பென்சில் வால்யூம் கண்ட்ரோல்

ஒலியை வெளிப்படுத்தும் அனைத்து மின்னணு உபகரணங்களிலும் சத்தத்தை  கூட்டி குறைக்கும் ‘வால்யூம் கண்ட்ரோல்’ எனப்படும் ஒரு ஒலி கட்டுப்பாட்டு விசைப்பான் கண்டிப்பாக இருக்கும்.  தற்கால உபகரணங்களில் இவை டிஜிட்டல் முறையில் நவீனப்படுத்தப்பட்டுவிட்டாலும் பழையவற்றில் திருகி போன்ற அமைப்பிலேயே இவை அமைந்திருக்கும். (காண்க படம்)

volume contorl volume contorl knob

படம் – 1

உட்புறத்தோற்றம்                                             வெளிப்புறத்தோற்றம்

இதன் உட்புறப்பூச்சு கிராபைட்டு எனப்படும் மூலப்பொருள் முக்கிய பொருளாக கையாளப்படுகிறது. இது நம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பென்சிலிலும் உள்ளது. அப்பென்சிலை கொண்டு மாதிரி வால்யூம் கண்ட்ரோலை எப்படி தயாரிப்பது என்பதை இங்கே காணலாம்.

digital volume control

படம்-2. நவீன டிஜிட்டல் வால்யூம் கண்ட்ரோல் சர்க்யூட்

பென்சில் வால்யூம் கண்ட்ரோல்:

தேவையான பொருட்கள்:

பென்சில்

வெள்ளைக்காகிதம்

முதலை வாய்க்கிளிப்புக்கள் ஒரு ஜோடி(crocodile clips)

L.E.D பல்ப்

9 வால்ட் சதுர வடிவ பேட்டரி

மல்டி மீட்டர் (விருப்பப்டின்)

FSJMDR8FYNTAGSC.SQUARE2

படம் – 2 அ

செய்முறை:

முதலில் எல்.ஈ.டி பல்பை எடுத்து அதில் நீளமாக உள்ள அனோட் கம்பியை லேசாக வளைத்து வைத்துக்கொள்ளவும். (படம்-3 )

pencil vc 7

படம்-3

அதன் மறு முனையில் முனையில் சிவப்பு நிறமுள்ள முதலைவாய்க்கிளிப்பை இணைக்கவும். (படம்-4 )

pencil vc 5

படம் -4

பேட்டரியை எடுத்து அதன் நேர் (+) முனையில் சிகப்பு வண்ணம் உடைய க்ளிப்பை இணைக்கவும் அதன் மறுமுனையில் கறுப்பு வண்ணக்கிளிப்பை இணைக்கவும். (படம்-5 )

flat-bat-conection

படம் – 5

இப்பொழுது சிவப்பு வண்ண கிளிப்பின் ஒரு முனையில் பேட்டரியும் மறு முனையில் எல்.ஈ.டியின் ஒரு கம்பியும் இணைக்கப்பட்டிருக்கும்.

இரண்டாவது கருப்பு நிற கிளிப் வயரில் ஒரு முனை பேட்டரியின் எதிர் முனை (-) துருவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். அதை அப்படியே வைத்துவிட்டு..

அடுத்ததாக

ஒரு சிறிய வெள்ளை காகிதம் (ஒரு செ.மீ அகலம்; ஐந்து செ.மீ.அகலம்) எடுத்து அதில் பென்சிலால் நன்றாக அழுத்தி காகிதம்  முழுவதையும் அதன் பூச்சால் நிரப்பவும். (படம்-6,7 )

pencil vc

படம் – 6

pencil vc 2

படம் – 7

பென்சிலால் தோய்த்த காகிதத்தின் ஒரு முனையில் காலியாக இருக்கும் க்ருப்பு கிளிப்பின் ஒரு முனையை நன்றாக கவ்வி பிடிக்கும்படி அமைக்கவும். (படம்-8,9 )

pencil vc 4

படம் – 8

எல்.டி.யின் வளைத்த கம்பியை காகிதத்தின் மற்றொரு முனையில் அழுத்தி பிடிக்கவும். பல்ப் எரிகிறதா என்று கவனிக்கவும்.

pencil vc 8

படம் – 9

பல்பை சிறிது சிறிதாக நகர்த்திக்கொண்டே வரவும். நிகழ்வுகளை கவனிக்கவும்.  மேலும் விபரங்களுக்கு வீடியோவை பாருங்கள்;

காரணிகள்:

கிராபைட்டு எனப்படும் கரி போன்ற மூலப்பொருள் ஒரு மின் தடையாக செயல் படுகிறது.  தூரம் அதிகமாக அதாவது பரப்பு அதிகமாக அதிகமாக மின் தடையும் அதிகரிக்கிறது எனவே குறைந்த அளவு மின்சாரம் பாய்வதால் பல்ப் குறைந்த ஒளியுடன் எரிகிறது. தூரம் குறையக்குறைய மின் தடையும் குறைவதால் அதிக மின்சாரம் கிடைப்பதால் பல்ப் அதிக வெளிச்சத்துடம் ஒளிர்கிறது.

Source in English :www.instructables.com/id/Make-a-Pencils-Lead-Potentiometer-Experimentatio/?ALLSTEPS

இது தொடர்பான பிற பதிவுகள்:

எல்.ஈ.டி L.E.D.என்றால் என்ன ?

Advertisements

5 Comments Add yours

 1. ரௌத்திரன் சொல்கிறார்:

  தமிழில் இப்படிப்பட்ட ஒரு அருமையான இணையதளத்தைத் தான் தேடிக்கொண்திருந்தேன் இப்போது கிடைத்துவிட்டது மிகவும் அருமை நண்பரே தொடர்ந்து இப்படிப்பட்ட தகவல்களை தந்துக்கொண்டே இருங்கள் மிகவும் எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி இருக்கிறது மீண்டும் ஒருமுறை நன்றி

 2. R.mathivanan சொல்கிறார்:

  thamizhil seyal vilakkam thanthamaikku mikka nandri.

 3. R.mathivanan சொல்கிறார்:

  arumaiyana seyal.

 4. வனமூர்த்தி.அ சொல்கிறார்:

  உங்களின் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாகவும், யாவரும் எளிதில் புரியும்படியும் உள்ளது..மிக்க நன்றி..

 5. PAVITHRA சொல்கிறார்:

  VERY USEFUL

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s