வேறுபடும் தொடு உணர்ச்சி

5-senses

”ஒரு மனிதனுக்கு உடல் நலம் அல்லது ஆரோக்கியம் இல்லையெனில், வேறு எது இருந்தும் பயன் என்ன ?” இக்கருத்தை ஒத்துக்கொள்ளாதவர்கள் எவரேனும் இருப்பார்களா ?

இதை மறுப்பேதுமின்றி ஒப்புக்கொள்ளும் நாம், நமது உடலைப்பற்றி எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள இந்த பரிசோதனை !

நமது உடலின் ஐம்புலன்களான பார்த்தல், கேட்டல்,முகர்தல்,சுவைத்தல், தொடு உணர்ச்சி போன்றவற்றில்,    தொடு உணர்ச்சி மட்டுமே நம் உடல் முழுக்க பரவியிருக்கிறது.

அத்தொடு உணர்ச்சி நமது உடல் முழுவதும் ஒரே சீராக இருக்கின்றதா  ? அல்லது மாறுபடுகிறதா ?

உங்கள் பதிலை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ! இந்த பரிசோதனையை செய்து முடித்தவுடன் உங்கள் பதிலை சரிபாருங்கள்.

தேவையான பொருட்கள்:

 1. கூராக சீவப்பட்ட மூன்று பென்சில்கள் அல்லது மூன்று இரண்டங்குல ஆணிகள் அல்லது ஒரே அளவு ரீஃபில் முனைகளை உடைய மூன்று பால்பாயிண்ட் பேனாக்கள்
 2. கண்களை கட்ட ஒரு துண்டு
 3. பரீட்ச்சித்து பார்க்க ஒரு நபர்

செய்முறை:

உங்கள் நண்பரை அல்லது அந்த நபரை அழைத்து கண்களை கட்டிவிடுங்கள்.

blindfold

ஒரு கையை நீட்டச்சொல்லி,  ஒரு பென்சிலை மட்டும் எடுத்து அதண் கூரான முனையைக் கொண்டு கையின் விரல்களின் நுனியில் லேசாக அழுத்தி எத்தனை பென்சில்களால் தொடுகிறீகள் ? என்று கேளுங்கள்.

one pencil finger

இப்பொழுது இரண்டு பென்சில்களை ஒன்றோடு ஒன்று இணைத்து இரு முனைகளும் சமமாக இருக்குமாறு வைத்து இப்போது மீண்டும் முன்போல் செய்து, இப்போது எத்தனை பென்சில்களால் தொடுகிறீகள் ?என்று கேளுங்கள்.

two pencil finger

அடுத்து அதே பரிட்சையை மூன்று பென்சில்களை கொண்டு செய்யுங்கள். பதில்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

three pencil finger

இரண்டாம் கட்டமாக

3 pencil back

அந்நபரை உள்ளங்கையின் பின்புறத்தை காட்டச்சொல்லி முதலில்  மூன்று பென்சில்களை வைத்து மெதுவாக அழுத்தி எத்தனை பென்சில்கள் எனக்கேளுங்கள்; பிறகு ஒரு பென்சிலையும் அதற்கு அடுத்து இரண்டு பென்சில்களையும் வைத்து பென்சில்களின் எண்ணிக்கையை கேளுங்கள்.

onepencil back

two pencil back

என்ன ? பதில்கள் உங்களை ஆச்சரியப்பட வைக்கிறதா ?

ஆம், நிச்சயமாக உங்கள் நண்பரின் பதில்கள் உங்கள் புருவத்தை உயர வைக்கும். இதற்கான முழு பதிலை நான் இங்கு தெரிவிக்காததற்கு காரணம்.

இது மிக எளிமையான பரிசோதனையாகும். இதற்கென பெரிய முயற்சிகள் செய்ய வேண்டியதில்லை உங்களுக்கு தேவையானதெல்லாம் மூன்று பேனாக்கள் தாம். உங்கள் உடலைப்பற்றி நீங்கள் அறிந்து கொள்ள இச்சிறு முயற்சி கூட நீங்கள் எடுக்கவில்லையென்றால் நீங்கள் வாழ்…… ?!

Advertisements

2 Comments Add yours

 1. Bharathi சொல்கிறார்:

  yes, It really great, thanks for giving this .

  1. ebrahimsha சொல்கிறார்:

   Thanks for experimenting. science is fun ! It gives joy for those who experiment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s