மேகங்கள் பற்றி திருக்குர்ஆன்

 clouds

photo by: Michael Jastremsk

அறிவியலாளர்கள் மேகங்களின் வகைகளைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர். மழை மேகங்களானது ஒரு குறிப்பிட்ட முறைகளின் பிரகாரமும் மேலும் குறிப்பிட்ட காற்று மற்றும் மேகங்கள் வகைகளோடு தொடர்புடைய பல தொடர்ச்சியான படிநிலைகளின் பிரகாரமும்தான் உண்டாகி உருக்கொள்கின்றன என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

மேகங்களில் ஒரு வகையான மேகம் மலை போன்ற பெரிய மேகமாகும். (காண்க படம் 18.1) இது இடிமின்னலுடன் கூடிய மழையோடு சம்பந்தப்பட்டது. இந்த மலை போன்ற மேகங்கள் எவ்வாறு உருவாகுகின்றன அவை எவ்வாறு மழையையும் பனியையும் மின்னலையும் உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி ஆராய்ந்துள்ளனர்.  இந்த மலை போன்ற மேகங்கள் மழையை பொழிவிப்பதற்கு கீழ்கண்ட தொடர் படிநிலை மாற்றங்களுக்கு உள்ளாகின்றன:

மேகங்கள் காற்றினால் தள்ளப்படுதல்:  மேகங்களின் சிறு சிறு துண்டுகளை காற்றானது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தள்ளுகின்றன. அவைகளை ஓரிடத்தில் குவியச் செய்வதால் மலை போன்ற மேகங்கள் உருவாகத் தொடங்குகின்றன.

ஒன்று கூடுதல்: இந்த சிறிய மேகங்கள் அனைத்தும் ஒன்று கூடி பெரிய மேகமாக ஆகத் தொடங்குகின்றன.

நன்றி: தமிழ் இஸ்லாம்

அடுக்கடுக்காக ஆகுதல்: சிறிய மேகங்கள் ஒன்று கூடி பெரிதாகும் போது, பெரிய மேகத்திலிருந்து மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் அதிகரிக்கின்றது.  பெரு மேகத்தின் ஓரப்பகுதிகளை விட அதன் மத்திய பகுதியின் அருகில் இந்த மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் அதிகமாக உள்ளது. இந்த மேல் நோக்கிய காற்று மின்னோட்டம் மேகங்களை செங்குத்தாக வளரச் செய்கின்றது.  அதனால் மேகங்கள் அடுக்கடுக்காக உருவாகுகின்றன.  இந்த மேல் நோக்கிய வளர்ச்சியானது மேகத்iதை வானத்தின் குளிர்ந்த பகுதிக்கு விரியச் செய்ய வைக்கின்றது.  அங்கே நீர்த்துளிகளும் பனிக்கட்டியும் உருவாகி அவைகள் பெரிதாக வளர்ந்து கொண்டே செல்கின்றன. மேல் நோக்கிய காற்று மின்னோட்டத்தால் தாங்க முடியாத அளவிற்கு இந்த நீர் துளிகளும் பனிக்கட்டியும் மிகவும் கனமாக மாறும் போது அவைகள் மேகத்திலிருந்து மழை பனிக்கட்டி போன்றவைகளாக பொழிய ஆரம்பிக்கின்றன.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடுக்கடுக்குகளாக ஆக்குகின்றான். அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்;. (திருக்குர்ஆன் 24:43)

Cumulonimbus clouds seen from space

 Fig. 18.1
 Cumulonimbus clouds seen from space

 ஆகாய விமானங்கள், செயற்கை கோள்கள், கணிப்பொறிகள்,  பலூன்கள் ஆகிய முன்னேறிய நவீன கருவிகளின் உதவியைக் கொண்டு தற்போதுதான் வானிலை வல்;;லுனர்கள் மேகங்களின் உருவாக்கம், அமைப்பு, செயல்பாடுகள் ஆகியவற்றை கண்டு பிடித்துள்ளனர்  மேலும் இத்தகைய கருவிகளின் உதவியால்தான் காற்றுக்களையும், அது செல்லும் திசையையும், அதில் உள்ள ஈரத் தன்மையையும் அதனுடைய மாற்றங்களையும் வானில் ஏற்படும் அழுத்தங்களின் மாற்றங்களையும் நிலைகளையும் தீர்மானிக்கவும் செய்ய முடிந்தது.  (காண்க படம் 18.2)

முன் சொன்ன வசனம், மேகங்களையும் மழையையும் குறிப்பிட்ட பிறகு பனிக்கட்டியையும் மின்னலையும் பற்றிப் பேசுகின்றது:

இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக்க கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் – தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் – அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.

