புவியியல் பற்றி திருக்குர்ஆன்

அராபியர்களின் மொழியையோ அல்லது திருக்குர்ஆனின் Origin Of The Earthதன்னிகரற்ற சொல்லாண்மையையோ தெரியாதவர்களுக்கு இம்மார்க்கம் உண்மையென்பதற்கான அத்தாட்சியை எவ்விதம் அவர்களுக்கு வழங்குவது? அவர்கள் அராபியர்களின் இந்த மொழியையும் அது பற்றிய அறிவுகளையும் கற்பதைத்தவிர வேறு வழியேயில்லையா? அவ்வாறு இல்லை என்பதுவே அதற்கான பதிலாகும். மிகவும் புகழுக்குரியோனும் மேலோனுமாகிய அல்லாஹ் இனம் நிறம் காலம் என்ற பாகுபாடு இல்லாமல் அவர்களுக்கும் மற்ற அனைத்து சந்ததிகளுக்கும் உரிய ஆதாரங்களை அனுப்புவதன் மூலம் தன்னுடைய கருணையை காண்பித்துள்ளான்.

அமெரிக்காவின் மிகவும் முண்ணனியிலுள்ள புவியியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் பால்மர் அவர்கள் நம்மிடம் உள்ளார். அமெரிக்க புவியியலாளர்களின் சங்கத்தினுடைய நூறாவது ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்கியவர் அவர். நாம் அவரை சந்தித்து திருக்குர்ஆன் ஹதீது ஆகியவற்றில் காணப்படும் பல்வேறு அறிவியல் அற்புதங்களை வழங்கியபோது அவர் மிகவும் வியந்து போனார்.

பெர்சியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் ஜெருஸலத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் யுத்தம் நடந்தது. அந்த யுத்தம் நடந்த இடம்தான் உலகத்திலேயே மிகவும் தாழ்ந்த பூமி என்று திருக்குர்ஆன் எங்களுக்கு அறிவிக்கின்றது என்று நாங்கள் அவரிடம் கூறிய ஒரு இனிமையான நேரம் எனக்கு ஞாபகம் வருகின்றது.

உயர்ந்தோனும் புகழுக்குரியோனுமாகிய அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:

அலிஃப், லாம், மீம். ரோம் தோல்வியடைந்து விட்டது. பூமியின் மிகவும் தாழ்வான பகுதியில் (அத்னா அல் அர்ல்) ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள். (திருக்குர்ஆன் 30:1-3)

அத்னா என்ற வார்த்தை மிகவும் அருகிலுள்ள அல்லது மிகவும் தாழ்ந்த என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. திருக்குர்ஆனில் விரிவுரையாளர்கள், அல்லாஹ் அவர்கள் அனைவரின் மேலும் திருப்தி கொள்ளட்டும், அத்னா அல் அர்ல் என்பது அரேபிய தீபகற்பத்தின் மிகவும் அருகிலுள்ள பூமி என்று கருத்து கூறியுள்ளனர். இருந்தாலும், அதற்கு மற்றொரு அர்த்தமும் உள்ளது. இவ்வாறாக, பேரொளிமிக்க திருக்குர்ஆன் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்களை கொடுக்கின்றது. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

எனக்கு பரந்து விரிந்த சொற்கள் (அடங்கிய வேதம்) கொடுக்கப்பட்டுள்ளது. (அல் புஹாரி மற்றும் முஸ்லிம்).

