எளிய மின்காந்த மோட்டார்

full

இன்றைய உலகம் இயங்கி கொண்டு இருப்பது சக்கரத்தில்தான் அதாவது வாகனங்களால்தான். அந்த வாகனங்களை இயக்க வைக்க அல்லது சர்க்கரங்களை சுழல வைக்க மோட்டார் என்ற சாதனம் அவசியமாகிறது. இதனால்தான் மோட்டார் கார் என்றே அழைக்கப்படுகிறது. வாகனங்களுக்கு மட்டுமின்றி அனைத்து விதமான தொழிற்சாலைகள், மின் உற்பத்தி போன்ற அனைத்திலும் மோட்டார் என்பதுதான் அடிப்படை. அத்தகைய மோட்டாரின் அடிப்படை என்ன எப்படி இயங்குகிறது என்பதைப்பற்றிய விளக்கம்தான் இந்த பரிசோதனை.

ஒரு மோட்டாருக்கு மின்சாரமும் காந்த விசையும் அடிப்படை தேவைகளாகும். காந்த விசை அல்லது சக்தியை நேரடியாக காந்தத்தின் மூலமாகவோ அல்லது மின்சாரத்தை கொண்டோ உருவாக்கிக்கொள்ளலாம். இரண்டாவதை மின்காந்த சக்தி என்று அழைக்கிறோம்.

இங்கு நாம் உருவாக்க  இருப்பது நேர் மின்சாரத்திம் மூலம் இயங்கும் நேர் மின்சார மோட்டார் ஆகும். (DC Motor)

நேர் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார்களில் பெரும்பாலும் காந்தம் பொருத்தப்பட்டு இருக்கும். அதே நேரத்தில் காந்தம் இல்லாமலும் செய்ய இயலும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

இதன் அடிப்படை சக்தியான  மின்காந்தம் பற்றி தெரிந்து கொண்டால் இதை புரிந்து கொண்டால் நல்லது. மின்காந்தம் பற்றிய தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும் 

மூன்று வகையான மின்காந்த மோட்டார்களை நாம் செய்யலாம்.

1/ மிக எளிய முறையில் தயாரிக்க கூடிய ஒருமுனை மோட்டார் பற்றிய செய்முறையை காண இங்கு க்ளிக்கவும்

இரண்டாவது  மாதிரி மின்காந்த மோட்டார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் கருவிகள்things needed:

  1. 9 vol சக்தியுள்ள சதுர வடிவான பேட்டரி +
  2. முதலைவாய் கிளிப்புக்களுடன் இணைக்கப்பட்ட பேட்டரி கனெக்டர்
  3. அதிக சக்தியுள்ள காந்தம் (Neodymium magnet)
  4. சுமார் 1 மீட்டர் நீளம் காப்பிடப்பட்ட செப்புக் கம்பி ( 20 கேஜி கனமுடையது)
  5. மீடியம் அளவுள்ள இரண்டு ஊக்குகள் ( மேல்பகுதி வெட்டப்பட்டவை)
  6. ஒரு சிறிய அளவுள்ள பலகை
  7. இரண்டு பாசி மணிகள்
  8. கம்பியை சுற்றுவதற்கு உதவ முக்கால அங்குலம் விட்டமுள்ள ஏதேனும் ஒரு உருளை ( முக்கால் இஞ்ச் பிவிசி பைப், அல்லது AA பேட்டரி போன்றவை)
  9. செப்புக்கம்பியின் காப்பை நீக்க சிறிய கத்தி
  10. இருபக்கமும் பசை உள்ள டேப் இரண்டு சிறிய துண்டுகள்

செய்முறை:

– முதலில் பலகையை எடுத்து ஒரு ஓரத்தில் வெட்டப்பட்ட ஊக்குகளை நிறுத்தி வைக்கும் படியாக துளைகளிடவேண்டும். அதாவது பலகையின் ஒரத்தில் இருந்து சுமார் ஒரு செண்டி மீட்டர் தள்ளி  ஒரு செண்டி மீட்டர் இடைவெளியில் இரண்டு துளைகள் இடவேண்டும். அதற்கு எதிராக சுமார் நான்கு செண்டிமீட்டர் இடைவெளி விட்டு அதே அளவில் இரண்டு துளைகள் இடவேண்டும். அத்துளைகளில் மேற்ப்பக்கம் நீக்கப்பட்ட ஊக்குகளை செங்குத்தாக நிறுத்த வேண்டும். இது தாங்கிகள் ஆகும். பார்க்க படம்.

– இரண்டு ஊக்குகளின் நடுவில் சிறிய துண்டு இருபக்க பசையுள்ள டேப்பை  (காந்தத்தின் அளவு வெட்டி) ஒரு பக்கம் மேல் ஒட்டியுள்ள காகிதத்தை நீக்கி விட்டு பலகையின் மீது ஒட்டவும்.

