மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை – ஆய்வரிக்கை

இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்

Satellite Image of The Iberian Peninsula Spain and Portugal

ஸ்பெயின் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள Sierra de Atapuerca எனும் மிக சிக்கலான கடின குகை பகுதிகளின் உள்ளுக்கு சென்று மிக கவனமாக தோண்டி எடுக்கப்பட்ட 4 லெட்சம் வருடத்துக்கு முந்திய மனிதனின் எலும்புகளை மரபணு பரிசோதனை செய்து பார்த்ததில், அது நியான்றதல் (Neanderthals) எனும் 1 லெட்சம் வருட பழமை வாய்ந்த மனிதஇன மரபணுவுக்கு முற்றிலும் வேறுபட்டு, சிறிது காலம் முந்தி இதே ஆய்வு குழுவால் சைபீரியாவில் கண்டெடுக்கப்பட்ட 80,000 வருடம் பழமை வாய்ந்த டெனிசொவன்ஸ் (Denisovans) மனித இனத்து மரபணுவுடன் கச்சிதமாக பொருந்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

denisovans

 Image courtesy toptenz.net

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட டெனிசொவன்ஸ் மனித இன எலும்பு இருக்கும் இடத்துக்கும் இதற்க்கு முந்தி சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இதே போன்றதொரு டெனிசொவன்ஸ் மனித இனத்துக்கும் இடையே நான்காயிரம் (4000) மைல் தூர இடைவெளியும் 3 லெட்சம் வருட இடைவெளியும் இருக்கிறதாம்.

man

அது மட்டும் இல்லாமல் சைபீரியா மற்றும் வடக்கு ஸ்பெயின் என இந்த இரண்டு இடத்தில் கண்டு எடுக்கப் பட்ட டெனிசொவன்ஸ் மனிதஇன எலும்புகளுக்கு சொந்தக்காரர்கள் வாழ்ந்த அதே காலத்திலோ அல்லது அதற்க்கு இடைப்பட்ட காலத்திலோ தான் இந்த நியான்றதல் (Neanderthals) எனும் மனித இனமும் பூகோளத்தின் வேறு ஒரு இடத்தில் நடமாடி வாழ்ந்து வந்து இருப்பதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள்…

Atapuerca2

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் 4 லெட்சம் வருடத்துக்கும் முந்திய எலும்பில் உள்ள மரபணு 80 ஆயிரம் வருடத்துக்கு முந்தி வாழ்ந்த மனித மரபணுவுடன் முற்றிலுமாக ஒத்துப் போகிறது ஆனால் இதற்க்கு இடைப்பட்ட ஒரு லெட்சம் வருடத்துக்கு முந்தி வாழ்ந்த நியான்றதல் மனிதஇனத்து மரபணுவுடன் பொருந்தவில்லை என்கிறார்கள்.

01_sima_de_los_huesos_jl_arsuaga_sierra_de_atapuerca

இவ்விரு மனித இனமும் ஆபிரிக்க கண்டத்தில் கண்டறியப்பட்ட ஒரே மனித இனத்தின் மரபணுவில் இருந்து மில்லியன் வருடங்களுக்கு முந்தியே இருவேறாக பிரிந்து காலப்போக்கில் மேற்கு நோக்கி குடிபெயர்ந்து, இலட்சக்கணக்கான வருடத்தில் மரபு அணுவில் மாற்றம் ஏற்பட்டு அவர்களை இன்று நியான்றதல் (Neanderthals) என்றும் மற்றொரு இனம் கிழக்கு ஆசியாவை நோக்கி நகர்ந்து பல இலட்ச வருடங்களில் அவர்களின் உடலமைப்பு தோற்றம், தட்பவெடப்ம், உணவு வகை பழக்கவழக்கம் போன்றவற்றால் அவர்கள் டெனிசொவன்ஸ் (Denisovans) என்றும் மரபணுவில் பெரிய மாற்றத்துடன் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

வடக்கு ஸ்பெய்னில் அமைந்து உள்ள இந்த இடத்தில் 1970 முதல் பல்லாயிரம் வருடம் பழமை வாய்ந்த அறிய பல மனித எலும்புகளை தோண்டி எடுத்து வருவதாகவும், எனினும் Dr. Arsuaga வின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய புதிய முயற்சியில் முழு உடலமைப்பு கொண்ட 28 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு பூரணமாக தொகுக்கப் பட்டு இருப்பதாகவும், ஆக அதே இடத்தில் இன்னும் ஆழமாக ஊடுருவி ஆய்வு செய்து தோண்டி பார்க்கையில் தான் இந்த 4 லெட்சம் வருட பழமை வாய்ந்த தொடை பகுதி எலும்பு கண்டுபிடிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

இதே போன்றதொரு மரபணு ஆய்வை ஓரிரு வருடங்களுக்கு முந்தி செய்திருக்க முடியாத அளவுக்கு இன்றைய தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்து இருப்பதும் இந்த கண்டுபிடிப்பை சாத்தியமாக்கியது என்கிறார்கள் வல்லுனர்கள்…

ஆக இத்தகைய இந்த கண்டுபிடிப்பு 1870 களில் வெறுமனே அனுமானத்தின் அடிப்படையில் டார்வின் சொன்ன மனிதன்….. குரங்கில் இருந்து தோன்றினான் என்ற மனித பரிணாம வளர்ச்சி தத்துவத்தை முற்றிலுமாக பொய்பிக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள்.

எனவே தற்போதைய கண்டுபிடிப்பின் அடிப்படையில் உலகம் பூராவும் உள்ள பள்ளிகூட பாடப்புத்தகத்தை முற்றிலுமாக மாற்றி எழுதவேண்டிய கட்டாயம் உருவாகி இருப்பதாகவும் வல்லுனர்கள் கூறிவருகிறார்கள்.

இப்படிக்கு, நியூ யார்க்கில் இருந்து நாகூர் தீன்.

இது தொடர்பான பிற பதிவுகள்:

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா ?

Advertisements

One Comment Add yours

  1. vijay சொல்கிறார்:

    unmai than anna .. manitha inam kurangilirunthu thondra villai.. athan moothathaiyaridam irunthu thondriyathu…. melaum kalapu yuirinam ahh ga kooda irukalam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s