ஃபிலிம் குப்பி ராக்கெட்

வெடி மருந்தில்லாமல் உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யக்கூடிய ராக்கெட் இதோ !

film_rocket

Image courtesy: sciencebob.com 

தேவையான பொருட்கள்:

ஒரு காலி புகைப்பட ஃபிலிம் டப்பா
சமையல் சோடா (சோடியம் பைகார்பனேட்)
வினிகர் ( வினிகர் டிபார்ட்மெண்ட் கடைகளில் கிடைக்கும்)
ஒரு ஐஸ்கிரீம் குச்சி அல்லது தேக்கரண்டி
ஒரு தட்டு, சாசர்அல்லது  தட்டு
கண் பாதுகாப்பு குகண்ணாடி ( சூரிய கண்ணாடி அல்லது பாதுகாப்பு கண்ணாடி)
ஒரு வயது வந்தோர்.

images (2)

செய்முறை:

கண்கள் பாதுகாப்பிற்காக கண் கண்ணாடியை அணிந்து கொள்ளவும்.

ஃபிலிம் டப்பாவில்  5 மில்லி மீட்டர் அளவு ஆழத்திற்கு  வினிகரை ஊற்றவும்.

images

Image courtesy: sites.google.com

தேக்கரண்டி அல்லது ஐஸ்கிரீமை குச்சியை பயன்படுத்தி சமையல் சோடாவை அதில் இட்டு உடனே மூடியை இறுக்கமாக மூடியை மூடவும்.

உடனே தட்டின் மேல் தலைகீழாக அதாவது ஃபிலிம் டப்பாவின் மூடி தட்டின் மேல் படும்படி வைத்துவிட்டு சிறிது தூரம் தள்ளி நின்று கவனிக்கவும்.  தட்டின் மேற்பரப்பு சமமாக இருத்தல் அவசியம்.

images (1)

சில வினாடிகளில் உங்கள் ஃபிலிம் டப்பா  ராக்கெட் சத்தத்துடன் வெடித்து டப்பா மேலெலும்பி செல்வதை காண்பீர்கள்.

தட்டில் இருக்கும் மூடியை கவனித்தீர்களானால் அதன் மேல் மீதமான கலவை நுரையுடன் இருப்பதை காணலாம்.

காரணிகள்:

வினிகருடன்  சமையல் சோடா சேரும்  போது, வேகமாக இரசாயன எதிர்வினை ஏற்படுகிறது.அதாவது இரண்டும் சேரும் போது கார்பன் டை ஆக்சைடு வாயு (C02)  உருவாகிறது.

கார்பன் டை ஆக்சைடு வாயு அதிகமாக அதிகமாக டப்பாவின் உட்புறத்தில் அழுத்தம் ஏற்ப்பட்டு வாயு வெளியேறும் முயற்சியில் டப்பாவின் மூடி அழுத்தத்துடன் தள்ளப்பட்டு டப்பா சத்தத்துடன் மேல்நோக்கி செல்கிறது.

இது தொடர்பான பிற பதிவுகள்:

ஊதாமல் பெரிதாகும் பலூன் !

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s