இத்தளத்தின் நோக்கம்

நமது நாட்டின் கல்வித்தரம்  முக்கியமாக அறிவியல் கல்வியில் நாம் மிகவும் பின் தங்கி இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இது குறித்து நமது பிரதமர் கொடுத்திருக்கும் அறிக்கையை பார்க்க இங்கு கிளிக்கவும்.

science is funவேடிக்கையாகவும், விளையாட்டாகவும் செய்முறை மூலம்  கற்றுக்கொள்ள வேண்டிய ஆரம்ப அறிவியல் கல்வியை, வரலாறு பாடங்களை படிப்பது போல் படித்து மனப்பாடம் செய்யவேண்டிய நிலைக்கு ஆளாக்கியதால் , மாணவர்களுக்கு அறிவியல் கல்வி மேல் ஈர்ப்பும் ஆர்வமும் இல்லாமல் போய்விட்டது.
விளைவு இன்று இந்தியாவில் இளம் அறிவியல் அறிஞர்களுக்கு பஞ்சமாகி விட்டது. பல்கலை கழகங்களில், மேல்மட்டங்களில் ஆய்வுத்துறையில் ஈடுபடும் விஞ்ஞானிகளின் பற்றாக்குறை கண்கூடாக தெரிகிறது. இதை நாம் கூறவில்லை, அறிஞர்கள், கல்வியாளர்கள் பல நாட்களாகவும், பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

உதாரணமாக….

அமிதாபா முகர்ஜி,  இயக்குனர், தில்லி பல்கலைக்கழக அறிவியல் கல்வி மற்றும் தகவல் தொடர்பு ,   ‘இந்தியாவில் அறிவியல்கல்வி’ என்ற தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

” நம்மால் போதுமான தரம் மற்றும் எண்ணிக்கையில் இளம் விஞ்ஞானிகள் உருவாக்க இயலவில்லை.  வேறுவிதமாக கூறினால், நமது பள்ளிகளில்  அறிவியல் கல்வி முறை பெரும்பாலான மாணவர்களை  சலிப்படைய வைக்கிறது. இதனால் நமது முதன்மை  குறிக்கோலாகிய ‘அறிவியல் விஞ்ஞானிகளை  உருவாக்குதல்’  என்னும் செயலில் தோல்வி அடைகிறோம்.”

DSCN4192We are simply not producing young scientists of sufficient quality in sufficient numbers. In other words, the school science that leaves the majority of students bored also fails in its primary (unstated) aim of producing scientists. (The writer is Director, Centre for Science Education and Communication, University of Delhi.)

The Hindu பத்திரிகையில் வெளியிடப்பட்ட முழு கட்டுரையை (ஆங்கிலத்தில் ) படிக்க இங்கு கிளிக்கவும்

science class verdt tvr 2 feb 10எனவே அறிவியல் கல்வியில்  ஆர்வத்தை ஏற்படுத்த பரவலாக கிடைக்கும் ஆக்கங்களை மொழியாக்கம் செய்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு (மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்) கிடைக்க செய்வவதும்;  செயல்  வடிவ மாதிரி வகுப்புகள்  நடத்துவதும்,  நிர்வகிப்பதும்  எங்கள் முக்கிய நோக்கமாகும்.

எங்களுடைய முக்கிய குறிக்கோள்:

மிகச் சிறந்த கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே !:

இது தொடர்பான பிற பதிவுகள்:

ஓ ஸீ ஃபவுண்டேஷன் செயல்பாடுகள்

ஓ ஸீ ஃபவுண்டேஷன் இதுவரை செய்தவை

புகைப்பட தொகுப்பு

இந்தியா வல்லரசாகுமா ?

இந்தியாவும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் (ஆங்கிலம்)

Advertisements

2 thoughts on “இத்தளத்தின் நோக்கம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s