மின்கலன்கள்/பேட்டரிகள் part-1

Batteries or Cells – பேட்டரிகள் இல்லாத உலகத்தை சிறிது கற்பனை செய்து பார்ப்போமா ?

Types-Of-Battery

– பட்டனை தட்டியவுடன் ஸ்டார்ட் ஆகும் ஆட்டோ ஸ்டார்ட் வாகனங்கள் இல்லை

– உங்கள் கைகளில் தவழும் செல் போன்கள் இருக்காது

– கம்ப்யூட்டர் மற்றும் அது சார்ந்த எந்த உபகரணகளிலும் தேதி போன்றவற்றை நினைவில் வைக்க இயலாது.

– டி.வி இருக்கும் ஆனால் ரிமோட் இருக்காது.

– தற்போது அதிகஅளவு உபயோகத்தில் இருக்கும் இன்வெர்ட்டர் இருக்காது.

– டார்ச் லைட் இருக்காது, டிஜிட்டல்
கேமெராவோ அல்லது ப்ளாஸ் லைட்டோ இருக்காது.

– மொத்தத்தில் போர்ட்டபிள் மின்சார அல்லது மின்னனு உபகரணங்கள் எதுவுமே இருக்காது !

வரலாறு:

இத்தாலியை சேர்ந்த இயற்பியலாளர் அலெஸ்ஸண்ட்ரோ ஓல்டா என்வர்தான் 1799 ல் முதன் முதலாக பேட்டரிக்கு அடிக்கல் நாட்டினார். உலோகத்தகடு மற்றும் உப்புக்கரைசலில் ஊற வைத்த அட்டையை கொண்டு உருவாக்கியது தான் முதல் பேட்டரியாகும். அதற்கு பிறகு அவரின் கண்டுபிடிப்பை அறிவியல் அறிஞர்கள் பல்வேறு பொருட்களை கொண்டு பல்வேறு வகையிலும் அளவிலும் கண்டுபிடிக்க ஆரம்பித்தனர்.

மின்வேதியியல்:

நம்மில் பலர் நினைத்துக் கொண்டு இருப்பது போல் பேட்டரி என்பது நாம் வீட்டு மின்சார இணைப்பு மூலம் சார்ஜ் செய்யும் போது மின்சாரத்தை சேமித்து வைத்துக் கொண்டு பிறகு நாம் உபயோகிக்கும் போது மின்சாரத்தை வெளிவிடுவது இல்லை ! உண்மையில் மின்கலத்தில் அதாவது பேட்டரியில் நிரப்பப்பட்டு இருக்கும் வேதிப்பொருட்களில் ஏற்படும் வேதியியல் செய்ல்பாடுகளால்   நடைபெறுகிறது. அவற்றைப்பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன் பேட்டரியில் உள்ள வகைகளை தெரிந்து கொள்ளலாம்.

பேட்டரிகளின் வகைகள்:

பேட்டரிகள் இரு வகைகளாக பிரிக்கப்டுகிறது.

1. ப்ரைமரி செல்ஸ் (முதல் நிலை மின்கலன்கள்) இவை ஒரே ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்த முடியும் இதை ட்ரை செல்ஸ் என்றும் கூறுவார்கள். நாம் சாதாரணமாக டார்ச் லைட் போன்றவற்றில் பயன்படுத்துவது.

Batteries-dry cells

2. செகண்டரி செல்ஸ் ( இரண்டாம் நிலை மின்கலன்கள்) இவ்வகை பேட்டரிகளை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும். இவற்றை வெட் செல்ஸ் என்றும் கூறுவர்.  இவற்றை நாம் வாகனங்கள், இன்வெர்ட்டர்கள் போன்றவற்றில் பயன்படுத்துகிறோம்.

wet cell

இந்த பதிவை இன்னும் மேம்படுத்த உங்களது    உங்கள் கருத்துக்களையும் கேள்விகளயும் கீழே இருக்கும் காமெண்ட் பகுதியில்   பதிவு செய்யவும்..

Advertisements

2 Comments Add yours

  1. தையல்காரன் சொல்கிறார்:

    இன்னும் அதிக விவரங்கள் தேவை சார்ஜிங் பேட்டரி பற்றி

  2. suresh babu சொல்கிறார்:

    am innum vivaramaka kooravum

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s