பூமியின் மிகவும் தாழ்வான பகுதி எது என்று நாம் ஆராய்ந்த போது, அது ரோமர்கள் எந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டார்களோ அந்த யுத்தம் நடந்த அதே இடம்தான் அது என்று நாங்கள் கண்டு கொண்டோம். பேராசிரியர் பால்மர் அவர்களிடம் நாங்கள் இதைத் தெரிவித்த போது, திருக்குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்ட இந்த இடத்தை விட தாழ்வான வேறு பல பகுதிகள் உள்ளன என்று கூறி நாங்கள் சொல்வதை மறுத்தார். ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் உள்ள பல்வேறு பகுதிகளின் பெயர்களை உதாரணங்களாக தந்தார். நாங்கள் கூறுவது மிகவும் சரி பார்க்கப்பட்டதும் சரியானதுமாகும் என்று அவருக்கு உறுதி கூறினோம். அவரிடம் பூமியின் ஏற்றத்தாழ்வுகளை காண்பிக்கும் உலக உருண்டை இருந்தது. பூமியில் மிகவும் தாழ்ந்த பகுதி எது என்பதை இந்த உருண்டையை கொண்டு எளிதில் உறுதி செய்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார். அவர் அந்த உலக உருண்டையை திருப்பி ஜெருஸலத்திற்கு அருகிலுள்ள பாகத்தை கவனித்தார். அந்;தப் பகுதியை சுட்டிக்காட்டும் ஒரு சிறிய அம்புக்குறி அங்கே ஒட்டப்பட்டிருந்தது. அதில் உலகத்திலேயே மிகவும் தாழ்ந்த பகுதி|என்று எழுதப்பட்டிருந்தது அவரை வியப்படையச் செய்தது.

நாம் அளித்த தகவல் சரியானது என்பதை பேராசிரியர் பால்மர் அவர்கள் உடன் ஒப்புக்கொண்டார்கள். இதுதான் உண்மையில் உலகிலேயே மிகவும் தாழ்ந்த பகுதி என்று அவர் தற்பொழுது உலக உருண்டையுடன் வைத்துக் கூறுவதை தாங்கள் காண்கின்றீர்கள். பேராசிரியர் பால்மர் அவர்கள்:

அது (யுத்தம்) மேலிருக்கும் இந்த இடத்தில்தான் நடந்தது. உலகத்திலேயே மிகவும் தாழ்ந்த பகுதி|என்று உலக உருண்டையிலுள்ள அந்த லேபிள் கூறுவது மிகவும் சுவையான விசயாகும். இதை, நிச்சயமாக, அந்த சிக்கலான வார்த்தையின் விளக்கம் ஆதரிக்கின்றது.

திருக்குர்ஆன் கடந்த காலத்தைப் பற்றியும், மேலும் படைப்பு எவ்வாறு தொடங்கியது: வானமும் பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டது: பூமியில் மலைகள் எவ்வாறு நாட்டப்பட்டுள்ளது: எவ்விதம் முதலில் புற்பூண்டுகள் ஆரம்பித்தன: பூமி இன்று எவ்வாறு உள்ளது, மலைகளையும் அவற்றின் தனித்தன்மைகளையும், அரேபியத் தீபகற்பத்தில் ஏற்பட்டது போன்ற பூமியின் மேல் ஏற்ப்பட்ட மாற்றங்கள் போன்றவற்றையும் திருக்குர்ஆன் விவரிப்பது கண்டு மிகவும் வியந்து போனார். அரேபியர்களின் நிலம் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் முழு பூமியும் எதிர் காலத்தில் எவ்வாறு இருக்கும் என்றும் விவரிக்கின்றது. இதையெல்லாம் கண்ட பேராசிரியர் பால்மர் அவர்கள் திருக்குர்ஆனானது கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் விவரிக்கக்கூடிய அற்புதமான வேதமாகும் என்று ஒத்துக் கொண்டார்கள்.

மற்ற அறிவியலாளர்களைப் போன்றே பேராசிரியர் பால்மர் அவர்களும் முதலில் தயங்கினார்கள். ஆனலும், வெகு விரைவாகவே அவருடைய கருத்துக்களைச் வெளிப்படையாகக் கூறிட முன் வந்தார். திருக்குர்ஆனில் அடங்கியுள்ள தன்னிகரற்ற புவியியல் பற்றிய ஞானங்களைப் பற்றி ஒரு ஆராய்ச்சியை எகிப்திய மாநாட்டில் வழங்கினார். நபி முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தில் அறிவியல் தளத்தில் கலையின் நிலை எவ்வாறிருந்தது என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறினார். ஆனால் அந்தக்காலத்தில் இருந்த மிகக் குறைந்த அறிவையும் (ஆராய்ச்சி) சாதனங்களையும் கணக்கிலெடுத்தால், திருக்குர்ஆன் என்பது நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட தெய்வீக ஒளி என்று எந்த வித சந்தேகமுமின்றி நாம் முடிவெடுக்கலாம். பேராசிரியர் பால்மர் அவர்களின் முடிவான கருத்துக்கள் இதோ:

அது போன்ற சரித்திர சம்பவங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஆரம்பகால மத்திய கிழக்கு சரித்திரத்தை நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அது போன்ற எந்த ஆவணமும் இல்லையெனில், நாமாகவே தற்போது கண்டு பிடித்த அறிவுகளை அல்லாஹ்வே தன்னுடைய அறிவின் சிலவற்றை முஹம்மது அவர்களுக்கு அறிவித்தான் என்ற நம்பிக்கையை அது வலுப்படுத்துகின்றது. புவியியல் பற்றி திருக்குர்ஆன் என்ற தலைப்பு பற்றிய நம்முடைய உரையாடலை தொடர நாம் விரும்புகின்றோம். மிக்க நன்றி

அமெரிக்காவிலிருந்து வந்த புவியியல் துறையில் இன்றுள்ள மிகப் பெரும் வல்லுநர்களில் ஒருவரை தாங்கள் காண்கின்றீர்கள். உண்மையை ஒப்புக் கொள்வதற்கும் அவருடைய கருத்துக்களை முன் வைப்பதற்கும் தயங்கவில்லை. ஆனாலும் உண்மையை சுட்டிக்;காட்ட ஒருவர் அவருக்கு தேவைப்படுகின்றது. மேற்கத்தியவர்களும் கிழக்கத்தியவர்களும் மதத்திற்கும் அறிவியலுக்குமான யுத்தத்திற்கு நடுவில் வாழ்ந்து வந்தனர். இந்த யுத்தம் தவிர்க்க முடியாததாகும். ஏனெனில் முந்தைய அனைத்து (இறை) தூதுக்களும் சீர் கெடுக்கப்பட்டு விட்டன. (-அதனால் அவைகள் விஞ்ஞானத்திற்கு எதிரானவையான இருந்தன.) ஆகவே, முன்பு சீர் கெடுக்கப்பட்டவற்றை திருத்தும் முகமாக அல்லாஹ் நபி முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பினான்.

நாம் அவர்களை விட பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளோம் மேலும் நம் மார்க்கத்தை நாம் சரிவர பின்பற்றுவதுமில்லை இந்த நிலையில் நாம் அவர்களுக்கு பிரச்சாரம் செய்தால் அவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்| என்று சிலர் கேட்கலாம். அறிவானது அதைப் பெறுபவருக்கு அது பற்றிய எழுச்சியை அதிகப்படுத்துகின்றது என்பதாகும். அறிவுடையோர் உண்மையைக் காண்பதில்தான் கவனமுடையவர்களாக இருக்கின்றார்களே அல்லாமல், அதன் வெளிப்புறத் தோற்றம் எவ்வாறு உள்ளது என்பதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. மிகச் சரியாகச் சொல்வோமானால் இந்த அறிவும் அறிவியல் முன்னேற்றமும்தான் இஸ்லாத்தின் செல்வமே. அல்லாஹ்வினுடைய வேதத்தின் முன்பும் அவன் தூதரின் பொன் மொழிகளின் முன்பும் நவீன விஞ்ஞானம் தலை வணங்குவதைத் வேறு வழியில்லை.

அல்லாஹ் மனிதனை எந்த அடிப்படை இயல்புகளுடன் படைத்துள்ளானோ அந்த அடிப்படை இயல்பு (அல் பித்ரா) இஸ்லாத்தின் மூலமாகத்தின் திருப்தியை அடைகின்றது. எவர்களிடம் ஈமான் இல்லையோ அவர்கள் எப்பொழுதும் நிம்மதியற்றும் குழப்பத்திலுமே இருப்பார்கள். மேலும், மேற்கிலுள்ள சுதந்திரமான சூழ்நிலை அவர்கள் நம்புவபற்றை எந்தவித பயமோ அல்லது அச்சமோ இல்லாமல் வெளிப்படையாகக் கூற அவர்களை உதவுகின்றது. இந்த சகாப்தத்தின் அற்புதமான திருக்குர்ஆனை அவர்கள் அங்கீகரிக்கவும் உறுதி செய்யவும் செய்த பல நிகழ்ச்சிகளை நாம் கண்டுள்ளோம். அந்தத் திருக்குர்ஆன் இறுதி நாள் வரை தொடர்ந்து இருந்து வரும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s