இயற்பியல் விளையாட்டு-1

நம் தினசரி வாழ்வில்  வேலை செய்வது என்பது இன்றியமையாதது. அப்படி நாம் செய்யும் வேலைகளை எவ்வளவு எளிதாக, விரைவாக அல்லது குறைந்த அளவு சக்தியையும், நேரத்தையும் பயன்படுத்தி செய்கிறோம் என்பதில்தான் மனிதனின் திறமை வெளிப்படுகிறது.

இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி ?

உங்கள் திறனை அளக்க இதோ ஒரு எளிய அனைவரும் செய்து பார்க்க கூடிய இயற்பியல் விளையாட்டு.

தேவையான் பொருட்கள்:

– மூன்று சாஸர்கள் அல்லது ஏதேனும் மூன்று தட்டுக்கள் அல்லது மூடிகள் போன்ற ஏதேனும்

– சிறியது  அதைவிடப் பெரியது என்ற வரிசைகிரமமான ஐந்து நாணயங்கள் அல்லது நாணயம் போன்ற பொருட்கள்

coins1coins2

செய்முறை:

  1. மூன்று தட்டுக்களையும் வரிசையாக வைக்கவும்
  2. முதலாவது தட்டில் ஐந்து நாணயங்களையும் பெரிய நாணயம் அடியில், அதற்கடுத்தாக அதைவிட சிறிய நாணயம், அதற்கடுத்து அதைவிட சிறிய நாணயம் என்ற முறையில் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கவும்.
  3. coins3
  4. அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது அடுக்கப்பட்டுள்ள இந்த ஐந்து நாணயங்களையும் அதே வரிசையில் இருப்பது போன்று மூன்றாவது தட்டில் அடுக்க வேண்டும்.
  5. ஆனால் அதை செய்வதற்கு நீங்கள் பின் வரும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
  • ஒரு முறைக்கு ஒரு நாணயத்தை மட்டுமே எடுக்க வேண்டும்
  • எடுத்த நாணயத்தை ஒவ்வொரு தட்டாக வைத்துதான மாற்ற வேண்டும். அதாவது முதல் தட்டில் எடுத்த நாணயத்தை இரண்டாவது தட்டில் வைத்து விட்டு அதிலிருந்துதான மூன்றாவது தட்டுக்கு செல்லவேண்டுமேயன்றி முதலாவது தட்டிலிருந்து நேரடியாக மூன்றாவது தட்டுக்கு தாண்ட கூடாது.
  • எந்த நிலையிலும் சிறிய நாணயத்தை அடியுலும் பெரிய நாணயத்தை மேலும் வைக்க கூடாது.

coins4

 

coins5

 

எத்தனை குறைந்த நகர்வுகளில் நீங்கள் நாண்யங்களை மூன்றாவது தட்டுக்கு சேர்க்கிறீர்களே நீங்கள் அவ்வளவு திறமைசாலி !

வாழ்த்துக்கள் !

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s