பழ மின்சாரம்

e13

அணு மின்சாரம், அனல் மின்சாரம், நீர் மின்சாரம் போல் இது பழ மின்சாரம்.  எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம், ஆரஞ்சுப்பழத்திலிருந்து மின்சாரம் என்று  அவ்வப்போது இணையத்தில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை எப்படி செய்து பார்ப்பது என்பதுபற்றி ஒரு சிலரே அறிந்திருப்போம். அப்படிபட்டவர்களுக்கான பதிவே இது !

தேவையான பொருட்கள்:

e1

  1. இருபக்கமும் முதலைவாய் கிளிப்புடன் உள்ள வயர்கள் ஐந்து ( செட்டாக கிடைக்கவில்லையானால் மின்சாரப்பொருட்கள் விற்கும் கடைகளில் முதலைவாய் கிளிப் தனியாக கிடைக்கும் வாங்கி அதனுடன் துண்டு வயர்களை பொருத்திக்கொள்ளலாம்.
  2. எலுமிச்சம் பழங்கள் 4 ( நன்கு பெரியதாகவும் சாறு அதிகமுள்ளதாகவும் இருந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்)
  3. நான்கு துருப்பிடிக்காத ( galvanized)  இரும்பு ஆணிகள் –  4  ( அளவு நீங்கள் வாங்கும் பழத்தை பொறுத்து முடிவு செய்யலாம் )
  4. செப்புக்காசுகள் /செம்புக்காசுகள்  – 4
  5. குறைந்த மின்சக்தியில் எரியக்கூடிய  LED பல்ப் – 1
  6. கத்தி
  7. பெரியவர்களின் துணை:

செய்முறை:

e2

எலுமிச்சைகளை எடுத்து ஒரு ஓரத்தில் கத்தியால் செம்புக்காசு நுழையும் அளவுக்கு துளையிடவும்.

e3

அத் துளையில் செம்புக்காசை சொருகவும்

e4

பழத்தின் மறு முனையில் காசுக்கு நேராக ஆணியை சொருகவும்

e7

நான்கு பழங்களுக்கும் இப்படி செய்து முடித்தவுடன் அவற்றை வரிசையாக ஆனால் ஆணியும், காசும் ஒன்றை ஒன்று நோக்கி இருப்பது போல் அமைத்துக்கொள்ளவும்.

e8

ஒரு முதலைவாய் கிளிப் வயரை எடுத்து முதல் பழத்தின் ஆணியில்  கிளிப்பை அழுத்தி பிடிக்க வைக்கவும். அதன் மறு முனையை இரண்டாவது பழத்தின் காசை பிடிக்க வைக்கவும்.

அதே போல் இரண்டாவது பழத்தின் ஆணியை அடுத்த வயரின் ஒரு முனையை பிடிக்க வைத்து அதன் அடுத்த முனையை மூன்றாவது பழத்தின் காசில் பொருத்தவும்.

பிறகு மூன்றாவது பழத்தின் ஆணியை அடுத்த வயரின் ஒரு முனையை பிடிக்க வைத்து அதன் அடுத்த முனையை மூன்றாவது பழத்தின் காசில் பொருத்தவும்.

e9

இப்போழுது முதல் பழத்தின் காசும் கடைசி பழத்தின் ஆணியும் எந்த இணைப்பும் இன்றி இருக்கும்.

e010

மீதமிருக்கும் இரண்டு க்ளிப்புக்கள் ஒன்றை முதல் பழத்தின் காசின் மீதும் இரண்டாவது க்ளிப்பை கடைசிப் பழத்தில் இணைப்பில்லாமல் இருக்கும் ஆணியின் மீதும் இணைக்கவும்.

e012

அந்த இரு க்ளிப்புக்களின் மறு முனைகளில் LED பல்ப் ஐ  இணைக்கவும். பல்ப் எரியும் எரியாவிட்டால் பல்பின் இணைப்புக்களை மாற்றி கொடுத்தால் எரியும்.

e13

அப்பொழுதும் எரியாவிட்டால் இணைப்புக்களை சரிபார்க்கவும். பல்ப் லேசாக எரிந்தால் பழங்களின் அளவுகளையும் அல்லது எண்ணிக்கையையும் கூட்டிப்பார்க்கலாம்.

இதே பரிசோதனையை ஆரஞ்சுப்பழம் போன்ற பிற பழங்களிலும் உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளிலும் செய்து பார்க்கலாம்.

காரணிகள்:

பேட்டரிகள் வேலை செய்யும் என்ற தலைப்பில் விரிவாக காணலாம்.

Images courtesy: stevespanglerscience.com

Advertisements

One Comment Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s