கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் பற்றிய உண்மைகள்

ocean_zones_01

Image Courtesy: oceanexplorer.noaa.gov

அமெரிக்காவின் கொலோரடாவிலுள்ள பவுல்டர் நகரில் அமைந்திருக்கும் கொலோரடா பல்கலைக்கழக்கத்தில் புவியியல் அறிவுகளின் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் வில்லியம் ஹே அவர்களை தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். அவர் முன்பு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மியாமியிலுள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் உள்ள ரோசன்ஸியல் பள்ளியிலுள்ள கடல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலின் தீன் ஆகவும் முன்பு பணியாற்றியுள்ளார்.  திருக்குர்னிலும் ஹதீதிலும்

Facts About Seas & Oceans

காணப்படும் அறிவியல் அத்தாட்சிகள் குறித்து நாம் செய்யும் ஆராய்ச்சி தொடர்பான ஒரு சிலவற்றை நமக்குக் அவர் காண்பிக்கும் வகையில் அவருடன் ஒரு கடல் பயணம் செய்தோம். கடலின் மேற்பரப்பு, மேல் கடலுக்கும் கீழ் கடலுக்கும் இடையிலுள்ள தடுப்பு, பெருங்கடல் தரை மற்றும் கடல் புவியியல் ஆகியன பற்றி அவரிடம் பல கேள்விகள் கேட்டோம். பல்வேறு வகையான கடல்களுக்கும் மற்றும் நல்ல நீர் நதிகளுக்கும் இடையேயுள்ள கலவைநீர் தடுப்புக்கள் பற்றியும் பேராசிரியர் ஹே அவர்களிடம் நாம் கேட்டோம். நாம் கேட்ட ஒவ்வொன்றிற்கும் விபரமான பதிலை அன்புடன் அவர் வழங்கினார்.

Globe Indicating Water Temperatures in FarenheitFig. 13.1

பல்வேறு விதமான கடல்களுக்கிடையேயுள்ள தடுப்புக்களைப் பொறுத்தவரையில், இந்த நீர்நிலைகள் நம் கண்ணுக்கு ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், அவைகள் ஒரே மாதிரியானவை அல்ல மாறாக, அவைகளின் உப்புத்தன்மை, சீதோஷ்ண நிலமை, அடர்த்தி ஆகியவற்றின் ஏற்றத்தாழ்வுகளில் வித்தியாசப்படுகின்றன என்று அவர் விளக்கினார். இந்த ஸ்லைடில் காணப்படும் வெள்ளைக் கோடுகள் இரண்டு கடல்களுக்கிடையே இருக்கும் தடுப்புக்களைக் காட்டுகின்றன.
ஒவ்வொரு தடுப்பும் இரண்டு கடல்களை பிரிக்கின்றது. அக் கடல்கள் அவைகளின் சீதோஷ்ண நிலைமை, உப்புத்தன்மை, அடர்த்தி, கடல் நீர் உயிரியல், பிராண வாயு கரையும் தன்மை ஆகியவற்றில் வித்தியாசப்படுகின்றன. தாங்கள் காணும் இப்படத்தை பல நூற்றுக் கணக்கான கடல் ஆய்வு மையங்களை நிறுவி ஆராய்ந்த பிறகு அறிவியலாளர்கள் 1942ம் ஆண்டு இப்படத்தை பெற்றார்கள். இப்படத்தில் மத்திய தரைக்கடலுக்கும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையேயுள்ள தடுப்பை நாம் காண்கின்றோம்.

