒரு பேட்டரியில் இருமுனைகளில் மேற்புறத்தில் குமிழ் போன்ற அமைப்பும், கீழ் புறத்தில் தட்டையாகவும் நடுவில் சிறிய பள்ளமும் இருப்பதை காணலாம்

 

polarity.jpg

மேற்புறம் + என்ற கூட்டல் குறியாலும், கீழ்புறம் – என்ற கழித்தல் குறியாலும் குறிக்கப்பட்டிருக்கும். ’+ ’என்பதை நேர்மறை  முனையம் என்றும்’  -’   எதிர்மறை முனையம் என்றும் முறையே Positive and Negative polarities என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

இந்த இரு முனைகளிலும் குறிப்பிட்ட அந்தந்த மின்னோட்டம் மட்டுமே வெளிப்படும். அதனால் தான் முனைகளை மாற்றி அமைத்தால் கருவிகள் செயல்படாது. இது பொதுவாக அனைவருக்கும் தெரிந்த விஷயமே.  கருவிகள் செயல்படாததது மட்டுமின்றி அக்கருவி பழுதடைந்து விடுவதற்கும் அதிக பட்ச வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே மின்னோட்டம் ஒரே திசையிலும் ஒரே அளவிலும் பாய்ந்தால் அதற்கு நேர் மின்னோட்டம் என்று பெயர்.

நேர் மின்னோட்ட குறியீடு:2000px-Direct_current_symbol.svg.png

மாறு மின்னோட்டம்:

நேர் மின்னோட்டத்தை பற்றி அறிந்து கொள்ளும்போது முனைகளை மாற்றி அமைத்தால் அதாவது  + முனையை – பக்கத்திலோ  அல்லது – முனை வைக்க வேண்டிய பக்கத்தில் + வைத்தாலோ கருவி செயல்பட்டாது என்றும் பழுதடைந்துவிடும் என்றும் பார்த்தோம். ஆனால் மாறு மின்னோட்டத்தை பொறுத்தவரை என்ன நிகழ்கிறது என்று பின் வரும் பரிசோதனையை செய்து பாருங்கள்:  (கண்டிப்பாக  சிறுவர்கள் பெரியவர்களின் துணையோடு மட்டுமே செய்து பார்க்க வேண்டும்)

வீட்டில் உள்ள இரண்டு பின் ப்ளக்குடன் கூடிய மின்சாதனப்பொருள் ஒன்றை எடுத்து உதாரணத்திற்கு டேபில் ஃபேனை எடுத்து அதன் பிளக்கை மின் இணைப்பு சாக்கெட்டில் பொருந்துங்கள் ஃபேன் ஒடுகிறதா  ? பிளக்கை பிடுங்கி விட்டு  மாற்று திசையில் பொருத்தி பாருங்கள் இப்பொழுதும் ஃபேன் ஒடும். ஏனெனில் வீட்டு மின்சாரம் நாம் பார்த்தது போல் ஒரு முனையில் ஒரே வகை மின்னோட்டம் வராமல் இரண்டு முனையங்களிலும்     இதில் மாறி மாறி மின்னோட்டம் ஏற்படுகிறது. சுருங்கச் சொன்னால் ஒரு முனையில் + பாசிடிவ் மின்னோட்டம் வந்தால் மறுமுனையில் – நெகடிவ் மின்னோட்டம் வரும். இப்படி மாறி மாறி வருவதனால் இதை மாறு மின்னோட்டம் என்று குறிப்பிடுகிறார்கள்.

BS_4573_shaver_plug_compared_to_Europlug

cub_air_lesson01_activity2_fig4

 

 

 

 

 

 

வீடுகளில் பொதுவாகப் பயன்படும் மின்னாற்றல் மாறுமின்னோட்டமே. ஒரு நொடிக்கு எத்தனை முறை முன்னும் பின்னுமாய் மின்னோட்டம் மாறுகின்றது என்பதை பொறுத்து அதன் அலைவெண் அமையும். ஒரு நொடிக்கு அமெரிக்காவில் 60 முறை மின்னோட்டம் முன்னும் பின்னுமாய் அலையும். எனவே அலைவெண் 60. இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வீட்டு மின்னோட்டம் நொடிக்கு 50 முறை முன்னும் பின்னுமாய் அலையும். எனவே அங்கு அலைவெண் 50. ஒரு நொடிக்கு ஒருமுறை முன்னும் ஒருமுறை பின்னும் ஓடும் மின்னோட்டத்திற்கு ஒரு ஹெர்ட்ஸ் என்று பெயர்.அலைவெண் ஹெர்ட்ஸ் என்னும் அலகால் அளக்கப்படுகின்றது.alternating-current-clipart-1.jpg                                                       மாறு மின்னோட்ட குறியீடு:

கூடுதல் தகவல்கள்:

– நேர் மின்சாரத்தை மாறு மின்சாரமாகவோ, அல்லது மாறு மின்சாரத்தை நேர் மின்சாரமாகவோ மின்னனு சாதனங்கள் மூலம்  மாற்றலாம்.

– நேர் மின்சாரத்தை மின்கலங்களில் சேமிப்பது போல் மாறு மின்சாரத்தை சேமித்து வைத்து உபயோகப்படுத்த முடியாது.

– அதிக மின்னழுத்த தேவைக்கு மாறு மின்சாரமே சிறந்தது.

– மாறு மின்சாரத்தை நேர் மின்சாரமாக மாற்றி மின்கலங்களில் சேமித்து வைத்து உபயோகிப்பது  அதிக செலவுடன் கூடியதாகும்.

– நேர் மின்சாரத்தை ஒரு குறிப்பிட்ட  குறைந்த மின்னழுத்த அளவிற்குத்தான் மாற்றி  சேமித்து  உபயோகப்படுத்த முடியும். மாறு மின்சாரத்தைப்போல் ஆயிரக்கனக்கான வோல்ட் எல்லாம் கடினமான செயல்.

– மின்னனு அதாவது எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள்   அனைத்திலும்  அல்லது பெரும்பாலானவற்றிற்கு   நேர் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது.

Advertisements

4 Comments Add yours

 1. Muhammad சொல்கிறார்:

  Super

 2. Muhammad சொல்கிறார்:

  நல்லது

 3. Muhammad சொல்கிறார்:

  Rectifier

 4. santhanakrishnan சொல்கிறார்:

  very useful also add related videos

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s