காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft)

Hovercraft-MVPP10

கவிகை ஊர்தி (புகைப்பட உதவி விக்கிபீடியா)

காற்றுமெத்தை உந்து அல்லது காற்றுமெத்தை ஊர்தி (Hovercraft), என்பது பொதுவாக நிலம் நீர் ஆகிய இருபரப்புகளிலும், அதிக மேடுபள்ளம் இல்லாமல் ஓரளவுக்குச் சமமாக இருக்கும் பொழுது,காற்றை கீழ்நோக்கி அழுத்ததுடன் செலுத்தி முன் ஏகும் ஓர் ஊர்தி. (நன்றி விக்கிபீடியா)

காற்றுமெத்தை ஊர்தி  என்கிற கவிகை ஊர்தி 1956 ல் கிறிஸ்டோபர் காக்கெரல் என்பரால் கண்டுபிடிக்கப்பட்டது.   இந்த கண்டுபிடிப்பிற்கான கோட்பாடு  20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வெற்றிகரமான கண்டுபிடிப்புகள் ஒன்றாக கருதப்படுகிறது.

ஆனால் இதற்கான அடிப்படை கருத்தை, ஆய்வை 1716ல் முதல்   காற்றுமெத்தை உந்துபோல் ஒன்றை ஆக்கியவர் இம்மானுவேல் ஸ்வீடன்பர்கு (manuel Swedenborg) என்னும் ஸ்வீடன் நாட்டவர் ஆவார் எனவும் கூறப்படுகிறது. இவர் ஒரு பொறியாளரும், மெய்யியல் அறிஞரும், கடவுள்கொள்கை அறிஞரும் ஆவார். படகு ஒன்றை தலைகீழாக கவிழ்த்தது போல இருக்கும் ஓர் ஊர்தியில், கையால் துடுப்பு போன்ற ஒன்றால் கற்றை உந்தித்தள்ளுவது போன்று மைந்த ஒரு ஊர்தியை அறிவித்திருந்தார்.

எது எப்படியாகிலும் இதனை கண்டுபிடிப்பதற்கான முக்கிய காரணம் படகு நீரின் மேல் பிரயாணிக்கையில் நீருக்கும் படகுக்கும் இடையே ஏற்படும் உராய்வை தடுக்க காற்றை ஒரு உயவுப் பொருளாக (உராய்வைத் தடுக்கும் பொருளாக) Lubricant பயன்படுத்தும் எண்ணத்தால் உருவாக்கப்பட்டதாகும். பிற்காலத்தில் மற்றொரு விஞ்ஞானில் அதையே தரையிலும் இயங்க வைக்கப்பட்டது ஆனால் அது பெரிய அளவு பிரபல்யம் அடையாததாலும், ஊக்குவிக்கப் படாததாலும் அப்படியே நின்றுவிட்டது.

எதிகாலத்தில் இதண் பயன்பாடுகள் அதிகரிக்கலாம், ஏன் இதைப்படிக்கும் உங்களில் ஒருவர் கூட இதன் பயன்பாட்டை மேம்படுத்தி பிரபல்யமாகலாம்.

இங்கே தரையில் பலூன் மூலம் ஓடும் ஒரு மாதிரி கவிகை ஊர்தியை செய்து பார்ப்போம்;

தேவையான பொருட்கள்:

  1. ஒரு பழைய சி.டி அல்லது டி.வி.டி
  2. பழைய விம் லிக்விட் பாட்டிலின் மூடி
  3. ஒட்டும் பசை ( பெவிபாண்ட், க்விக்பிக்ஸ் போன்றவை)
  4. வழவழப்பான தரை அல்லது மேசை
  5. பெரிய பலூன் (12 இன்ஞ் இருந்தால் நலம்)

செய்முறை பின் வரும் காணொலியை காணுங்கள்:

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s