இந்தப் படத்தின் மத்தியில் நாம் ஒரு வண்ண முக்கோணத்தை காண்கின்றோம். (படம் இப்புத்தகத்தில் கொடுக்கப்படவில்லை.) இது கிப்ரால்டர் பாறையின் அடியாகும். இயல்பில் சாதாரண மனிதக் கண்கள் அவைகளை கண்டுணர முடியாவிட்டலும், இரண்டு நீர் நிலைகளுக்குமிடையே உள்ள வண்ண தடுப்புக்களை (இப்படத்தில்) காணலாம். செயற்கைக் கோள் படக்கலையாலும் தொலை உணர்வு தொழில் நுட்பத்தின் உதவி கொண்டும்தான் இதை காண முடியும். பல் வேறு நீர் நிலைகளின் தனிப்பட்ட உஷ்ணத் தன்மைகளை உபயோகித்து இந்தப்படத்தை செயற்கோளால் எடுக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் கடல்கள் பல்வேறு வண்ணங்களாக தோன்றுகின்றது. (இப்புத்தகத்தில் தகுந்த படங்கள் காண்பிக்கப்படவில்லை. உதாரணத்திற்கு இங்கே வெளிர் ஊதா, கரு ஊதா மற்றும் கருப்பு நிறங்களை நாம் காண்கின்றோம். மற்ற நீர் நிலைகள் பச்சை நிறத்தை காட்டுகின்றன. கடலின் மேல்மட்டத்திலுள்ள சீதோஷ்ண வித்தியாசத்தை பல்வேறு நிறங்களால் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. ஆயினும், இந்தப் பெருங்கடல்களும் கடல்களும் நம்முடைய சாதாரணக் கண்களுக்கு நீல நிறமாகவே தோன்றும் என்பது நமக்குத் தெரியும். இந்த தடுப்புக்கள் அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலமும் நவீன தொழில் நுட்பத்தின் மூலமுமே காணவும் உணரவும் முடியும். அல்லாஹ் திருக்குர்ஆனில் நமக்குத் தெரிவிக்கின்றான்:

அவனே இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே தடுப்பு இருக்கின்றது அதை அவை மீறமாட்டா. (திருக்குர்ஆன் 55:19-20)

பாராம்பாரியமாக இந்த வசனத்திற்கு இரண்டு பெரும் விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. கடல்கள் சந்தித்து ஒன்றோடொன்று கலக்கின்றன என்பதுதான் மரஜ என்ற வார்த்தையின் நேரடி அர்த்தம் என ஒரு கருத்து கூறுகின்றது. ஆனால் திருக்குர்ஆனோ இதோடு நின்று விடாமல் அவைகளுக்கிடையில் தடுப்பு உள்ளது என்று கூறுகின்றது இதன் அர்த்தம் என்னவெனில் இந்த தடுப்பானது கடல்கள் ஒன்றுக்கொன்று ஊடுருவி விடாமலோ அல்லது ஒன்றுக்கொன்று வெள்ளத்தால் மூடி விடாமலோ தடுக்கின்றது என்பதேயாகும்.

இரண்டு கடல்களும் சந்திக்கின்றது என்று வசனம் கூறுகின்றது. அந்த நிலையில் ஒன்றுக்கொன்று ஊடுருவி விடாமல் இருக்கும் வகையில் எப்படி அங்கே தடுப்பு இருக்க முடியும் என்று முதல் கருத்தின் ஆதரவாளர்கள் கேட்கின்றார்கள். கடல்கள்; சந்திப்பதில்லை என்று முடிவு செய்து கொண்டு மரஜ என்ற வார்த்தைக்கு வேறு அர்த்தத்தை தேடுகின்றார்கள். ஆனால் இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு தேவையான அனைத்து தகவலையும் நவீன விஞ்ஞானம் நமக்குத் தருகின்றது. மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாட்டிக் பெருங்கடல் ஆகியவற்றை காண்பிக்கும் இந்தப் படத்தில் நாம் காண்பது போன்று கடல்கள் ஒன்றுக்கொன்று சந்தித்துக் கொள்கின்றன. அங்கே சாய்வான தடுப்பு ஒன்று இருந்த போதிலும், இந்த தடுப்பின் ஊடாக ஒரு கடலின் நீர் கடந்து மற்றொரு கடலுக்கு செல்கின்றது. ஆனால் ஒரு கடலிலிருந்து மற்றொரு கடலுக்கு நீர் செல்லும் போது அதனுடைய தனித்தன்மைகளை இழந்து மற்ற கடலுடன் சங்கமாகி விடுகின்றது. இந்த இரண்டு நீர் நிலைகளும் கடந்து சென்று சங்கமிக்கும் ஒரு இடமாக இந்த தடுப்பு செயல்படுகின்றது எனலாம்.