– அதற்கு எதிர்ப்பக்கத்தில் பேட்டரியை ஒட்டும் அளவுக்கு பசை டேப்பை வெட்டி ஒட்டவும். முடிக்கப்பட்ட நிலையில் உள்ள படம் கீழே தரப்பட்டுள்ளது.

base with pin.png

முக்கால் இஞ்ச் விட்டமுள்ள குழாயை எடுத்து காப்பிட்ட கம்பியை அதன் மீது சுமார் பன்னிரண்டு சுற்றுக்கள் சுற்றவும். ஆரம்பத்தில் சுமார் இரண்டு இஞ்சும் கடைசியில் மூன்று இஞ்ச் அளவும் வெளீயில் நீட்டி இருக்க வேண்டும்.  இரண்டு முனைகளை எதிர் எதிராக வரும்படி வைத்து இரண்டு சுற்றுக்கள் சுற்றி முனையை சுற்றுக்குள் நுழைத்து வெளியில் எடுக்கவும். பார்க்க படம்.

Conv_coil.jpg

 

coil armature.png

நீட்டப்பட்ட கம்பியின் இரு ஓரங்களில் ஒரு பக்கம் மேலே இடப்பட்டிருக்கும் காப்பை (வார்னிஷை) கத்தியை கொண்டு சுரண்டி நீக்க வேண்டும். மற்றொரு பக்கத்தில் பாதி கம்பியில் மட்டும் நீக்க வேண்டும் பார்க்க படம்.

Knife.jpg

Wire_ends

இதை கவனமாக செய்ய வேண்டும் இந்த பரிசோதனையின் வெற்றி நீங்கள் இந்த காயிலை எந்த அள்வுக்கு துள்ளியமாக செய்கிறீர்கள் என்பதை பொருத்துதான் இருக்கிறது.

இதுவே மோட்டரின்  காயில் ஆர்மெச்சர் ஆக செயல்படுகிறது.

பேட்டரியின் கனெக்டரை எடுத்து அதன் இரண்டு வயர்களின் முனைகளிலும் முறையே கறுப்பு சிகப்பு ஒயரை அதே நிறமுள்ள முதலை வாய் கிளிப்புடன் இணைக்கவும், பார்க்க படம்.

connector with clip copy.png

அதை பேட்டரியுடன் இணைக்கவும்.

முன் தயார் செய்து வைத்திருந்த பலகையை எடுத்து இரண்டு ஊக்குகளுக்கு நடுவே காந்ததையும், அதண் எதிர்புறத்தில் பேட்டரியையும் ஒட்டவும். படம்

 

battery fixed.png

சுற்றி வைக்கப்பட்ட கம்பி சுருளை எடுத்து இரு பக்கமும் பாசி மணிகளை கோர்த்து இரண்டு தாங்கிகளில் மேற்புறத்தில் சொருகவும். ஒரு பக்கம் நுழைத்து விட்டு மறு பக்கம் இலேசாக ஒரு தாங்கியை சாய்த்து கொள்ளவும்.

இரண்டு முதலைவாய் கிளிப்புக்களை தனித்தனியாக இரண்டு தாங்கிகளையும் கவ்வி பிடிக்க செய்யவும்.

காயில் சுழல் தொடங்கும். அப்படி நடக்கவில்லையானால் இலேசாக விரல்களால் சுற்றி விடவும், உடனே அது வேகமெடுத்து சுழல தொடங்கும்.

full.png

சழலும் எளிய மின் மோட்டார்

நீங்கள் எதிர்பார்த்தபடி சுழலவில்லையானால் கவலை வேண்டாம். அறிவியல் பரிசோதனைகளை பொறுமையுடன் கையாள வேண்டும். எங்கு தவறிழைத்திருக்கிறோம் என பொறுமையாக அலசி ஆராய்ந்து அவற்றை சரிசெய்து வெற்றி பெற வேண்டும்.

என்னென தவறுகள் நடந்திருக்கலாம்:

– பேட்டரி இனைப்பு சரியாக இருக்கிறதா ? ”க்ளிப்புக்கள் ஊக்கை சரியாக கவ்வி பிடித்து இருக்கின்றனவா”  என்று பார்க்கவும். சரிசெய்யவும்.

– பேட்டரியில்  நல்ல நிலையில் இருக்கிறதா என்று சோதிக்கவும். சிறிய பல்புக்கள் ஏதேனையும் வைத்து எரிகிறதா என்று பார்க்கலாம்.

– காயிலின் ஒர கம்பிகளில் காப்பு சரியாக நீக்கப்பட்டு  இருக்கிறதா என்று சோதிக்கவும்.

இவற்றை தவிர வேறு தவறுகளுக்கு ஏறக்குறைய வாய்ப்பில்லை.

இந்த பரிசோதனையை செய்ய தேவையான பொருட்களை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்

dc motor wrapper 1 big.png

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s