பிளாஸ்டிக்கை நீங்களே தயாரிக்கலாம் !

Milk5_Chem_img122

பிளாஸ்டிக் அனைத்துப்பொருள்களிலும் இருக்கிறது. நம் வீட்டு சமையலறையில் கிடைக்கும் பொருள்களை வைத்து ஹோம் மேட் பிளாஸ்டிக் செய்வது எப்படி என்று பார்ப்போமா ?

எச்சரிக்கை: இச்சோதனையை பெரியவர்களின் உதவியுடன் மட்டுமே செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்:

பால்

வினிகர்

(ஒரு கப் பாலுக்கு நான்கு டீஸ்பூன் வினிகர் என்ற அளவில் எடுத்துக்கொள்ளவும்)

பாலை கொதிக்க வைக்க சிறிய பாத்திரம்

கரண்டி

அடுப்பு

பழைய காட்டன் துணி

செய்முறை:

பாத்திரத்தில் பாலை வைத்து கொதிக்க விடவும்.

பால் நன்றாக கொதித்தவுடன் ஒரு ஸ்பூன் வினிகரை ஊற்றவும்.

boil milk

பால் திரிந்து கட்டி கட்டியாக திரண்டு வரும் போது மீதமுள்ள வினிகரையும் ஊற்றி கிளறிக்கொண்டே வரவும்.

நன்றாக ஜெல் போல் வரும்வரை கிளறி ஆற விடவும்.

boil milk later

ஆறிய பின் பழைய காட்டன் துணியை விரித்து கல்வையை அதில் கொட்டி நீரை துணியை சுற்றி கலவையில் இருக்கும் நீரை வெளியேற்றி விடவும்.

SciF_Activity_MilkPlastic_Fig4_img

துணியை பிரித்து கலவையை நன்றாக பிசைந்து உருட்டிக்கொள்ளவும்.

Milk5_Chem_img122

பிளாஸ்டிக் தயார் !

காரணிகள்:

பாலில் புரதச்சத்தின் பல மூலக்கூறுகள் அடங்கியுள்ளன. அதையே கேசீன் (casein) என்று அழைக்கிறோம். பால் சூடாக்கப்பட்டு வினிகர் போன்ற ஒரு அமிலத்தை சேர்க்கும் போது ஏற்படும் வேதியல் மாற்றத்தால் கேசீன்கள் விரிவடைந்து ஒரு நீண்ட சங்கிலி போன்று பினைக்கப்படுகிறது. ஒவ்வொரு கேசீன் மூலக்கூறும் மோனமர் (monomer) ஆகும், அதாவது தனி மூலக்கூறாகும். கேசீன் மோனமர் (monomer) சங்கிலி தொடர் பாலிமர் ஆகும். அந்த பாலிமரை பிரித்தெடுத்து தேவையான வடிவத்தில் வார்த்தெடுக்கலாம். எனவேதான் பாலிலிருந்து பிரித்தெடுக்கபடும் பிளாஸ்டிக் கேசீன் பிளாஸ்டிக் என்று அழைக்கப்படுகிறது. இவ்வகை பிளாஸ்டிக்கே  1900 முதல் 1940 வரை பிரபலமடைந்து இருந்தது.  இதைக்கொண்டே பட்டன்கள், பாசிகள், பக்கிள்ஸ், மைப்பேனா, கைக்கண்ணாடி பிரேம்கள் மற்றும் சீப்பு, பிரஸ்கள் போன்றவை தயாரிக்க்பட்டு வந்தன.

Milk1_Chem_img119

நன்றி: http://www.sciencekids.co.nz/

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s