குருட்டுப்புள்ளி (Blind spot) என்றால் என்ன ?

blindspot

Image courtesy: artlex.com

குருட்டுப்புள்ளி  அல்லது வெற்றுப்புள்ளி ? என்றழைக்கப்படும் Blind spot  என்பது நமது கண்களின் ஒளித்திரையில் ஒளியை ஏற்காத ஒரு பகுதியாகும். எனவே அப்பகுதியில் விழும் ஒளி அதாவது உருவத்தை நாம் காண இயலாது. மூளைக்கு செல்லும் பார்வை நரம்பு அந்த இடத்தில் அமைந்துள்ளது இதண் காரணமாகும். உங்கள் கண்களின் Blind spot எங்கு அமைந்திருக்கிறது என்று கண்டறிய ஒரு பேப்பரை எடுத்து பின்வருமாறு  ஒரு புள்ளியையும் ஒரு  கூட்டல் குறியையும் வரைந்து கொள்ளுங்கள்.

blindspot4

ஒரு வெள்ளைத்தாளில் இடது பக்கம் ஒரு புள்ளி வரையவும் அதற்கு நேராக அதிலிருந்து சுமார் 6 லிருந்து 8 அங்குல தூரத்தில் ஒரு கூட்டல் குறியை வரையவும்.

வரைந்த தாளை கையில் எடுத்துக்கொள்ளவும் (அல்லது  மேலிருக்கும் படத்தை மானிட்டரிலிருந்து )அதை கண்களிலிருந்து சுமார் இருபது அங்குலங்கள் தூரமாக வைத்துக்கொள்ளவும். வலது கண்ணை மூடிக்கொள்ளவும்.

இடது கண்ணால் + குறியை பார்த்தவாறு தாளை கண்களை நோக்கி மெதுவாக கொண்டு வரவும் அல்லது தலையை முன்னோக்கி நகர்த்தவும். உங்கள் கண் பார்வை + கூட்டல் குறியின் மீது இருக்கட்டும்.

blindspot

ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் உங்கள் கண்ணுக்கு தெரிந்து வந்த புள்ளி சுத்தமாக மறைந்து அந்த இடம் வெற்றிடமாக காணப்படும்.

இதையே மாற்றி செய்து பாருங்கள் அதாவது இடது கண்ணை மூடிக்கொண்டு வலது கண்ணால் புள்ளியை பார்த்துக்கொண்டே வந்தால் + குறி மறைவதை காணலாம்.

அதுவே உங்கள் கண்களின் Blind spot  ஆகும். அதாவது அந்த இடத்தில் தான் பார்வை நரம்பு மூளைக்கு செல்லும் இடமாகும். நாம இயல்பாக இரண்டுகண்களாலும் பார்ப்பதனால் ஒரு கண்ணின் Blind spot  ட்டில் பிம்பம் வரும் போது அதை மற்றொரு கண் பார்ப்பதனால் நமக்கு அந்த குறைபாடு தெரிவதில்லை.

இதோ இன்னும் சில பரிசோதனைகள்:

blindspot3

மேலேயுள்ள படத்தில் முன் சொன்னது போல வலது கண்களை மூடிக்கொண்டு + குறியை பார்த்துக்கொண்டு தலையை முன்னோக்கி நகர்த்துங்கள், குறிப்பிட்ட தூரத்தில் கோடுகளுக்கு நடுவில் உள்ள காலியிடம் மறைந்து விடுவதை காணலாம்.

blindspot2

blindspot5

மேலுள்ளவற்றில் முதல் படத்தை வலது கண்ணை மூடிக்கொண்டு  இடது கண்ணால் இலக்கம் 1 பார்க்கும்போது  இடது பக்கம் உள்ள அழுமூஞ்சி படமும் அதற்கு அடுத்த படத்தில் நீல நிற கோடுகளுக்கு இடையே இடைவெளியும் தெரிவதை காணலாம். அப்படியே அடுத்தடுத்த எண்களை பார்த்துக்கொண்டே வாருங்கள். 4 எண் வரும்போது அழுமூஞ்சி படமும் கோட்டிற்க்கிடையே உள்ள இடைவெளியும் மறைவதை காணலாம். மீண்டும் 7 இலக்கத்தில் உங்கள் பார்வை வரும்போது மீண்டும் அவை தோன்றுவதை காணலாம்.

courtesy: http://faculty.washington.edu

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s