விந்தை பலூன்கள்

baloon 1

காற்றடைத்த பலூன்கள்  எவ்வளவு எடையை தாங்கும் ?  என்பதை இந்த எளிய பரிசோதனை மூலம் செய்து பார்க்கலாம்.

எச்சரிக்கை: இப்பரிசோதனையை பெரியவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் !

தேவையான பொருட்கள்:

காற்று நிரப்பிய பலூன்கள் குறைந்தது 6

அந்த ஆறு பலூன்களையும் பரப்பி வைக்க கூடிய  பரப்பளவு கொண்ட ஒரு கண்ணாடி, கடினமான ப்ளாஸ்டிக் அட்டை போன்றது  அல்லது ப்ளைவுட். (வளையக்கூடிய தன்மை இருக்ககூடாது என்பது மிக முக்கியம்)

ஒரு டேபிள் ( சப்போர்ட்டுக்காக)

செய்முறை:

baloon 1

ஆறு பலூன்களையும் ஒரே அளவுள்ளதாக ஊதிக்கொள்ளவும். அவற்றை  ஒன்றாக கண்ணாடியை அதன் மேல் அமைக்க வசதியாக ஒரு டேபிளுக்கு அருகில்  பரப்பி வைக்கவும்.

baloon 2

பலூன்கள் விலகிவிடாமல் கவனமாக அவற்றின் மேல் கண்ணாடியை வைக்கவும்.

baloon 3

பலூன்களை சரியாக அமைக்கவும்

baloon 4

டேபிளின் மீது கையை வைத்து பேலன்ஸ் செய்துகொண்டு  ஒவ்வொரு காலாக வைத்து கவனமாக ஏறி நிற்கவும்.

baloon 5

நன்றாக பேலன்ஸ் செய்தவுடன் கைகளை விட்டு விட்டு நின்று பார்க்கலாம்.

baloon 6

கால்களை மேலே தூக்காமல் லேசாக குதித்தும் பார்க்கலாம்.

baloon 7

அப்படி குதிக்கும்போது ஸ்ப்ரிங்க் போல் லேசாக குதிப்பதையும் உணரலாம்.

காரணிகள்:

உங்கள் எடையை கண்ணாடி தாங்கி சமமாக அனைத்து பலூன்களின் மீதும் எடையை பரவச்செய்வதால், உங்கள் எடை பரவலாக்கப்பட்டு ஒவ்வொரு பலூன் மீதும் குறைந்த அளவே அழுத்தம் ஏற்படுவதால் பலூன் வெடிப்பதில்லை. இந்த அடிப்படையில் தான் சிலபேர் ஆணிகள் உள்ள பலகையில் படுத்துக்காட்டுவது. ஆணி செருப்பில் நடப்பது போன்ற வித்தைகளை செய்து காட்டுகின்றனர்.

images nail bed

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s