நவீன இஸ்லாமிய அறிவியல் ஆராய்ச்சிக்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு ஆகும். திருக்குர்ஆனின் தன்னிகரற்ற தன்மையை நிரூபிப்பதற்கு நவீன தொழில் நுட்பத்தை இது போன்று உபயோகிக்க முடியும். இந்த வசனத்தைப் பற்றியும் மேலும் பல வசனங்கள் பற்றியும் பேராசிரியர் ஹே அவர்களுடன் ஒரு நீண்டதொரு உரையாடலை நாம் நடத்தினோம். உங்களிடம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட வேதம் உள்ளது. தற்போது உள்ள தொழில் நுட்பங்களும் விஞ்ஞான கருவிகளும் அப்போது இல்லாததால் அக்காலத்தில் எந்த மனிதனும் அறிந்திட இயலாத இப் பிரபஞ்சத்தின் மிக நுண்ணிய ரகசியங்களை இந்த வேதம் அறிவிக்கின்றது. இந்த வேதம் பற்றி தங்களின் கருத்து என்ன என்று பேராசிரியர் ஹே அவர்களிடம் நாம் கேட்ட போது அவர்:

இது போன்ற தகவல்கள் புராதான வேதமான திருக்குர்ஆனில் இருப்பது மிகவும் சுவாரசியமானது. ஆனால் அவைகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதை தெரிந்து கொள்ளும் மார்க்கம் என்னிடமில்லை. ஆனால் அவைகள் அதில் உள்ளன என்பதுதான் மிகவும் சுவாரசியமான விசயமாகும். அதைக் (-சில பத்திகளின் அர்த்தத்தை) கண்டுபிடிக்கும் பணி நடந்து கொண்டிருக்கின்றது.

இது ஒரு மனித மூலத்திலிருந்து வந்திருக்க முடியும் என்பதை தாங்கள் தீவீரமாக மறுக்கின்றீர்கள். அவ்வாறாயின் அந்த தகவலின் ஆதார மூலம் எதுவென்று தாங்கள் கருதுகின்றீர்கள் என்று அவரிடம் கேட்ட போது அவர்:

நன்று, அது இறைவனிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும்|

உண்மையில், நபி முஹம்மது (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை நிரூபிப்பதற்காக அல்லாஹ்வினால் அருளப்பட்ட தெய்வ ஞானமாகும் இது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நபிக்கும், மக்கள் அவரின் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒன்று (-அற்புதம்) கொடுக்கப்பட்டிருப்பார். எனக்கோ (அத்தகைய அற்புதமாக) அல்லாஹ்விடமிருந்து வேத வெளிப்பாடு கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நியாயத்தீர்ப்பு நாளில் என்னைப் பின்பற்றுபவர்கள் மிகவும் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என நாம் நம்புகின்றேன்.

இந்த வேத வெளிப்பாடு அதனுடைய சொந்த அற்புதத்தை கொண்டுள்ளது. மனித இனத்திற்கு அத்தாட்சியாக இறுதி நாள் வரை அது இருந்து கொண்டிருக்கும்.

இது தொடர்பான பிற பதிவுகள்:

கடல்களும் ஆழ்கடல்களும்

(source: http://www.it-is-truth.org/it-is-truth/IslamAndScience.shtml)

தமிழில்: தமிழ் இஸ்லாம்.காம்

Advertisements

2 Comments Add yours

  1. Naseem khan சொல்கிறார்:

    Inshallah give more information to Quran

  2. Naseem khan சொல்கிறார்:

    Inshallah give more information to Quran

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s