கேட்டல் (Audition)

ஐம்புலன்களில் ஒன்றான கேட்டல் மனிதனின் கற்றலில் பெரும்பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி பிறக்கும்போது கேட்கும் சக்தியின்றி பிறந்தால் அவர்கள் பேசும் சக்தியையும் இழந்து தவிப்பதை பார்க்கிறோம்.

இறைவன் நமக்கு அந்தக்குறையின்றி பிறக்கவைத்ததற்கு நன்றி செலுத்தியவர்களாக காதுகளின் அமைப்பைபற்றி தெரிந்து கொள்வோம்.

நம் உடலுறுப்புகளின் அமைப்பினை தெரிந்து கொள்வதன் மூலம் அதை பாதுகாப்பதும் அவற்றில் ஏதேனும் கோளாறுகள் வரும்போது அதற்கான காரணங்களையும் ஓரளவுக்கு நாம் விளங்கிக்கொள்ள ஏதுவாகும்.

காற்றில் ஏற்படும் ஒலி அலைகள் tympanic சவ்வின் (செவிப்பறை) மீது மோதி அதிர்வுகளை ஏற்படுத்தும். மனிதர்களால் 20 மற்றும் 20,000 Hz அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் அலைகள் கேட்க முடியும். இந்த ஒலி அதிர்வுகளை காதிலுள்ள  மூன்று எலும்புகளான malleus, incus, stapes(சம்மட்டியுருவெலும்பு,  பட்டை சிற்றெலும்பு, stapes) மூலம் கட்த்தப்பட்டு  cochlea (நத்தைச்சுருள் )வை வந்தடைகிறது. cochlea என்பது நத்தை வடிவிலான குழாய் சுருளில் திரவம் நிரப்பப்ட்ட அமைப்பாகும்.

Image courtesy: health-advisors.org

நத்தைச்சுருள் உள்ளே கார்டு உறுப்பு என்று மற்றொரு அமைப்பு உள்ளது. நத்தை சுருளின் கீழ்பகுதியில் உள்ள சவ்வில் முடிசெல்கள் எனப்படும் பிசிர்முனைப்புக்கள் (cilia) அமைந்துள்ளது.

Image courtesy: http://www.intropsych.com

இந்த பிசிர்முனைப்புகள் tectorial டெக்டோரியல் எனப்படும் மற்றொரு சவ்வின் தொடர்பை ஏற்படுத்துகிறது. ஒலி அதிர்வுகளால் பிசிர்முனைப்புக்கள் கிளர்ச்சியடைந்து, செவிநரம்பில் உந்துவிசையை (impulses)உருவாக்குகின்றன, பிறகு அவை (impulses) மூளையை சென்றடைகின்றன.

Image courtesy : http://www.roger-russell.com

போகிற போக்கில் இதையும் தெரிந்து கொள்ளுங்கள். மனித உடலில் மிக சிறிய எலும்பு காதில் உள்ள  stapes எலும்புபாகும்.

அதன் அளவு  0.25 முதல் 0.33 செ.மீ. நீளம் [0.10 முதல் 0.13 அங்குல] ஆகும்.  எடை 1.9 முதல் 4.3 மிகிஆகும்.

 stapes bone

Stapes எலும்பு (Image courtesy: www.sahi.org.za)

சத்தம்  டெசிபல்களில் (dB) என்ற அளவினால் அளவிடப்படுகிறது – இந்த காதுகளுக்கு  எதிராக எழுப்ப படும் ஒலி அலைகளின் சக்தியாகும். சத்தம் அதிகமாக அதிகமாக டெசிபல் கூடும். இங்கே சில அன்றாடம் நாம் கேட்கும் ஒலிகளின்  தோராயமான டெசிபல் அளவுகள் தரப்பட்டுள்ளன:

சத்தம்

அடர்த்தி

Intensity
(db)

கடிகார சத்தம்

20

 bearwh
ரகசிய பேச்சு

30

சாதாரண பேச்சு

50-60

வாகன போக்குவரத்து

70

 bearac
கடிகார அலாரம்

80

புல் வெட்டும் கருவி

95

இயந்திர ரம்பம்

110

 bearair
துளைபோடும் இயந்திரம்

120

ஜெட் விமானம்

130

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்:

வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க ஒலியின் வேகம் அதிகரிக்கும். அதாவது ஓசை  68oF (20oC), டிகிரி வெப்பத்தில் நொடிக்கு 1,125 அடிகள் பயணிக்கும் (அதாவது நொடிக்கு 343 மீட்டர்கள்). தூரம் பயணிக்கும்.

Sourse: http://faculty.washington.edu/chudler/bigear.html

இது தொடர்புள்ள பிற பதிவுகள்:

நமது காதுகளின் கேட்கும் திறன் !

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s