’மாடு’ வளர்க்கும் எறும்புகள்

ant-with-aphids

அசுவினி என்றழைக்கப்படும் எனப்படும் ஒரு வகை பூச்சியினங்களை எறும்புகள் தங்கள் புற்றுகளில் வைத்து வளர்க்கின்றன.இவற்றிற்கு ஒரு வகை புற்களை உணவாக அளித்து அவற்றிலிருந்து சுரக்கும் தேன் போன்ற இனிய பானத்தை கறந்து எறும்புகள் உணவாகக்கொள்கின்றன. எனவேதான் இவை ‘எறும்பு பசு, என்று அழைக்கப்படுகின்றன.

இவ்வசுவினிகளை பாதுகாக்க, உணவளிக்க ஒரு தனி எறும்புப்பிரிவே இருக்கின்றன. இவை தேனெறும்புகள் (honey ants) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் வேலை  அசுவினிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும், அவற்றிற்கு உணவளிப்பதும், அவை இடும் முட்டைகளை பாதுகாத்து வைப்பதில் தேனெறும்புகள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்ளும். உதாரணத்திற்கு குளிர்காலங்களில் முட்டைகளை  சரியான  சீதோஷ்ண நிலை உள்ள இடங்களுக்கு எடுத்துச்சென்று பாதுக்காக்கின்றன. முட்டை பொறிக்கும் காலத்தில் அவற்றை இரை கிடைக்கும் இடங்களுக்கு எடுத்துச்செல்கின்றன.

பொதுவாக அசுவினிகளுக்கு இறக்கை இல்லாவிட்டாலும் அசாதாரண சூழ்நிலைகளில் அதாவது இனப்பெருக்கம் அதிகமாகி உணவுப்பற்றாக்குறை ஏற்படும் தருணங்களில் இறக்கை முளைத்து பறந்து செல்வது உண்டு. ஆனால் தமது உணவு ஆதாரங்கள் கைவிட்டுப்போகக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வில் எறும்புகள் அவற்றின் இறக்கைகளை வெட்டி விடுமாம். மேலும் ஒருவித இரசாயணத்தை உபயோகித்து  தாம் வளர்க்கும் அசுவினிகளுக்கு இறக்கை முளைக்க விடாமல் தேனெறும்புகள் தடுப்பதாக சமீபத்திய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு பார்க்க : http://insects.about.com/ od/coolandunusualinsects/f/antsandaphids.htm/8056053111

இந்த பதிவை இன்னும் மேம்படுத்த உங்களது    உங்கள் கருத்துக்களையும் கேள்விகளயும் கீழே இருக்கும் காமெண்ட் பகுதியில்   பதிவு செய்யவும்..

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s