மின் மாற்றிகள் Transformers

மின் மாற்றிகள் அல்லது ட்ரான்ஸ்பார்மர்கள் என்றால் என்ன ? (What is a transformer ?)

transformer1

மின் மாற்றி அல்லது ட்ரான்ஸ்பார்மர் என்பது மின்சக்தி மற்றும் மின்னோட்டத்தை அதிகப்படுத்த அல்லது குறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனமாகும். தற்போது நாம் அனைவரும்

பயன்படுத்திக்கொண்டிருக்கும் கைபேசியை சார்ஜ் செய்ய உபயோகப்படுத்தும் சார்ஜ்சரில் மின்மாற்றி எனப்படும் ட்ரான்ஸ்பார்மர் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது நம் வீட்டில்
பயன்படுத்தும் நேர் மின்சாரம் 110 முதல் 220 ஓல்ட் வரை பாய்கிறது ஆனால் நமது செல்போனுக்கு தேவையான 5முதல்12 ஓல்ட் மின்சாரமே எனவே அதை குறைத்து கொடுக்க இந்த மின்மாற்றிகள் தேவைப்படுகின்றன.
trans65
ட்ரான்ஸ்பார்மர் எப்படி செயலாற்றுகின்றன ?

மின்மாற்றி அல்லது ட்ரான்ஸ்பார்மர்  என்பது மின்சாரம் சார்ந்த மிக எளிமையான விஷயமாகும். மின்சாரம் ஒரு மின்கம்பி சுருளில் பாயும் போது அதைசுற்றிலும்   நம் கண்களுக்கு புலப்படாத   காந்த சக்தியை உருவாக்குகிறது. இது காந்தசக்தி அல்லது காந்த பாய்வு எனப்படுகிறது. இந்த காந்த சக்தியின் அளவு அந்த மின்கம்பியில் பாயும் மின்சாரத்தின் அளவை பொறுத்து கூடவோ குறையவோ செய்கிறது. உதாரணத்திற்கு பாயும் மின்சக்தி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ காந்த சக்தியும் அந்த அளவுக்கு அதிகமாக இருக்கும். இதை Magnetic flux density அதாவது ”காந்தப் பாய்வு அடர்த்தி” என குறிப்பிடுகிறார்கள்.  இது தவிர மற்றொரு வியக்கத்தக்க நிகழ்வும் நடைபெறுகிறது. காந்தப்புலம் ஒரு கம்பி வளைவைச் சுற்றி உருவாகும் போது அங்கே அது ஒரு மின்னோட்டத்தை உருவாக்குகிறது. உதாரணமாக ஒரு காப்பிடப்பட்ட கம்பி சுருளில் மின்னோட்டத்தை பாய்ச்சி கொண்டிருக்கும்போது அதற்கு அருகில் மற்றொரு கம்பிசுருளை வைத்தால் அதில் மின்சாரம் பாய்வதை காணலாம்.

trans

மின் மாற்றி அல்லது ட்ரான்ஸ்பார்மர் எனப்படும் இக்கருவிகளில் இது போன்ற இரண்டு கம்பி சுருள்கள்தான் அமைக்கப்பட்டு இருக்கும். மின்சாரம் செலுத்தப்படும் சுருளை ப்ரைமரி காயில் என்றும் அதில் பாய்ச்சப்படும் மின்சாரத்தை பிரைமரி மின்சாரம் என்றும் இரண்டாம் சுற்றை செகண்டரி காயில் என்றும் அதிலிருந்து பெறப்படும் மின்சார்ததை செகண்டரி மின்சாரம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இங்கே கம்பிகள் மூலம் மின்சார தொடர்பு இல்லாமலேயே வெற்றிடம் மூலம் மின்சாரம் கடத்தப்படுகிறது என்பது வியப்புக்குறிய செய்தியாகும். இதுவே மின்காந்த தூண்டல் அழைக்கப்படுகிறது (electromagnetic induction) என்று அழைக்கப்படுகிறது.

இத்திறனை மேம்படுத்த கம்பிசுருள் மென்மையான இரும்பு பட்டையின் மீது சுற்றுப்படுகிறது. இது இரும்பு கோர் என்றழைக்கப்படும்.  பின்வரும் படம் இதை தெளிவாக   விளக்குகிறது.

images.png

மின் மாற்றி அல்லது ட்ரான்ஸ்பார்மரின் அமைப்புக்கள்:

மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருபுறமும் சமமான அளவில் ப்ரைமரி மற்றும் செகண்டரி காயில்களில் கம்பிசுருள் சுற்றப்பட்டுள்ளதை காணலம். இதில் பிரைமரி காயிலில் எவ்வளவு அளவு மினசாரம் செலுத்தப்படுகிறதோ அதே அளவுதான் செகண்டரி காயிலிலும் கிடைக்கும்.

