Pacemaker ஐ தெரியுமா ?

நியூஸ் மேக்கர் தெரியும் அதென்ன பேஸ் மேக்கர் ?

இதய துடிப்பு சீராக இல்லாதவர்களுக்கு  அதை சீராக்க இருதயத்திற்கு அருகில் (உடல் உள்ளேதான்) பொருத்தப்படும் ஒரு சிறிய மின்னனு கருவிதான் பேஸ்  மேக்கர்

pacemaker

சுமார் நான்கிலிருந்து ஐந்து செண்டி மீட்டர் நீள்முள்ள இக்கருவி பேட்டரி மூலம் இயங்குகிறது. ஆரம்ப காலத்தில் அளவில் பெரியதாக இருந்த இதை உடலின் வெளிப்பாகத்தில் அமர்த்தி வயர் கனெக்‌ஷன்கள் இருதயத்திற்கு தரப்பட்டன.

20071029_pacemaker_2

வெளியில் பொருத்தப்பட்ட பேஸ்  மேக்கர்

225px-First_pacemaker_(Siemens-Elema_1958)

1958 ல் தயாரிக்கப்பட்ட முதல் உட்பொருத்தக்கூடிய பேஸ் மேக்கர்

நாளடைவில் அக்கருவி மேம்படுத்தப்பட்டு அளவில் சிறியதாகி உடலில் உட்புறத்தில் இருதயத்தின் அருகிலோ அல்லது வலது புற மார்பின் உட்புறத்திலோ பொருத்தப்படுகிறது.

220px-Pacemaker_GuidantMeridianSR

உள்ளே பொறுத்தபடும் தற்கால பேஸ் மேக்கர்

சுருங்க சொல்வதானால் திரைப்படங்களில் இதயதுடிப்பு நின்றவர்களை இரண்டு இஸ்திரிபெட்டி போல் உள்ளதை கொண்டு நெஞ்சின் மீது வைத்து “ஷாக்” கொடுப்பார்களே ! அதன் அடிப்படையில் இயங்கும் சிறிய கருவிதான் இது.

stock-footage-medical-personnel-using-defibrillator

சினிமா பாணி ?!

இதற்குள் இருக்கும் பேட்டரியை ஒரு சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் அவ்வப்போது மாற்றிக்கொண்டு இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் மிக சொற்பமாக இருந்த பேட்டரியின் வாழ்நாள் தற்போதைய விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியினால் அதன் ஆயுட்காலம் அதிகரித்து இருப்பது இதை பொறுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதலான விஷயமாகும்.

220px-Arne_Larsson

ஆர்ன் லார்சன் (1915-2001)

 ஆர்ன் லார்சன் (1915-2001) என்பவருக்குத்தான் முதன் முதலாக   1958 ஆம் ஆண்டில், ஒரு உட்பொருத்தக்கூடிய பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது. அவருடைய வாழ்நாளில் அவருக்கு மொத்தம் 26 கருவிகள் பொறுத்தபட்டன. 2001 வரை ஆரோக்கியத்துடன் வாழ்ந்த அவர் இதைப்பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தனது வாழ்நாளை செலவழித்தார் என்பது குறிப்பிடத்த்க்கது.

செய்தி மற்றும் புகைபட உதவி:

விக்கிபீடியா மற்றும் biotele.com/pacemakers.htm

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s