பூமியின் ஆரம்பம் பற்றி திருக்குர்ஆன்

பேராசிரியர் ஆல்பிரட் குரோனர் அவர்கள் கூறுகின்றார்கள்: — முஹம்மது அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பு கூறியதை நவீன விஞ்ஞானம் இன்று நிரூபிக்க முடியும்.

Origin Of The Earthஉலகின் மிகவும் புகழ்பெற்ற புவியியலாளரான பேராசிரியர் ஆல்பிரட் குரோனர் அவர்களை தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். ஜெர்மனி, மாயின்ஸிலுள்ள ஜோஹன்னஸ் குடன்பெர்க் பல்கலைக்கழகத்தில் அவர் ஒரு புவியியல் பேராசிரியரும் புவியியல் அறிவியல்கள் இன்ஸ்டிட்யூட்டின் புவியியல் துறையின் தலைவரும் ஆவார். அவரைச்சந்தித்து பல திருக்குர்ஆன் வசனங்களையும் ஹதீதுகளையும் அவரிடம் அளித்தோம். அவர் அவைகளை ஆராய்ந்து அவரின் கருத்துக்களைக் கூறினார். அவரிடம் நாங்கள் உரையாடினோம்.

பேராசிரியர் குரோனர் அவர்கள் கூறினார்: இந்தப் பல்வேறு கேள்விகளையும் முஹம்மது எங்கிருந்து வந்தார் என்பதையும் சிந்தித்துப் பார்த்தால், இன்னும் சொல்லப்போனால் அவர் ஒரு காட்டரபி என்பதையும் நினைவில் கொண்டால், பிரபஞ்சத்திற்கு பொதுவான ஒரு தொடக்கம் இருந்தது போன்ற விசயங்கள் அவருக்கு தெரிந்திருக்கும் என்பது ஏறக்குறைய சாத்தியமற்ற ஒன்று என்றே நான் நினைக்கின்றேன். ஏனெனில், கடந்த சில வருடங்களில்தான் விஞ்ஞானிகள் மிகவும் சிக்கல் நிறைந்த முன்னேறிய தொழில் நுட்பத்தின் துணை கொண்டு இதை கண்டு பிடித்தனர்.

திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து வந்திருக்க முடியாது என்பதை நிரூபிக்கும் உதாரணத்தை பேராசிரியர் குரோனர் அவர்கள் திருக்குர்ஆனிலிருந்து தேர்ந்;தெடுத்தார். பேராசிரியர் குரோனார் அவர்கள் எடுத்த உதாரணம் இந்த பிரபஞ்சம் ஆரம்பத்தில் எல்லாம் ஒன்றாக இருந்தன என்று திருக்குர்ஆன் கூறுவதைத்தான்.

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் (இந்த சத்தியத்தை) நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (திருக்குர்ஆன் 21:30)

வானங்களும் பூமியும் ஒட்டிக்கொண்டிருந்தன அல்லது ஒன்றோடு ஒன்று ஐக்கியமாயிருந்தன பின்பு அவைகள் பிரிக்கப்பட்டன என்பதுதான் இந்த வசனத்தில் வரும்; ரத்கன் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகும் என நபித்தோழர் இப்னு அப்பாஸும் முஜாஹிதும் மற்றும் பலரும், அல்லாஹ் அவர்களை திருப்தி கொள்வானாக, விளக்கமளிக்கின்றார்கள். நபி முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த எந்த மனிதரும் இதை அறிந்திருக்க முடியாது என்;;பதை நிரூபிக்கும் உதாரணமாக பேராசிரியர் குரோனர் அவர்கள் இதை முன் வைத்தார்.

பேராசிரியர் குரோனரே பேசுவதைக் கேளுங்கள்: 1400 ஆண்டுகளுக்கு முன் நியூக்ளியர் பிஸிக்ஸ் பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவர், அவருடைய சொந்த மூளையிலிருந்து வானமும் பூமியும் ஒன்றாக இருந்தன என்பதையும் இங்கு நாம் விவாதித்த பல்வேறு விசயங்களையும் அறிந்திருக்க முடியாது என்றே நான் நினைக்கின்றேன்.

ஆனாலும், பேராசிரியர் குரோனர் அவர்களிடம் நழுவும் திறமை இருந்ததாக நமக்குத் தோன்றியது. உதாரணத்திற்கு, அரேபியா ஒரு காலத்தில் தோட்டங்களும் ஆறுகளும் நிரம்பியதாக இருந்ததா? என்று கேட்டு அரேபியாவின் புவியியல் நிலை பற்றி அவரிடம் கேட்டோம். பனிக் காலத்தில் அவ்வாறு இருந்தது என்றார். வடதுருவத்தில் உள்ள பனிக்கட்டிப்பகுதிகள் தெற்கு நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அவைகள் அரேபிய தீபகற்ப்பத்தை நெருங்கும் போது தட்ப வெட்ப நிலை மாறி அரேபியா உலகத்திலேயே மிகவும் சிறந்த பச்;சைப்பசேல் பூமியாகவும் மிகவும் ஈரமுள்ள பகுதியாகவும் இருக்கும் என்று தற்போது தெரிந்துள்ளது. அரேபியா மீண்டும் தோட்டங்களும் ஆறுகளும் நிறைந்த பகுதியாக மாறுமா என்று அவரிடம் கேட்டோம். ஆமாம் அது ஒரு விஞ்ஞான உண்மையாகும் என்று பதிலளித்தார்.

