மேஜிக் மை

magic ink

 (Image courtesy  miniinthebox.com)

உங்கள் நண்பர் ஒரு வெள்ளை தாளை கொண்டுவந்து கொடுத்து இதை படி என்று சொன்னால் என்ன செய்வீர்கள் ?
உனக்கென்ன பைத்தியமா வெள்ளை பேப்பரை படி என்று சொல்கிறாய் ? என்று கேட்பீர்களா ?

இந்த இரகசியம் தெரிந்து இருந்தால் நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள் !

அது என்ன ரகசியம் ?

இதோ இந்த பரிசோதனையை செய்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள்:
– எலுமிச்சை சாறு
– படிகார தூள் (தேவைபட்டால் )
– தொட்டு எழுதுவதற்கு சிறிய பிரஷ் அல்லது குச்சி
– வெள்ளை காகிதம்

செய்முறை:

தேவையான  அளவு எலுமிச்சை சாரை எடுத்து ஒரு ஸ்பூன் சாற்றுக்கு ஒரு சிட்டிகை படிகார தூளை கலக்கவும். படிகாரத்தூள் கிடைக்கவில்லையானால் பரவாயில்லை. வெறும் எலுமிச்சை சாற்றை பயன் படுத்திக்கொள்ளலாம். (படிகார தூளை சேர்த்தால் எழுத்துக்கள் பளிச்சென  தெரியும் )

குச்சி அல்லது பிரஷை கொண்டு எலுமிச்சை கலவையை தொட்டு காகிதத்தில் நீங்கள் விரும்பியதை எழுதி காய வைக்கவும். நன்கு காய்ந்தவுடன் எடுத்து பத்திரப்படுத்தி கொள்ளவும்.

அதை உங்கள் நண்பர்களிடம் காண்பித்து படிக்க சொல்லவும். அவர்கள் முழித்தால் !
நீங்கள் வாங்கி அதை தண்ணீரில் நனைத்தோ அல்லது நெருப்பின் அனலிலோ காட்டினால் நீங்கள் முன் எழுதி இருந்த அவ்வெழுத்துக்கள் தெரியும் !

பழங்காலத்தில் இரகசிய செய்திகள் அனுப்ப இம்முறை பயன்பட்டிருக்குமோ என்பது தெரியாது !

thumb

(Image courtesy: fairtrasa.com)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s