நீங்கள் எந்தப் பக்கம் ?

left or right

Image courtesy:lefthandersday.com

இது என்ன கேள்வி ? இதற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் ?  தொடர்ந்து படித்து விட்டு பரிசோதித்து பாருங்கள் !

தேவையான பொருட்கள்:

 • பேனா அல்லது பென்சில்
 • ஒரு குறிப்பேடு அல்லது வெள்ளை காகிதம்
 • ஒரு சிறிய குழாய் போன்ற ஒன்று அல்லது ஒரு செய்தித்தாளை சுருட்டி உருளை போல் ஆக்கிக்கொள்ளலாம்
 • ஒரு கப்பில் தண்ணீர்
 • ஒரு சிறிய பந்து அல்லது எறிந்து பார்க்க கூடிய  ஒரு மென்மையான பொருள்

வழிமுறைகள்::

 • காகித்தில் கோடிட்டு இரு பிரிவுகளாக்கி ஒரு பகுதியில் வலது மற்றொரு பகுதியில் இடது என எழுதிக்கொள்ளுங்கள்
 • பின்னால் சொல்லப்படும் செய்கைகளை செய்தவுடன் உங்கள் உடலின் எந்தப்பக்க உறுப்பை பயன்படுத்து அச்செயலை செய்தீர்களோ அந்தப்பக்கத்தில் அதை எழுதிக்கொள்ளுங்கள்
 • அனைத்து பரிசோதனைகளையும் செய்து முடித்த உடன் உங்கள் உடல் எந்தப்பக்கம் மேலாதிக்கம் செய்கிறது என்று கண்டறியுங்கள், சிந்தியுங்கள்.

eye blink smiley

கண்கள்:

 1. நீங்கள் கண்ணடிக்க அதாவது சிமிட்ட எந்த கண்களை உபயோகிக்கிறீர்கள் ?
 2. பேப்பர் குழாயை எடுத்து அதில் ஒரு கண்ணை வைத்து பார்க்க எந்த கண்ணை உபயோகிக்கிறீர்கள் ?
 3. இரண்டு கைகளையும் உங்கள் கண்களுக்கு நேராக நீட்டிக்கொண்டு இரண்டு கைகளின் ஆட்காட்டி விரலையும், பெரு விரலையும் சேர்த்து ஒரு முக்கோண வடிவ துளையாக்கிக் கொள்ளுங்கள். துளையை இயன்ற வரை சிறிதாக்கிக்கொள்ளவும். அத்துளையின் வழியே அறையில் உள்ள ஒரு சிறிய பொருளை இரு கண்களாலும் ஃபோக்ஸ் செய்து பார்க்கவும். இப்போது ஒரு வலது கண்ணை மூடிவிட்டு இடது கண்ணால் பார்க்கவும், பிற்கு இடது கண்ணை மூடிவிட்டு வலது கண்ணால் பார்க்கவும். வலது கண்ணால் பார்க்கும் போது அப்பொருளின் இட மாற்றம் தெரிந்தால் ‘வலது’ என்றும் இடது கண்ணால் பார்க்கும் போது பொருள் இடமாற்றம் தெரிந்தால் ’இடது’ என்று எழுதிக்கொள்ளவும்.

lefthanded

Image courtesy:news.softpedia.com

கைகள்:

 1. எழுதுவதற்கு நீங்கள் எந்தக் கையை உபயோகிக்கிறீர்கள் ?
 2. தண்ணீர் நிரப்பிய கப்பை எடுங்கள். எடுப்பதற்கு எந்த கையை உபயோகிக்கிறீர்கள் ?
 3. பந்தை எடுத்து வீசுங்கள், வீச எந்த கையை உபயோகிக்கிறீர்கள் ?

jump

Image courtesy:wired.co.uk –

கால்கள்:

 1. சிறிது தூரம் ஒடி தாண்டுங்கள். தாண்டும் போது எந்தக்காலை முன்வைக்கி்றீர்கள் ?
 2. பந்தை கீழே போட்டு லேசாக உதையுங்கள். எந்த கால்களை கொண்டு உதைத்தீர்கள் ?

என்ன நிகழ்கிறது ?

எந்தப்பக்கம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது ?

நீங்கள் இடது கைப்பழக்கம் உள்ளவரா ? வலது கையா ? வலது காலா ? அல்லது இடது காலா ? எந்தப்பக்கத்து கண்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது ?

உலக மக்களில் 90 % பேர் வலது கைப்பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.  இதற்கான முழுக்காரணத்தை விஞ்ஞானிகள் இதுவரை முழுமையாக கண்டறிய முடியவில்லை !  மொழிக்காக நாம் எந்த பக்கத்து மூளையை உபயோகிக்கிறோமோ அதை பொறுத்துதான இடது வலது அமைகிறது என சிலர் கருதுகின்றனர். நமது வலது பக்க மூளைப்பாகம் இடது பக்க உறுப்புக்களையும், இடது பக்க மூளைப்பாகம் வலது பக்க உறுப்புக்களையும் கட்டுப்படுத்துகின்றன. 90 சதவீத மக்களின் மொழியை இடது பக்க மூளையே கட்டுப்படுத்துகிறது.

இன்னும் சிலர், இது கலாச்சார பின்னனியில் ஏற்ப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர். வலது (right) சரி என்பதாலும்(left) இடது என்பது பலவீனமானது என்பதாலும் இருக்கலாம் என்கின்ற காரணத்தை முன் வைக்கின்றனர்.  சமூகத்தில் இது ஒரு பழக்கமாகிவிட்டதாலும், கைத்தொழிகளை கற்ப்பிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் வலது கைகளை உபயோகப்படுத்துவதாலும், கருவிகள் வலது கைகளால் உபயோகிக்கும் வகையில் தயாரிப்பதாலும் இருக்கலாம் என்றும் கூறுவதுண்டு.

80 சதவீத மக்கள் வலது கால்களையும், வலது கண்களையும் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். வலது கைப்பழக்கத்தோடு ஒப்பிடுகையில் இதன் சதவீதம் சற்று குறைந்து காணப்படுவதற்கு  நமது உடலுக்கு கைகளை விட அவற்றை உபயோகப்படுத்துவதற்கான சுதந்திரம் அதிகம் இருப்பதே இதற்கு காரணமாகும்.மற்றொரு வகையில் சொல்லுவதானால், கண்களையும் கால்களையும் விட கைகளை நாம் அதிகமாக பழக்கப்படுத்தி இருப்பதே காரணமாகும் என்றும் கூறுவதுண்டு.

அதே போல், வலது கையையும் இடது காலையும், இடது கையையும் வலது உபயோகிப்பவர்கள் இருப்பது கண்டும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மற்றும் இரண்டு கைகளாலும் அனைத்து வேலைகளை செய்யக்கூடியவர்களும், இருகைகளால் ஒரே நேரத்தில் வேலை செய்பவர்களை நாம் காண முடிகிறது.

உங்களது நண்பர்களின் பழக்கங்களையும் ஆராய்ந்து பார். இடது கைகளை உபயோகிப்பதால் அதிக நன்மைகள், குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு அதிக பயனளிக்கின்றதா ? என்று ஆராயலாம்.

உனது நண்பர்களில் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் இருப்பின் அவர்களின் அனுபத்தை தெரிந்து கொள்ளலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s