உங்கள் எடை என்ன ?

weight

பட உதவி: easternshoremedicalweightloss.com

நீங்கள் சமீபத்தில் உங்கள் எடையை பார்த்திருந்தாலும் இந்த கேள்விக்கு விடையளிப்பது அத்தனை சுலபமில்லை ! ஒரு நாளில் உங்கள் எடையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா ? மாலையில், ஒரு மணி நேரத்தில் ஏன் பத்து நிமிடங்களில் கூட உங்கள் எடையில் மாற்றம் ஏற்படலாம் !

நமக்கு தெளிவாக தெரிகின்ற உணவு உட்கொள்ளுதல், நீரருந்துதல் போன்றவற்றை தவிர்த்து வேறு பல காரணங்களால் மெதுவாக, நாம் உணர முடியாதவாறு, அடிக்கடி இது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இதை முதன் முதலாக சுமார் 300 வருடங்களுக்கு கண்டுபிடித்தவர் சாண்டோரியஸ்* என்பவராவார். அவர் ஒரு பெரிய தராசு ஒன்றை தாயாரித்து அதிலிருந்து கொண்டே தன்னிடம் நிகழும் எடை மாற்றங்களை ஆராய்ந்தார். அதன் முடிவு  மிகவும் ஆச்சரியமிக்கதாக இருந்தது. இதை அறிந்த அவ்வூர் மக்கள் திரளாக அவர் ஆராய்ச்சி கூடத்துக்கு வந்து அவர் உடல் எடையில் ஏற்படும் மாற்றங்களை நேரில் கண்டார்கள். அந்த மாற்றங்கள் மதிப்பிடக்கூடியதாக இருந்தது. ஒரு இரவில் ஏறக்குறைய ஒரு கிலோ எடையை இழந்திருந்தார்.

Sanctorius (Sanctorio Sanctorio) (1561-1636) Italian physician and physiologist, friend of Galileo.  Shown here seated in his balance (a steelyard) in which he could eat and sleep.  He was the first to perform experiments on metabolism.  From Ars de statica medicina by Sanctorius (Leyden, 1711).(Image courtesy: bridgemanart.com)

ஒருவரது எடை குறைய பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நம் உடலில் உள்ள கரிமில வாயு அதாவது  கார்பன் டை ஆக்ஸைட்  குறைவதால் 24 மணி நேரத்தில் சுமார் 75 லிருந்து 80 கிராம் வரை எடை குறைகிறது. நாம் வெளிவிடும் மூச்சுக்காற்றில் வெளியேறும் நீரோடு ஒப்பிட்டால் இது மிகவும் சொற்பமே ! அதாவது நாம் நுரையீரல் வழியாக வெளிவிடும் மூச்சுக்காற்று வழியாக வெளியேறும் நீரின் அளவு சுமார் 150 முதல் 500 கிராம் ஆகும்.

நம் கண்களால் காணும்படி சொட்டு சொட்டாக வடியாவிட்டாலும்,  வியர்வையால் வெளியேறும் அளவு இதை விட அதிகம் ஆகும்.நம் உடலில் உள்ள எண்ணற்ற, நம் வெறும் கண்களால் பார்க்க இயலாத வியர்வை சுரப்பிகளிலிருந்து வியர்வை வெளியேறுகிறது. காற்று வரண்டு இருக்கும்போது வியர்வை துளியாக வெளியேறும் முன்பே காற்றில் ஆவியாகி விடுகிறது. எனவே நம் தோல் உலர்ந்து காணப்படுகிறது. குளிர் காலநிலையில்  250 முதல் 1700 கிராம் தண்ணீர் வரை தோல் மூலம் ஆவியாக வெளியேறுகிறது.

வரண்ட, வெப்பமான சூழ்நிலையில் கடினமாக உடல் உழைப்பு செய்யும்  ஒருவரது உடலிலிருந்து சுமார் 10 லிருந்து 15 லிட்டர் வியர்வை வேர்வை வெளியேறும்.  நடுநிலையாக எடுத்த கணக்குப்படி, தெற்கு பிராந்தியத்தில் வசிப்பவர்களின்  உடலில் இருந்து அவர்களின் எழுபது வயது வாழ்நாட்களில் சுமார் 70 லிருந்து 150 டன்கள் வியர்வை வெளியேறுகிறது. இதைக் கொண்டு மூன்று மிகப்பெரிய ரயில் வாகன்களை நிரப்பலாம்!

இப்பொழுது கூறுங்கள் மிகச் சரியாக உங்களது எடை இந்த நிமிடத்தில் என்ன ?

* Santorio Santorio ( 1561- 1636) என்பவர் ஒரு இத்தாலிய நாட்டை சேர்ந்த உடற்கூறு பேராசிரியர் ஆவார். இவர் கலிலியோவின் நண்பருமாவார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s