அணுக்கள்

இப்பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் (திட, திரவ, மற்றும் வாயுக்கள்)அணுக்களால் ஆனவை. எனவே அணுக்கள் பொருட்களின் (matter) அடிப்படை ஆதாரமாக கருதப்படுகிறது. இருந்தாலும் இவ்வணுக்கள் பெரும்பாலும் பிற அணுக்களுடன் கூட்டுச் சேர்ந்தே காணப்படுகிறது. இவற்றையே நாம் மூலக்கூறுகள்  (molecule) என்று அழைக்கிறோம். ஹீலியம் போன்ற ஒரு சில வாயுக்கள்   மட்டும் தனிப்பட்ட அணுக்களால் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.

ஒரு அணுவை எடுத்தால் அது இரும்பு அணுவா, ஆக்ஸிஜன் அணுவா அல்லது ஹைட்ரஜன் அணுவா என கூறமுடியும். அணுவைப் பிரித்த பிறகோ அல்லது அணுவின் ஒரு பகுதியை மட்டும் நோக்கினாலோ அதனுடைய இரும்பு, ஆக்ஸிஜன் போன்ற அடையாளங்கள் மறைந்து விடும். எல்லா அணுக்களிலும் அணுக்கூறுகள் ஒரே மாதிரியாக உள்ளன. அணுக்கூறுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தன்மை வேறுபடுகிறது.

அணுவின் கூறுகள்

ஒவ்வொரு அணுவினுள்ளும் மூன்று வகையான அணுக்கூறுகள் உள்ளன. அவையாவன:

  1. நேர்மின்னி அல்லது புரோட்டான் (p)
  2. எதிர்மின்னி அல்லது எலக்டிரான் (e)
  3. நொதுமின்னி அல்லது நியூட்ரான் (n)

இவற்றில் நேர்மின்னியும் நொதுமின்னியும் அணுவின் மையப்பகுதியான அணுக்கருவில் இருக்கும். எலக்ட்ரான் அணுக்கருவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் மிகச்சரியான ஓர் மாதிரி குவாண்டம் பொறிமுறையில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.).

இதில் எலக்ட்ரானும், புரோட்டானும் சம அளவான எதிரெதிர் மின்சக்தியைக் கொண்டவை. அணுவில் இவையிரண்டும் சம அளவில் இருப்பதால் இதன் சக்திகள் ஒன்றையொன்று ஈர்த்து அணுவின் அமைப்பை நிலையானதாக்குகிறது.

அணு எண்

அணுவில் உள்ள நேர்மின்னிகளின் எண்ணிக்கை அணு எண் எனப்படுகிறது.. இதுவே அணுக்களை வரிசைப்படுத்த உதவும் குணமாகும். ஒரு தனிமத்தின் அணுக்கள் அனைத்தும் ஒரே அணு எண்ணைக் கொண்டிருக்கும்.

அணுவின் அளவு

அணுக்கள் மிகவும் சிறியவை. ஒரு எலக்ட்ரான், ஒரு புரோட்டான் மட்டும் கொண்ட மிகச்சிறிய அணுவான ஹைட்ரஜன் அணுவின் விட்டம்5X10(-8) MM,.,..,. உருவகப்படுத்தி பார்க்க வேண்டுமானால் 2 கோடி ஹைட்ரஜன் அணுக்களை ஒரு நேர்க்கோட்டில் வைத்தால் ஒரு மில்லிமீட்டர் நீளம் வரும்.

ஒரு அணுவின் கட்டமைப்பு

அணுவின் மையப்பகுதியான நியூக்ளியஸ்(nucleus) அல்லது உட்கருவில் புரோட்டான் (p)எலக்டிரான் (e) களை கொண்டுள்ளது. நியூக்ளியஸ்(nucleus) அல்லது உட்கருவை சுற்றி  அதண் ஆற்றல் மட்டத்தில் அல்லது அதன் ஓட்டில் (shells)  எலக்டிரான் (e) அமைக்கப்பட்டுள்ளது. ஒரு அணுவின் அமைப்பை வரைபடமாக வரைய இப்படத்தை ஞாபகத்தில் வைக்கவும்.

19_1_atoms__isotopes

சேர்மம்

சேர்மம் (Compound) என்பது  ஒன்றுக்கும் மேற்ப்பட்ட வெவ்வேறு தனிமங்களால்(elements) ஆன பொருட்கள் (substance) ஆகும். உதாரணமாக தண்ணீர் ஒரு சேர்மமாகும்.

glass of water

பின் வரும் படத்தில் நீரின் இரு மூலக்கூறுகள் உள்ளன. அவை ஹைட்ரஜன் (H) மற்றும் ஆக்ஸிஜன் (O) எனப்படும் இரு கூறுகள் ஆகும். நீரின்  இரசாயன சூத்திரம் H2O  ஆகும். அதாவது ஒவ்வொரு  ஆக்ஸிஜன் அணுவிலும்  இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளன.

water

Source :

தமிழ் விக்கிபீடியா , http://www.bbc.co.uk/schools/, மற்றும்  http://www.ndt-ed.org

இது தொடர்பான பிற ஆக்கங்கள்:

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s