இது நம்மை வியப்பில் ஆழ்த்தியது, இது ஒரு விஞ்ஞானபூர்வமான உண்மை என அவர் எவ்வாறு கூறிட இயன்றது அதுவோ எதிர்காலத்தில் உள்ள நிகழ்ச்சியாகும். ஆகவே நாம் அவரிடம் ஏன்? என்று கேட்டோம் அதற்கு அவர்: புதிய பனிக்காலம் ஏற்கனவே தொடங்கி விட்டது. பனி வட துருவத்திலிருந்து தெற்கு நோக்கி ஊர்ந்து வருவதை நாம் காணலாம். உண்மையில் துருவப்பணி அரேபிய தீபகற்பத்தை தற்போது நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது எனலாம். ஒவ்வொரு குளிர்காலத்தின் போதும் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் பனிக்காற்று அடிக்கும் இதற்கான அறிகுறிகளை நாம் காணலாம். மற்றொரு பனிக்காலம் ஏற்கனவே தொடங்கி விட்டது என்பதை நிரூபிக்கும் மற்ற பல்வேறு தகவல்களும் அறிகுறிகளும் அறிவியலாளர்களிடம் உள்ளது. அது ஒரு விஞ்ஞான உண்மையாகும்.

அவரிடம் நாம் கேட்டோம்: தாங்கள் குறிப்பிட்ட அந்த விசயம் அறிவியலாளர்களுக்கு தொடர்ச்சியான நீண்ட கண்டுபிடிப்புக்களுக்குப் பிறகு மேலும் பல்வேறு சிறப்புச் சாதனங்களின் துணை கொண்டுமே தெரிய வந்துள்ளது. ஆனால் இது 1400 ஆண்டுகளுக்கு முன்பேயே நபி முஹம்மது (ஸல்) அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளதை காண்கின்றோம். ஸஹீஹ் முஸ்லிமில் அறிவிக்கப்பட்ட ஹதீதில்:-

அரேபியர்களின் பூமி மீண்டும் ஒரு முறை மேய்ச்சல் நிலமாக மாறும் ஆறுகள் அதன் மத்தியில் ஓடும். அது வரை இறுதி நாள் நம்மிடையே வராது.

அரேபியர்களின் பூமி ஒரு காலத்தில் தோட்டங்களும் ஆறுகளும் நிரம்பியதாக இருந்தது முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அறிவித்தது யார் என பேராசிரியர் குரோனர் அவர்களிடம் நாம் வினவினோம். அதற்கு அவர் உடனடியாக ரோமர்களாக இருக்கும்| என்று கூறினார். குரோனரின் நழுவும் தன்மையை இது எனக்கு நினைவூட்டியது. சரி போகட்டும். அரேபியர்களின் பூமி மீண்டும் ஒருமுறை மேய்ச்சல் நிலமாகவும் ஆறுகள் நிரம்பியதாகவும் மாறும் என்று நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அறிவித்தது யார்? என்று கேட்டோம். பேராசரியர் குரோனார் அவர்களுக்கு தர்மசங்கடமாகி விட்டது. ஆனாலும், அவர் உண்மையை எதிர் கொள்ளும் போது அவருடைய கருத்தை பட்டவர்த்தனமாக சொல்லும் தைரியத்தையும் பெற்றிருந்தார். அவர் இவ்வாறு பதிலளித்தார்: மேலிருந்து வரும் வேத வெளிப்பாட்டின் மூலமிருந்துதான் இதை அவர் அறிந்திருக்க முடியும்.

இறுதியாக, அவருடன் நம்முடைய உரையாடலிற்குப் பின் அவர் பின்வருமாறு கூறினார்: இந்தக் கூற்றுக்கள் அனைத்தையும் மேலும் திருக்குர்அனில் கூறப்பட்டுள்ள பூமியைப் பற்றியோ அல்லது பூமியின் உருவாக்கம் பற்றியோ மேலும் பொதுவாக அறிவியல் பற்றியோ ஒன்று கூட்டிப் பார்த்தால், அதில் கூறப்பட்டவைகள் பல வழிகளில் உண்மையாக உள்ளன என நிச்சயமாக கூற முடியும். அவைகள் தற்போது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட முடியும். சாதாரண மனிதருக்கான ஒரு எளிமையான அறிவியல் புத்தகம் என்று கூட கூறிடலாம். அதில் சொல்லப்பட்ட பல கூற்றுக்கள் அக்காலத்தில் வேண்டுமானால் நிரூபிக்கப்பட முடியால் இருந்திருக்க முடியும் ஆனால் முஹம்மது அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியவற்றை நிரூபிக்கும் நிலையில் நவீன விஞ்ஞானம் இன்று உள்ளது.

”இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.” ”நிச்சயமாக (சிறிது) காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொளவீர்கள்.” (திருக்குர்ஆன் 38:87-88)

(source: http://www.it-is-truth.org/it-is-truth/IslamAndScience.shtml)

தமிழில்:தமிழ் இஸ்லாம்.காம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s