தெரிந்த பெயர் தெரியாத விபரம் !
ஜெராக்ஸ்: இந்த வார்த்தையை கேள்விப்படாதவர்கள் இக்காலத்தில் இருப்பது அபூர்வம் ! புகைப்பட நகல் (Photo copy) என்ற அர்த்ததில் தான் இந்த வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது ! ஆனால் உண்மையில் ”ஜெராக்ஸ்” என்பது புகைப்பட நகல் (Photo copy) மிஷின் தயாரிக்கும் கம்பெனியின் பெயர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? என்வே இம்முறை, ஜெராக்ஸ், ஸாரி ! புகைபட நகல் எடுக்க செல்லும் போது ஜெராக்ஸ் என்று கூறாமல் Photo copy என்றே கூறுங்கள் !
கான்வெண்ட் என்பது கன்னியாஸ்திரீகள் வசிக்கும் இடம்
கான்வெண்ட் முன்புறத்தோற்றம் (Image courtesy: inetours.com)
பல ஆங்கில பள்ளிப்பெயர்கள் ’……………கான்வெண்ட்’ என்று பெயரிடப்பட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள் ! ’கான்வெண்ட்’ என்ற சொல்லுக்கு கன்னியா ஸ்த்ரீகள் வசிக்கும் இடம் என்பது பொருளாகும். பெரும்பாலான ஆங்கில கல்விகூடங்கள் அவர்களால், அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே நடத்தப்பட்டதால் அப்பெயர் வழக்கத்தில் இருக்கிறது. ஆனால், சாதாரண பிரஜைகளால் நடத்தப்படும் ஆங்கிலப்பள்ளிக்கும் அப்பெயரை இட்டு தங்கள் ’ஆங்கில அறிவை ‘ பறைசாற்றிக் கொள்பவர்கள் பற்றி என்ன சொல்ல !?
பாலிலிருந்து தயாரிக்கும் நெய்க்கு பகரமாக தாவர எண்ணெயிலிருந்து தாயாரிக்கப்பட்டதுதான ‘ வனஸ்பதி’ எனப்படும் விஜிடபிள் நெய். இதை தயாரித்த பிரபல கம்பெனியின் பெயர்தான் ’டால்டா’. ஆனால் அப்பெயரே வன்ஸ்பதி எண்ணெய்க்கு பெயராக மாறிவிட்டது !?
o.c.s.
இலவசமாக எதையேனும் பெறுவதை என்ன ‘ஓசி ’ யா என்று கேலியாக கேட்பது வழக்கம். இது தமிழகத்தை தவிர்த்து வேறெங்கும் உபயோகிப்பதாக தெரியவில்லை !
இச்சொல் எப்படி நடைமுறைக்கு வந்தது ? என்பது சுவாரசியமான விஷயம்.
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலத்தில் அவர்களின் அரசுத்துறையை O.C.S. (The UK’s Office for Civil Societ y, part of the government’s Cabinet Office ) என்று குறிப்பிடுவார்கள். எனவே அரசாங்கம் தொடர்பான தபால்களில் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல் on O.C.S. service (இதையே On Company Service என்றும் கூறுவதுண்டு.) என்ற முத்திரை குத்தப்பட்டு இருக்கும். அப்படி வரும் தபால்களை தபால் இலாகா ஊழியர்கள் o c s என்று குறிப்பிடுவார்கள் அது காலப்போக்கில் மருவி OC ஆகிவிட்டிருந்தது. அதே சொல் தபால் துறையை தாண்டி பொது வழக்கத்திலும் பயண்படுத்தபட்டு இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொல்களில் ஒன்றாக மாறிவிட்டது.
x – ray
யார் ? என்ன? என்று தெரியாதவற்றை ‘எக்ஸ்’ என்று குறிப்பிடுவது வழக்கம். ’எக்ஸ்ரே’ வுக்கு அப்பெயர் எப்படி வந்தது ?
எக்சு-கதிர்கள் என அழைக்கப்படும் இராண்ஜன் கதிர்கள் (Roentgen rays) 1895 நவம்பர் 8 ஆம் நாள் ஊர்சுபெர்க் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்த வில்லெம் இராண்ஜன், குறூக்சு குழாயுடன் வளியில் மின்னிறக்கம் நிகழ்வதை ஆய்ந்து கொண்டு இருக்கும் போது தற்செயலாக, அருகில் இருந்த பேரியம் பிளாட்டினோ சையனைட் பூச்சுடைய ஒரு அட்டை ஒளிர்வதைக் கண்ணுற்றார். மின்னிறக்கம் நிகழும்போது ஒளிர்வதும் இல்லாத போது ஒளிராமலும் இருக்கக் கண்டார். இதற்கு குழாயின் சுவர்களிலிருந்து வெளிப்படும் புதிரான ஒருவகை கதிர்களே காரணம் எனக் கருதினார். இக்கதிர்களை அவர் எக்சு-கதிர்கள் என அழைத்தார். (நன்றி: விக்கிபீடியா )
வால்வ் ரேடியோ உட்புறத்தோற்றம் புகைப்பட உதவி vintageradio.me.uk
( டிரான்ஸிஸ்டர்) ரேடியோ
பல்வகையான டிரான்ஸிஸ்டர்கள்
ரேடியோக்கள் எனப்படும் வானொலிப்பெட்டிகள் தொடக்கத்தில் வால்வுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டன. அவை அளவில் பெரியனவாகவும், அதிக மின்சக்தி தேவைப்பட்டதாலும் அவை கையடக்கமாக வெளியில் எடுத்துச்செல்லும் வகையில் தயாரிக்க இயலவில்லை. மின்னனுவியலில் மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட டிரான்ஸிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் கைக்கு அடக்கமான சிறிய வானொலிப்பெட்டிகள் புழக்கத்திற்கு வந்தன. டிரான்ஸிஸடர்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட வானொலிப்பெட்டிகள் டிரான்ஸிஸ்டர் ரேடியோக்கள் என்ப்பட்டன. அவை காலபோக்கில் டிரான்ஸிஸ்டர் என்று மட்டும் அழைக்கப்பட்டு டிரான்ஸிஸடர் என்றால் சிறிய அளவுள்ள வானொலிப்பெட்டிகளின் பெயரே ‘ ட்ரான்ஸிஸ்டர்கள்’ என்றாகிவிட்டது !.
இது தொடர்பான பிற பதிவுகள்:
A MILLION THANKS TO YOUR TEAM . SIR… AWESOME FACTS … ALL THE BEST GOAHEAD …..!!!
Thank you very much for your appreciation
Thank you sir,, great information. i will your posts for learn my child. thank you so much.