மின் தேக்கிகள் Capacitors

கண்டென்ஷர் அல்லது கெபாசிட்டர் (தமிழில் மின்தேக்கி), மின்னணு அல்லது மின்சார (எலெக்ட்ரானிக் அல்லது எலெக்ட்ரிக்) சாதனங்களுக்குள் அமைந்து இருக்கும்  சர்க்யூட் எனப்படும் மின்சுற்றுக்களில் அமர்த்தும் உதிரிபாகம் ஆகும்.

capacitor

D.C. capacitor  நேர் மின்சார கெபாசிட்டர்

இதனுடைய முக்கிய வேலை மின் சுற்றுகளில் ஓடும்  மின்சாரத்தை சேமித்து மின்சாரம் தடைபடும் போதோ அல்லது குறையும் போதோ ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வழங்கும்  ஆற்றல் கொண்டது ஆகும்.

ac capacitor

AC capacitors மாற்று மின்சார கெபாசிட்டர்கள்

இதன் வேலை ஒன்றே என்றாலும் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் மாற்று மின்சார சாதங்களில் உபயோகப்படுத்தும் கெபாசிட்டர்களுக்கும், பேட்டரி மூலம் நேர் மின்னசாரத்தில் இயங்கும் மின்னணு சாதன சர்க்யூட்களில் பயன்படுத்தும் கெபாசிட்டர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

types of capacitors

Types of capacitors  பல்வகையான கெபாசிட்டர்கள்

நாம் இங்கு பார்க்கவிருப்பது மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் கெபாசிட்டர்களைத்தான். இதில் பல்வேறு வகையான கெபாசிட்டர்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை;

– எலெக்ட்ரோலைட் கெபாசிட்டர்கள்

– செரமிக் கெபாசிட்டர்கள்

அவற்றின் உள்ளே நிரப்படும் பொருளை பொறுத்து பெயரை அமைத்திருக்கிறார்கள்.

எலெக்ட்ரோலைட் கெபாசிட்டர்களில் எலெக்ட்ரோலைட் திரவமும்; செரமிக் கெபாசிட்டர்களில் செரமிக்கும் ( ஒருவகை மண்) நிரப்பப்பட்டுள்ளன.

இவை இரண்டிற்க்கும் இடையில் உள்ள முக்கிய வித்தியாசம் அவற்றின் இணைப்புத்துருவங்கள் ஆகும். எலெக்ட்ரோலைட் கெபாசிட்டரின் இணைப்புக்கள் பாஸிடிவ் மற்றும் நெகடிவ் துருவங்கள் பார்த்து இனைக்க வேண்டும் அதாவது இணைப்புக்காக வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் இரு கம்பிகளில் அதன் உடல் பகுதியில் குறிக்கப்பட்டுள்ள – அல்லது + குறியை பார்த்து மின் இணைப்பை தர வேண்டும் மாற்றி இணைப்புக்கொடுத்தால் அவை பழுதாகிவிடும்.

அதே வேளையில் செரமிக் கெபாசிட்டர்களுக்கு அந்த தொல்லை இல்லை, எப்படி வேண்டுமானாலும் கொடுத்துக்கொள்ளலாம்.

electrolytic capacitor

Capacitors in a circuit  சர்க்யூட்டில் கெபாசிட்டர்கள்

சரி இவை எப்படி செயலாற்றுகின்றன என்பதை ஒரு பரிசோதனை மூலம் அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

சிறிய பட்டன் செல் 1

எலெக்ட்ரோலைட் கெபாசிடர்

ஒரு எல்.ஈ..டி பல்ப்

செய்முறை:

பட்டன் செல்லையும் கெபாசிட்டரையும்  எடுத்து + , _  பார்த்து படத்தில் காட்டியுள்ளது ஒன்று சேர்த்து சிறிது நேரம் கழித்து பிரித்து எடுத்து விடவும்

join-capa-with-button-cell

எல்.ஈ. டி பல்பை எடுத்து அதில் நீளமாக இருக்கும் கெத்தோட் கம்பியை கெப்பாசிட்டரின் ‘-’  அடையாளம் இடப்பட்ட கம்பிக்கும் அடுத்த கம்பி முனையை மற்றொரு இணைப்புக்கும் கொடுக்கவும். பல்ப் சிறிது நேரம் எரிந்து அணைவதை காணலாம்.

led-glow

இது தொடர்பான பிற பதிவுகள்:

L.E.D. என்றால் என்ன ?

பென்சில் வால்யூம் கண்ட்ரோல்

Advertisements

7 Comments Add yours

 1. kulasai786 சொல்கிறார்:

  அருமையான விளக்கம்.இன்னும் தகவல்களை எதிர்பார்க்கிறேன்.

 2. Srinivasan சொல்கிறார்:

  Nalla Thagavall…

 3. paulrathinam.v சொல்கிறார்:

  nall vilakkam nantri

 4. வனமூர்த்தி.அ சொல்கிறார்:

  மிகவும் பயனுள்ள பதிவு..வாழ்த்துக்கள் தோழரே..

 5. suresh j சொல்கிறார்:

  SUPER . Thks .. good . eapadi sollanumunu theriyala . nanraga uthaviyathu

 6. Gajenthiran சொல்கிறார்:

  மல்டி மீட்டரில் மின் தேக்கி பரிசோதனை செய்வது எப்படி என்று கூற முடியுமா?

 7. rajkarthik சொல்கிறார்:

  நல்ல விளக்கம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s