Step-down transformers:

நமக்கு குறைந்த அளவு மின்சாரம் தேவைப்படும் போது தேவைக்கேற்ப செகண்டரி காயிலின் சுற்றுக்கள் குறைக்கப்படும். அப்போது செகண்டரி காயிலில் குறைந்த அளவு மின்சாரம் கிடைக்கும். இதுவே ஸ்டெப் டவுன் ட்ரான்ஃபார்மர்கள் என்று அழைக்கப்படுகின்றன.

step-up-transformer

transformer

உதாரணமாக நாம்  பயன்படுத்தும் எல்.சி.டி மானிட்டர், லாப்டாப் போன்ற சாதனங்களுக்கு  குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படும். குறைந்த பட்சமாக12 வோல்ட் அளவு அதற்கு  தேவைப்படும்.

எனவே நம் வீட்டு மின்சார  இணைப்பில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை (220 வோல்ட்)  இவ்வகை ஸ்டெப் டவுன் ட்ரான்ஸ்பார்மர் அடிப்படையில் 12 வோல்ட்டாக மாற்றி அவற்றை இயங்க வைக்கப்படுகிறது.  இவற்றை ஏ.சி அடாப்டர் என்றும், எலிமினேட்டர் என்றும் அழைப்பார்கள்.

இதில் வீட்டு மின்சாரம் என்பது மாறு திசை மின்னோட்டம் ( ALTERNATIVE CURRENT ) வகையாகும், ஆனால் மின்னனு சாதனங்களில் பயன்படுத்தப்படுவது நேர் மின்னோட்டம்  (DIRECT CURRENT) ஆகும் மின்னோட்டத்தை குறைக்கும் பாகங்களோடு அதை நேர் மின்சாரமாக பாகங்களையும் இனைத்திருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் இது பற்றிய முழு விபரங்களை, மின்னோட்டத்தின் வகைக்கள் என்ற தலைப்பில் காணலாம்.

படம்: பவர் சப்ளை அடாப்டர் அதன் உட்புறம்

Universal-LE-9702B-LCD-monitor-AC-Adapter.jpg

sku_252351_1

இதற்கு நேர்மாற்றமாக, குறைந்த சக்தியுள்ள  மின்சாரத்தை அதிக அளவுக்கு மாற்ற ”ஸ்டெப் அப் ட்ரான்ஃபார்மர்கள்” பயன்படுத்தப்படுகின்றன.

அதாவது ப்ரைமரி காயிலில் குறைந்த அளவு  சுற்றுக்களும், செகண்டரி காயில் அதிக அளவு சுற்றுக்கள் கொண்டதாக இருந்தால் குறைந்த அளவு மின்னோட்டத்தை செலுத்தி  அதிக அளவு மின்சக்தியை பெற முடிகிறது. பார்க்க  விளக்கப்படம்

படம்:  ஸ்டெப் அப் ட்ரான்ஸ்ஃபார்மர்:

Step-Up-Transformer.gif

நாம் தற்காலம் பயன்படுத்தும் இன்வெர்டர்களில் பேட்டரியில் உள்ள 12 முதல் 24 வோல்ட் வரை உள்ள    மின்சாரத்தை நாம் வீடுகளுக்கு பயன்படுத்தும் 220 வோல்ட் மின்சாரமாக மாற்ற இத்தகைய ட்ரான்ஃபார்மர்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

படம்: இன்வெர்ட்டர் பேட்டரியுடன் மற்றும் இன்வெர்ட்டரின் உட்புறம்

1270026130004_hz_myalibaba_web4_2959.jpg

inverter-battery-250x250.jpg

 

 

 

 

 

 

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த  மின் மாற்றங்களை ஏற்படுத்த மாற்று  திசை மின்னோட்டம் ( ALTERNATIVE CURRENT ) தேவைப்படும். .   நேர் மின்னோட்டத்தில் (DIRECT CURRENT)இது வேலை செய்யாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்வெர்ட்டர் போன்ற சாதங்களில் பேட்டரியில் உள்ள நேர் மின்சாரத்தை மாற்று மின்சாரமாக மாற்றிய பிறகுதான் அதை ஸ்டெப் அப் ட்ரான்பார்மரில் செலுத்தி அதை   அதிக அழுத்தமுள்ள மின்னோட்டமாக அதாவது நம் வீட்டு மின் உபகரணங்கள் செயல்படும் 220 வோல்ட் மின்சாரமாக மாற்றப்படுகிறது.

அதே போல், காயிலில் பயன்படுத்தப்படும் கம்பியின் கனம் அதாவது பருமனைப் பொருத்து மின்சக்தி மற்றும் மின்னோட்டங்களின் அளவும் மாறுபடும்.

Advertisements

One Comment Add yours

  1. Gajenthiran சொல்கிறார்:

    இன்வெர்டர் நாங்களும் செய்ய முடியுமா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s