தூள் உப்பைக்கொண்டு தூளான டிப்ஸ்கள்:

 

1/ புதிதாக வாங்கிய காட்டன் கலர் துணிகளை உப்பு கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் கலர் நீண்ட நாட்கள் மங்காமல் இருக்கும்.

10537360-depositphotos_85976484_s-2015-1485507146-650-9a118bc4bb-1485926305

2/ கொசு கடித்த இடத்தில் சிறிதளவு உப்பு தூளை ஈரமாக்கி  தேய்த்தால் அரிப்பு நீங்கும்.

3/ சிறிதளவு எலுமிச்சை சாற்றுடன் உப்பு தூளை கலந்து வெண்கல பாத்திரங்களை துலக்கினால் பாத்திரங்கள் பளிச்..

4/ மீன் அல்லது மாமிச வகைகளை ப்ரை பானில் பொரிக்கும் போது எண்ணை தெரிக்காமல் இருக்க எண்ணெயில் சிறிதளவு தூள் உப்பை சேர்க்கவும்

5/ மெழுகு வர்த்தி நீண்ட நேரமும் சீராகவும் எரிய அதை ஒரு நாள் உப்பு கலந்த நீரில் ஊற  வைத்து பயன்படுத்தவும்.

6/ ஷூக்களில் வரும் துர்நாற்றத்தை போக்க தூள் உப்பை ஒரு துணியில் கட்டி உள்ளே வைக்கலாம்.

7/ உப்பு கலந்த நீரை எறும்பு மொய்க்கும் இடங்களில் தெளித்தால் அல்லது உப்புத்தூளை தெளித்தால் எறும்புத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

8/ நறுக்கிய காய்கறி பழங்கள் போன்றவை நிறம் மாறுவதை தடுக்க அவற்றை உப்பு கலந்த நீரில் போட்டால் அவை நிறம் மாறாமல் புதிதாக இருக்கும்.

9/ வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கிய பின் தூள் உப்பை கொண்டு கையை கழுவினால் அவற்றின் வாசனை போய்விடும்.

10/ ஒரு கப்பில் கல் உப்பை நிரப்பி அதில் ஒரு சில சொட்டுக்கள் ஏதேனும் வாசனை திரவியத்தை இட்டு வைத்தால் அறையில் நீண்ட நேரம் அந் நறுமணம் நீடித்திருக்கும். கப்பிற்கு பதிலாக சுளை நீக்கிய பதியாக அறுத்த ஆரஞ்சு பழம் நல்ல பலனைத்தரும்.

11/ அயன் பாக்ஸ் அதாவது மின்சார இஸ்திரி பெட்டியின் அடிப்பாகத்தில் கறை துறு போன்றவை இருக்கிறாதா ? ப்ரவுன் பேப்பரை விரித்து அதண் மேல் தூள் உப்பை பரப்பி, இஸ்திரி பெட்டியின் அதிக பட்ச வெப்ப அளவை வைத்து சூடேரியவுடன் உப்பின் மேல் நன்றாக அழுத்தி தேய்த்தால் இஸ்திரி பெட்டி பள பள..

12/ சமயலறை ஸ்டீல் சிங்க்குகள் கறைபிடித்து டல்லாக இருக்கிறதா ? எலுமிச்சை சாறுடன் தூள் உப்பை கலந்து பேஸ்ட் போல் செய்து அதை கொண்டு தேய்த்து சுத்தம் செய்தால் சின்க் புதிது போல் ஜொலிக்கும். நாம் கடைகளில் வாங்கி உபயோகிக்கும் ட்ராப்ஸை விட இது நல்ல பலனை கொடுக்கும்.

                                                   © minervastock/depositphotos

13/ ஹோட்டல்களில் ஆர்டர் செய்த உணவை ஏதேனும் ஒரு காரணத்திற்காக (முடி, எறும்பு, பூச்சி போன்றவை) வேறு கொண்டு வரச்சொல்கிறீர்களா ? அப்போது அந்த உண்வின் மேல் டேபிளில் இருக்கும் தூள் உப்பை தெளித்து விடுங்கள். இது அவர்கள் அதே உணவை வேறு ப்ளேட்டில் மாற்றி கொண்டு வருவதையும் அல்லது அதை வேறு யாருக்கேனும் கொடுப்பதை தடுக்கும்.

Courtesy: huffingtonpost, homeguides,top10homeremedies, thekitchn, simplehomemaking, oregonlive, rd, healthyandnaturalworld, wikihow, epicurious,gluesticksgumdrops,Akkas World, popsugar

Advertisements

One Comment Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s