L.E.D. என்றால் என்ன ?

RBG-LED

பட உதவி:en.wikipedia.org/wiki/File:RBG-LED.jpg

Light-Emitting Diode

எனப்படும் சிறிய மின்னனு பொருள் தமிழில் ஒளிரும் அல்லது ஒளிகாலும்இருமுனையம் என அழைக்கப்படுகிறது. (Di என்ற வார்த்தைக்கு இரு அல்லது இரட்டை என்று பொருள்)

 இந்த முனையங்கள் வழியாக  மின்னோட்டம் பாயும் பொழுது இது ஒளியை வெளியிடும். இந்த இருமுனைய  குறைகடத்தியினால்  ஆனது. 

இவை இன்றைய மின்னனு தயாரிப்புக்களில்  காட்டிகளாக (indicator lights) ஆக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின்சக்தியை எடுத்துக்கொண்டு அதிக வெளிச்சத்தை வெளியிடுவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது. ஆரம்ப காலத்தில் குறைந்த அடர்த்தி கொண்ட சிகப்பு வெளிச்சத்தை வெளியிடும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட இது தற்காலத்தில் மிக நவீனமாக்கப்பட்டு அதிக வெளிச்சத்துடன் கூடிய பலவண்ணங்களை உமிலக்கூடியவையாக மட்டுமின்றி புற ஊதாக்கதிர், அகச்சிவப்பு கதிர்களை வெளியிடக்கூடிய எல்.ஈ.டி.க்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

அன்றாடம் நம் கைகளில் தவழும் டீவி ரிமோட் கண்ட்ரோலின் முன்பக்க முனையில் அது புற ஊதா கதிர்கள் மூலம் டீவி யை இயங்க வைக்கிறது.

LED_symbol.svg

மின்னனு சர்க்யூட்களில் ஒளிகாலும்இருமுனையத்தை மேற்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது.

இதன் இரு முனையங்களும் ஆனோடு மற்றும் கேத்தோட் என்று அழைக்கபடுகின்றன. ஆனோடு முனையில் + எனப்படும் நேர்முனை (பாசிடிவ்)மின் இணைப்பும் கேத்தோட் முனையில் – எனப்படும் (நெகடிவ்) மின்இணைப்பும் தரப்பட வேண்டும்.  இணைப்புக்கள் மாற்றப்பட்டால் வேலை செய்யாதது மட்டுமின்றி அது முற்றிலும் செயலிழந்து போகவும் வாய்ப்புக்கள் உள்ளன.

450px-LED,_5mm,_green_(en).svg

படங்கள் உதவி:en.wikipedia.org/wiki/File:RBG-LED

பின் வரும் பரிசோதனை செய்து பாருங்கள்:

தேவையான பொருட்கள்:

  1. 9 volt.   சதுர வடிவான மின்கலம் :  9 volt flat type battery
  2. L.E.D   பல்ப் ( பழைய விளையாட்டுப் பொருள்களில் இருந்து பெறலாம்) அல்லது அருகில் உள்ள மின்னனு பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்கலாம்.
  3. சிறிய வயர் துண்டுக்கள்

செய்முறை:

படத்தில் காட்டியுள்ள படி + , – இணைப்புக்களை கவனித்து பேட்டரியில்  LED பல்பை இணைக்கவும்.

led

+ மற்றும் – இணைப்பு

led

இணைப்புக்கொடுக்கும் விதம்

led connection circuit

அதற்கான மாதிரி வரைபடம் (simple circuit)

இந்த பதிவை இன்னும் மேம்படுத்த உங்களது    உங்கள் கருத்துக்களையும் கேள்விகளயும் கீழே இருக்கும் காமெண்ட் பகுதியில்   பதிவு செய்யவும்..

Advertisements

2 thoughts on “L.E.D. என்றால் என்ன ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s