குர்ஆன் கூறும் அறிவியல் – 2

watercycle700

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக

                                                                                                திருக்குர்ஆன்  86:11 திருப்பித் தரும் வானம் என்று, வானத்திற்கு ஒரு அற்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான். வானம் எதைத் திருப்பித் தரும் என்றால் ஏராளமான விஷயங்களை நமக்கு திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது. கடலிலிருந்தும், நீர் நிலைகளிலிருந்தும் உறிஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக நமக்கு வானம் திருப்பித் தருகிறது. இங்கிருந்து அனுப்புகின்ற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகிறது.

18_radio_waves

திருப்பி அனுப்ப படும் வானொலி அலைகள்

(Image courtesy: oarnorthwest.com)

வானம் திருப்பித் தருகின்ற தன்மை பெற்றிருக்கின்ற காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் ரேடியோ போன்ற வசதிகளை அனுபவிக்க முடிகிறது. மேல்நோக்கி அனுப்பப்படும் செய்திகள் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு திரும்பவும் கீழ் நோக்கி நமக்கே அனுப்பப்படுகின்றன. இன்றைக்கு செயற்கைக்கோள் மூலம் ஒளி பரப்பப்படும் காட்சிகள் நமக்கு இங்கே வந்து சேருகின்றன. மேலே இருந்து திருப்பித் தருகின்ற அம்சத்தோடு வானத்தை இறைவன் படைத்திருக்கிறான். இன்னும் நாம் சிந்திக்கும் போது ஏராளமான விஷயங்களை வானம் நமக்குத் திருப்பித் தருவதை அறியலாம். திருப்பித் தரும் வானம் என்று யாராவது வானத்திற்கு அடைமொழி சொல்வார்களா? அதுவும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்வார்களா? இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது சொல்கிறார் என்றால், நிச்சயமாக இது அவருடைய வார்த்தையாக இருக்க முடியாது; படைத்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்.

Article Copied From: http://www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/149-thirupitharum-vanam/
Copyright © http://www.onlinepj.com

இது தொடர்பான பிற பதிவுகள்:

குர்ஆன் கூறும் அறிவியல் – 1

புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும்

கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் பற்றிய உண்மைகள்

மேகங்கள் பற்றி திருக்குர்ஆன்

புவியியல் பற்றி திருக்குர்ஆன்

வானவியல் பற்றிய உண்மைகள்

Advertisements

3 Comments Add yours

 1. sayan சொல்கிறார்:

  எவ்வளவு பெரிய அபத்தம்

  1. Ebrahim sha சொல்கிறார்:

   தயவு செய்து விளக்குங்கள் சகோதரரே இது பெரிய அபத்தம் என்று !

 2. rajagopal gopal சொல்கிறார்:

  வானம் நமக்கு திருப்பிதரவில்லை. நமதுக்ஷவிஞ்ஞானிகளின் உதவியால்தான் இத்தனையும் நடைபெருகின்றன. ஆகவே நன்றி சொல்லவேண்டியது அவர்களுக்கே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s