நீர்த்துளி நுண்நோக்கி

micro_logo

 

நுண்நோக்கி ! எனப்படும் மைக்ரோஸ்கோப் மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும் முக்கியமான அறிவிய்ல கருவிகளில் ஒன்றாகும்.

மனிதன் இக்கருவியை கண்டுபிடிக்கவில்லையானால் நுண்ணுயிரிகள் வெளிச்சத்துக்கே வந்திருக்காது. அப்படிப்பட்ட ஒரு கருவியின் அடிப்படை செய்ல்பாட்டை கொண்ட ஒரு மாதிரி நுண்நோக்கியை செய்து பார்ப்போமா ?

தேவையான பொருட்கள்:

மரக்கட்டை க்ளிப்புக்கள் மூன்று (துணி காயபோட பயன்படுத்துவது)

ஒரு சிறிய ஒளி ஊடுருவக்கூடிய கடினமான பிளாஸ்டிக் துண்டு ஒன்று

ஒரு சிறிய  மரப்பலகை

சிறிய அட்டைத்துண்டு

சிறிய துண்டு அதிகம் சுருக்கம இல்லாத அலுமினியம் ஃபாயில் ( தற்போது ஃபாஸ்ட் ஃபுட் அல்லது பிரியானி போன்றவை பார்ஸல் செய்து தருகிறார்கள் அதை உபயோகிக்கலாம்.

நன்கு வெளிச்சம் தரக்கூடிய டார்ச் அல்லது மேசை விளக்கு

கண்ணாடி சிலைடு அல்லது அதனளவுக்கு உள்ள முன் குறிப்பட்ட ஒளி ஊடுருவக்கூடிய கடினமான பிளாஸ்டிக் துண்டு ஒன்று.

ஃபெவிபாண்ட் அல்லது ஃபெவிக்விக் போன்ற பிளாஸ்டிக்கை ஒட்டக்கூடிய பசை.

பேப்பர் துளையிட உதவும் பஞ்சிங் மிஷின்

செய்முறை:

சிறிய பிளாஸ்டிக் துண்டை எடுத்து ஒரு முனையிலிருந்து சிறிது தூரம் தள்ளி  பேப்பர் துளையிடும் கருவியின் உதவியால் துளை இட்டுக்கொள்ளவும்.

அப்படி துளையிடுவது சிரமமாய் இருப்பின் இரண்டு அங்குல ஆணியை நெருப்பில் காட்டி சூடாக்கி அதைக்கொண்டு கவனமாக துளை இடவும்.  துளை இட்டபின் துளையின் இருப்பக்கங்களிலும் பிசுறுகள் இல்லாதவாறு நன்கு வழவழப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

துளையிட்ட பிளாஸ்டிக் துண்டை ஒரு மரக்கட்டை கிளிப்பை எடுத்து க்ளிப்பின் மேற்ப்பக்கத்தின் அதாவது கூரான பகுதியின் மேற்பகுதியில் படத்தில் காட்டியவாறு பசையை கொண்டு ஒட்டவும்.

அந்த கிளிப்பை மரப்பலகை துண்டின் ஒரு ஓரத்தில் துளையிட்ட பிளாஸ்டிக் வெளியில் இருக்கும்படி வைத்து கிளிப்பின் அடிப்பாகத்தில் பசையை தடவி ஒட்டிவிடவும். ( பார்க்க படம்)

waterdrop_microscope_2

மற்றொரு கிளிப்பை எடுத்து ஸ்பிரிங்கை கழட்டிவிட்டு இரு மரக்கட்டைகளையும் தனித்தனியாக் பிரித்துக்கொள்ளவும்.

ஏற்கனவே ஒட்டிய க்ளிப்பின் இருபுறங்களிலும் குறுக்காக ஒட்டி வைக்கவும்.

சுமார் மூன்றங்குல நீளமும் இரண்டங்குல அகலமும் கொண்ட அலுமினிய ஃபாயில் துண்டை எடுத்து அதை இரண்டாக் மடித்து பிறகு பிரித்து விடவும். இப்பொழுது அது இரண்டு பாகங்களாக காட்சி அளிக்கும். அதைவிட சற்று நீளமானதாக அட்டைதுண்டை வெட்டி அதண் மேல் அலுமினிய ஃபாயில் துண்டின் ஒரு பாகத்தை பசையை கொண்டு ஒட்டி விடவும்.  அதன் மற்றொரு பாகம் விரித்து மடிப்பதற்கு ஏற்றவாறு இருக்கும்.

இவை அனைத்தையும் படத்தில் காட்டியது போல் அமைத்துக்கொள்ளவும்.

the_waterdrop_2

துளையிட்ட பிளாஸ்டிக் துண்டின் துளையில் ஒரு துளி நீரைவிட்டு அது கீழே விழாதாவாறு அத்துளையின் மீது தொங்கிக்கொண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

கண்ணாடி சிலைடில்  நீங்கள் பெரிதாக்கி பார்க்க விரும்பும் பொருளை வைத்து படத்தில் காட்டியதுபோல் பொருத்திக்கொள்ளவும்.

பொருளுக்கும் நீர்த்துளி கொண்ட பிளாஸ்டிக் துண்டிற்கும் இடையே உள்ள தூரத்தை குறைக்க துளையிட்ட பிளாஸ்டிக் ஒட்டப்பட்டிருக்கும் கிளிப்பின் கீழ்பகுதியில் பிரிக்கப்பட்ட மற்றொரு கிளிப்பின் ஒரு கட்டையை படத்தில் காட்டியவாறு சொருகவும்.

இப்போது கண்களை நீர்த்துளியில் அருகில் கொண்டு சென்று கூர்ந்து கவனிக்கவும்.

பின்வரும் இரண்டு புகைப்படங்க்ளில் ஒன்று ஒரு தேனியின் முன் பாகத்தையும், இரண்டாவது வெங்காயத்தின் தோலின் தோற்றமுமாகும்.

bee_mouthparts_2

படம் 1

onionskin_waterdrop_crop

படம் 2

படத்தில் தெரிவதை விட நேரில் இன்னும் சிறப்பாக தெரியும் வாய்ப்புள்ளது. ஏனெனில் கேமராவை கொண்டு மிகச்சரியாக ஃபோகஸ் செய்து எடுப்பது மிக சிரமமான காரியம்.

Source in English and Images courtesy: micro.sci-toys.com/waterdrop 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s