பனிக்கட்டி மழை பொழியும் இந்த மலை போன்ற மேகங்கள் திருக்குர்அன் கூறியவாறு மலைகளைப் போன்றே 25,000 முதல் 30,000 அடி வரை (4.7 முதல் 5.7 மைல்கள் வரை) உயருகின்றன என்று வானிலை வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  திருக்குர்ஆன் கூறுகின்றது: இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்;. (திருக்குர்ஆன் 24:43)

பனிக்கட்டியைப் பற்றிச் சொல்லும் போது இந்த வசனம் ஏன் அதன் மின்னொளி என்று சொல்கின்றது என்ற கேள்வி எழலாம்.

மின்னலை உருவாக்குவதில் பனிக்கட்டி முக்கிய பங்கு வைக்கின்றது என்று இதற்கு அர்த்;தமா? இதைப்பற்றி இன்றைய வானிலையியல் என்ற புத்தகம் என்ன சொல்கின்றது என்று காணலாம். மேகத்தின் மிகவும் குளிர்ந்த நீர்த்துளிகளும் பனிக்கட்டிகளும் உள்ள மேகப்பகுதியின் வழியாக பனிக்கட்டியானது மின்னோட்டத்தை பெறுகின்றது. நீர்த்துளிகள் பனிக்கட்டியுடன் உராயும் போது அவைகள் உரைந்து போய் அதில் உள்ள மறைந்த வெப்பத்தை வெளிப்படுத்துகின்றன. இது பனிக்கட்டியின் மேல் புறத்தை மற்ற பனிக்கட்டிகளை விட சூடாக்குகின்றது.

பனிக்கட்டியானது பனிக்கட்டியைத் தொடும் போது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஏற்படுகின்றது. குளிர்ந்த பொருளிலிருந்து சூடான பொருளை நோக்கி மிண்ணனுக்கள் ஓடத் தொடங்குகின்றன. இதனால் பனிக்கட்டியானது எதிர்மறை மின்னோட்டத்தை கொண்டதாக மாறுகின்றது. பனிக்கட்டித்துண்டுடன் மிகவும் குளிர்ந்த நீர்த்துளிகள் உராயும் போதும் நேர்மறை மின்னோட்டம் கொண்ட மிக மெல்லிய பனி உடையும் போதும் அதே விளைவு ஏற்படுகின்றது.   இந்த இலேசான நேர்மறை மின்னோட்டம் பெற்ற துகள்கள் மேல் நோக்கிய காற்று மின்னோட்டத்தால் மேகத்தின் உச்சிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது எதிர்மறை மின்னோட்டத்துடன் விடப்பட்டுள்ள பனிக்கட்டியானது மேகத்தின் அடிமட்டத்தை நோக்கி விழுகின்றது இதனால் மேகத்தின் அடிப்பாகம் எதிர்மறை மின்னோட்டம் பெற்றதாக ஆகி விடுகின்றது.  இந்த எதிர்மறை மின்னோட்டமங்கள் மின்னலாக நிலத்திற்குள் பாய்கின்றன.  மின்னலை உருவாக்குவதில் பனிக்கட்டி மிக முக்கிய பங்காற்றுகின்றது என்று இதிலிருந்து நாம் தீர்மானிக்கலாம்.

Lightning

 Fig. 18.2

 மின்னல் பற்றிய இந்தத் தகவல் தற்காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. 1600ம் ஆண்டுவரை வானிலையியலில் அரிஸ்டாட்டிலின் கருத்துக்களே மேலோங்கியிருந்தன.  உதாரணத்திற்கு, விண்ணில் ஈரமான, உலர்ந்த என்ற இரு வகையான காற்றுக்கள் இருப்பதாக அவர் சொன்னார்.  அருகில் இருக்கும் மேகத்துடன் உலர்ந்த காற்று உராய்வதால்தான் இடி ஏற்படுகின்றதென்றும் மெல்லிய வேகமற்ற நெருப்புடன் உலர் காற்று பற்றி எரிவதால் மின்னல் ஏற்படுகின்றதென்றும் அவர் சொன்னார்.   இவைகள்தான் திருக்குர்ஆன் இறக்கப்பட்ட காலத்தில், அதாவது பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு, வானிலையியல் பற்றி மேலோங்கிய கருத்தோட்டங்களில் சிலவையாகும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s