அரிஸ்டாட்டில் பல்வேறு துறைகளில் பரந்த அறிவு கொண்ட மிகப் பெரிய தத்துவ மேதை. பல்வேறு துறைகளில் பயின்ற அவர், தான் கற்ற இயற்பியல், கவிதை, விலங்கியல், தர்க்கம், சொல்லாட்சி, அரசியல், அரசு, நெறிமுறைகள், மற்றும் உயிரியல் போன்ற ஒவ்வொரு துறையிலும் பல்வேறு ஆக்கங்களை இவ்வுலகிற்கு அளித்திருக்கிறார்.
இந்த கிரேக்க தத்துவவாதி 384 கிமு Stagira என்ற ஊரில் பிறந்தார். அவரது தந்தை நிகோமசுஸ், மாசிடோனியா மாகானத்தின் ராஜாவான Amyntas III மருத்துவராக பணியாற்றினார். அவர்களின் முன்னோர்களும் இதே தொழிலில் இருந்ததாக நம்ப்பபடுகிறது.
ஆரம்ப காலத்தில் தன் தந்தையிடம் வீட்டில் இருந்தபடியே மருத்துவத்தை கற்றார். அந்த மருத்துவ அறிவு அவரின் இயற்கை நிகழ்வுகள் பற்றிய ஆராய்வுக்கு வழிவகுத்தது. அவரது 18 வது வயதில் , மற்றொரு பெரிய கிரேக்க தத்துவவாதியான பிளாட்டோவிடம் மாணவ்ராக சேர்ந்து குறுகிய காலத்திலேயே அவருக்கு பிடித்தமான மாணவராக மாறினார்.
அறிவியலில் அவரது பங்களிப்பு, பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தன. குறிப்பாக அவர் தந்து வாழ்க்கையின் பெறும் பகுதியை இயற்கை அறிவியல் ஆய்வுகளிலேயே செலவிட்டார். அவர் செயத ஆராய்ச்சிகளை கணக்கியலோடு தொடர்பு படுத்தாமல் (reference to the Mathematics) இருந்த்து மிகப்பெரிய பின்னடைவாக பிற்கால அறிவியல் அறிஞர்களால் நிரூபிக்கபட்டது.
அவரது இயற்கை அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வானவியல், வேதியியல், மற்றும் வானிலை, வடிவியல் மற்றும் பல அடங்கும்.
அவர் மாவீரர் மகா அலெக்சாண்டருக்கு ஆசிரியராகவும் இருந்தார். இந்த மாபெரும் தத்துவ மேதை கி.மு. 322 இறந்தார்.
புகைப்பட உதவி: விக்கிபீடியா
கிரேக்க தத்துவவாதி 384 கிமு Stagira என்ற ஊரில் பிறந்தார்.
தத்துவ மேதை கி.மு. 322 இறந்தார். date of birth 384 but date of death 322.
BC should calculate in reverse, what their information is right