நேரம் என்றால் என்ன?

time

(Image courtesy: dujs.dartmouth.edu)

நேரம் என்பது ஒரு சுய தெளிவு (self-evident) ஆகும். ஒரு மணி நேரம் என்பது ஒரு குறிப்பிட்ட நிமிடங்கள், நாள் என்பது குறிப்பிட்ட மணிகள், வருடம் என்பது குறிப்பிட்ட நாட்கள் கொண்டதாகும். ஆனால் நேரத்தைப் பற்றிய அடிப்படை இயல்புகளை நாம் யோசிப்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது.  

நேரம் என்பது நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பதாகும், அதை நாம் கடிகாரத்தின் மூலமாகவும்,நாட்காட்டி மூலமாகவும் அதை தொடர்ந்து வருகிறோம். ஆனாலும் அதை நுண்நோக்கி கொண்டு ஆராயவோ அல்லது பரிசோதித்து பார்க்கவோ முடியாது, ஆயினும் அது கடந்து சென்று கொண்டே இருக்கிறது. நேரம் நம்மை கடந்து செல்லும் போது கச்சிதமாக என்ன நிகழ்கிறது என்று நம்மால் கூற இயலாது.

eagle nebula

நிலவு பூமியை சுற்றிவருவது போன்று   நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்களை கொண்டு நேரம் என்பது கணக்கிடப்படுகிறது. உண்மையில் நேரத்தின் கோட்பாடு  என்பது விண்வெளியோடு நெருக்கமாக இணைக்கப்பட்டதாகும்.

பொது சார்பியல் கோட்பாட்டின்படி,விண்வெளி அல்லது அண்டம் என்பது 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெருவெடிப்பால் வெளிப்பட்டதாகும்.அதற்கு முன்னால் இவை அனைத்தும் மிகச்சிறியதோரு புள்ளிக்குள் அடங்கி இருந்ததாகும்.அச்சிறு புள்ளியில் அடங்கி இருந்த பொருட்களே பின்னால் சூரியனாகவும், பூமியாக்வும்,சந்திரனாகவும், வான்கோள்களாகவும்  மாறி கடந்து கொண்டிருக்கும் நேரம் பற்றி நம்மிடம் பறைசாற்றிக்கொண்டு இருக்கின்றன.

பெருவெடிப்புக்கு முன் வான்வெளியோ, நேரமோ இல்லை. 

சார்பியல் கொள்கையில்,நேரத்தின் கோட்பாடு வடதுருவத்தில் இணை அட்சரேகை தொடங்கும் அதே வழியில் தொடங்குகிறது. நீங்கள் வடதுருவத்தை தாண்டி  மேலும் வடக்கு நோக்கி நீங்கள் போக முடியாது, என்று “Kari Enqvist, என்ற  அண்டவியல் பேராசிரியர் கூறுகிறார்.

உண்மையில் நேரத்தின் வினோதமான குணங்களில் ஒன்று அது இயக்கம் மூலம் அளவிடப்படுகிறது மற்றும் அது இயக்கம் மூலமாகவே சான்றுபடுத்தப்படுகின்றது.

சார்பியல் கொள்கையின்படி,விண்வெளியின்  வளர்ச்சியின் பலன்  பிரபஞ்சத்தின் வீழ்ச்சியாக மாறலாம், அண்ட சராசரங்கள் அனைத்தும்  சுருக்கப்ட்டு மீண்டும் ஒரு புள்ளியாக மாறலாம். அதுவே நேரகோட்பாட்டின் முடிவு என்பதை நாம் அறியமுடியும்.

 

 சமீபத்திய ஆய்வுகள் வீழ்ச்சியின் கோட்பாட்டினை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக அண்டங்களிடையேயான தூரம் மிக வேகமாக அதிகரித்துக்கொண்டு வருவதாக “Enqvist  கூறுகிறார்.

Related topics: இது தொடர்பான பிற ஆக்கங்கள்:

 

குறிப்புக்கள்:

University of Helsinki (2005, April 15). What Is Time?. 

ScienceDaily. Retrieved June 8, 2013, from http://www.sciencedaily.com­

what is time ? from Wikipedia 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s