Lays சிப்ஸ்ஸில் பன்றி கொழுப்பா ?

lays

Lays உருளைக்கிழங்கு சிப்ஸ்-இல்  E630 என்ற குறியீடு உள்ளது இது பன்றியின் கொழுப்பில் இருந்து எடுக்கப்படும் பொருளாகும் என்ற ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து இணையத்தில் தேடி எடுத்த விவரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு;

அறிமுகம்:

E630 என்ற குறியீட்டிஜ்ன் பொருள் Sodium salt of inosinic acid சோடியம் சால்ட் ஆஃப் இன்சோனிக் ஆஸிட். இயற்கை அமிலமாகிய இது பெரும்பாலும் விலங்குகளில் காணப்படுகிறது. வணிக ரீதியாக விலங்குகளில் இருந்தும், மீன்களில் இருந்தும் தாயாரிக்கப்படுகிறது. மேலும் தாவரங்களில் இருந்து பெறப்படும் சர்க்கரையில் நுண்ணியிர்களை நொதிக்க செய்தல் மூலமும் இது தயாரிக்கப்படுகிறது.

1922243_597654730303428_510129243_n

ஃபேஸ்புக்கில் வெளியான புகைப்பட செய்தி

செயல்பாடு & பண்புகள்:

இதற்கென தனியாக ருசி என்று இல்லாவிட்டாலும் இது மற்ற சுவையூட்டும் பொருள்களின் செயல்பாட்டினை அதிகரிக்க உபயோகிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு பொருளில் உப்பு, காரம் சரியான விகிதத்தில் சேர்க்கவில்லையே என்று கவலைப்படாமல்  இதை சேர்த்துவிட்டால் அதன் சுவையை இது சமப்படுத்தி கூட்டிக்கொடுத்துவிடும். எனவே இதை சுவை கூட்டும் பொருளாக பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக பொறித்த மசாலா பொருட்கள்,, நூடுல்ஸ் மசாலா போன்றவற்றை கூறலாம்.

lays Hindi

ஹிந்தியில் (source:http://jokingcobra.blogspot.in/2012/07/lays-chips-consists-of-e631-pig-fat.html )

தினசரி உட்கொள்வதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட அளவு

தனித்து எதுவும் தீர்மானிக்கப்படவில்லை.12 வாரங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் உணவுகளில் இதை சேர்க்கக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.

பக்க விளைவுகள்:

ஆஸ்த்துமா, கீல்வாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இது கலந்த  பொருளை உபயோகிக்கக் கூடாது. பொதுவாக இது குறைந்த அளவில் மட்டும் பயன்படுத்தப்படுவதால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.

கட்டுப்பாடுகள்:  

இன்சோனிக் ஆஸிட் பெரும்பாலும் விலங்குகளிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. சில சமயங்களில் மீன்களில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது. விலங்குகளில் இருந்து  என்று பொதுவாக குறிப்பிட்டாலும் இது விலங்குகளின் கொழுப்பையே குறிக்கிறது. மேலைநாடுகளில் மிக அதிகமாக குறைந்த விலையில் கிடைப்பது பன்றி கொழுப்புத்தான் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

நமது கூற்றை food-info.net என்ற இங்கிலாந்து நாட்டு இணையதளம் உண்மைப்படுத்துகிறது.

அந்த இணைய தளத்தின் அறிவிப்பில்..

எனவே E630 எனப்படும் இன்சோனிக் ஆஸிட் சேர்க்கப்பட்ட தயாரிப்புக்கள் முஸ்லிம்,யூத மற்றும் இந்து மக்களுக்கு பொறுத்தமானது அல்ல ! அதை  எந்த மூலப்பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டது என்பதை அப்பொருளின் தயாரிப்பாளர் தெளிவாக குறிப்பிட்டால் தவிர.”  

லேஸ் தயாரிப்புக்களில் E631 பற்றிய புகார் பாகிஸ்தானில் எழும்பிய போது, அக் கம்பெனி E631  மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கபட்டதாக உறுதி செய்து South African National Halaal Authority – SANHA  என்ற தென் ஆப்பிரிக்க நிறுவனத்திடம் ஹலால் சான்றிதழ் பெற்றிருப்பதாக தெரிவித்து இருக்கிறது. பார்க்க படம்

Lays halaal certificate

SANHA  சான்றிதழ்

மேலும் இது சம்பந்தமாக பாகிஸ்தானில் எழுப்பப்பட்ட சர்ச்சையை கண்டித்து லேஸ் கம்பெனியும் தனது தயாரிப்புக்களில் எவ்வித மிருக கொழுப்புக்களும் சேர்க்கப்படவில்லை என்றும் அவை அனைத்தும் பாகிஸ்தானின் உணவு சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு 100% மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்டவை என்றும்; அந்த மூலப்பொருட்கள் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்வதாகவும் தெரிவித்து இருக்கிறது.

மேலும் இப்பொருட்கள் இஸ்லாமிய நாடுகளாகிய சவுதி அரேபியா, எகிப்து, யு.ஏ.இ., மலேசியா போன்றவற்றில் விற்கப்படுவதாகவும் தெரிவித்து இருக்கிறது.

Lays certificate

லேஸ் கம்பெனி கடிதம்

நம் மனதில் எழும் கேள்விகள்:

–    மேற்கண்ட உறுதி மொழி பாகிஸ்தானுக்கும், பிற இஸ்லாமிய நாடுகளில் விற்பதை பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறதே தவிர இந்தியாவைப்பற்றி குறிப்பிடப்படவில்லை.

–    நமது சந்தேகத்திற்கான காரணம், அக்கடிதம் பாகிஸ்தான் நாட்டு உணவுகட்டுபாடுகளுக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தினிலேயே தயாரிப்பதாக குறிப்பிடுகிறது. நம் நாட்டில் தயாரிக்கப்படும் லேஸ்ஸுக்கு அது போன்ற கட்டுபாடுகள் உள்ளதா ? அப்படி இருந்தாலும் அது கண்கானிக்கப்படுகின்றதா ?

–    விலங்குகளிலிருந்து நேரடியாக பெறப்படும் அம்மூலப்பொருள் மிகவும் மலிவாக கிடைக்கும். ஆனால், தாவரத்திலிருந்து தயாரிப்பதற்கு அதிக செலவாகும் என்பது நிதர்சனமான உண்மை. கட்டுப்பாடு, கண்கானிப்பு இல்லாத இடங்களில், சுலபமாகவும் மலிவாகவும் கிடைக்கும் பொருளை கொண்டு லாபம் பார்ப்பதை விட்டு விட்டு விலை அதிகமுள்ள பொருளை உபயோகிக்கும் அளவுக்கு பெப்ஸிகோ நிறுவனம் பொதுநல எண்ணம் கொண்டதா ?

 

–    எனவே இது குறித்து லேஸ் கம்பெனியின் இந்திய தாயாரிப்பிலும் தாவரங்களில் இருந்து தயார்க்கப்படும் ’இன்சோனிக் ஆஸிட்’ தான் சேர்க்கபடுகிறது என்று உறுதிமொழி அளிக்கும் வரை இதை வாங்கி உபயோகிக்காமல் இருப்பதுவே சிறந்ததாகும் என்பது நமது கருத்து.

ஆதாரங்கள்:

http://www.food-info.net/uk/e/e631.htm

http://www.food-info.net/uk/e/e631-lays.pdf

http://en.wikipedia.org/wiki/Disodium_inosinate

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s