வானவியல் பற்றிய உண்மைகள்

திருக்குர்ஆன் முழு உலகத்திற்கும் நினைவூட்டக் கூடிய வேதம் என்று அல்லாஹ் அவனுடைய வேதத்தில் தெளிவாக்குகின்றான்:

eagle nebula

”இது உலகெங்களுக்கெல்லாம் நினைவூட்டும் வேதமேயன்றி வேறல்ல. நிச்சயமாக (சிறிது) காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்.” (திருக்குர்ஆன் 38:88)

இவ்வாறாக திருக்குர்ஆன் இறுதி நேரம் வரை மனிதர்களுக்கு நினைவூட்டி வரும் ஒரு வேதமாகும். அவ்வப்பொழுது மனிதன் கண்டு பிடிப்பவைகளைப் பற்றிய தகவல்களை அது உள்ளடக்கியுள்ளது. ஏனெனில், அல்லாஹ் கூறியது போல், இந்தக் குர்ஆன் அல்;லாஹ்வின் அறிவிலிருந்து இறக்கப்பட்டது. அதில் உள்ள ஒவ்வொரு வசனமும் அல்;லாஹ்வின் அறிவு கொண்டு இறக்கப்பட்டது.

அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்: உமக்கு அனுப்பியிருப்பதை அவன் தன்னுடைய சொந்த அறிவிலிருந்து அனுப்பியுள்ளான். (திருக்குர்ஆன் 4:166)

ஒவ்வொரு வசனத்திலும் இறை ஞானம் உள்ளது. ஆனால் மனித இனம் சிறிது சிறிதாகத்தான் அதை அறிந்து வருகின்றது. மனித இனம் உயர் மட்டத்திலுள்ள அறிவியல் அறிவை அடையும் போது ஒரு குறிப்பிட்ட வசனத்திலுள்ள இறை ஞானத்தை விளங்கும் சக்தியை அது பெறுகின்றது. இவ்வாறாக, இந்த வசனம் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதுதான் என்று அறிந்து கொள்கின்றது. எப்பொழுதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மனித முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு வசனமாக தொடர்ந்து புரிந்து கொள்ளும் அறிவை அவன் பெறுவான். இவ்வாறாக மனித இனம் தொடர்ந்து மேலும் மேலும் பல வசனங்களை புரிந்து கொள்ளும். இது திருக்குர்ஆனின் தனிப்பட்ட அற்புதத்தன்மையாகும்.

பேராசிரியர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் அமெரிக்காவின் நாஸாவில் (NASA) பணி புரிகின்றார். நாஸா என்பது தேசீய விமான ஓட்டும் கலை மற்றும் விண்வெளி நிர்வாகம் என்பதாகும். (National Aeronautics and Space Adminstration). அங்கே அவர் மிகவும் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆவார். நாம் அவரைச் சந்தித்து விண்ணியல் குறித்துக் கூறும் பல திருக்குர்ஆன் வசனங்கள் குறித்து அவரிடம் கேள்வி கேட்டோம். இரும்பைக் குறித்தும் அது எவ்வாறு உருவாகியது என்பது குறித்தும் அவரிடம் கேட்டோம். பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளும் எவ்வாறு உண்டாகியது என்று அவர் விளக்கினார். அவைகள் எவ்விதம் உண்டாகின்றது என்பதை அறிவியலாளர்கள் மிகவும் சமீபத்தில்தான் கண்டுபிடித்தார்கள் என்று அவர் கூறினார். இரும்பின் மூலக்கூறை உண்டாக்கும் அளவிற்கு ஆரம்ப கால சூரியக் குடும்பத்திற்கு போதுமான சக்தி இருந்திருக்கவில்லை என்று அவர் கூறினார்.

இரும்பின் ஒரு அணுவை உண்டாக்க வேண்டிய சக்தியை கணக்கிட்டால், முழு சூரியக் குடும்பத்திலும் இருந்ததை விட நான்கு மடங்கு அதிக சக்தி வேண்டியதிருந்தது என்று கண்டு பிடிக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பூமி, சந்திரன், புதன் அல்லது மற்ற எந்த கோள்களிலுமுள்ள முழு சக்தியும் கூட, ஏன் முழு சூரியக் குடும்பமும் சேர்ந்து கூட, ஒரு இரும்பணுவை உருவாக்க முடியவில்லை. அதனால்தான் இரும்;பென்பது வெளி உலகத்திலிருந்து பூமிக்கு அனுப்பப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர் பேராசிரியர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் கூறினார். அவருக்கு திருக்குர்ஆனின் வசனத்தை வாசித்துக் காண்பித்தோம்.

இரும்பையும் நாம் தான் இறக்கி வைத்தோம். அதில் கடும் அபாயமுமிருக்கிறது. எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன. (திருக்குர்ஆன் 57:25)

பிறகு வானத்தைப்பற்றி அவரிடம் கேட்டோம். அதில் ஏதாவது பிளவுகளோ அல்லது பள்ளங்களோ உள்ளனவா என்று கேட்டோம். நாம் பேசிக் கொண்டிருப்பது விண்ணியலில் ஒரு பிரிவான ஒருங்கிணைந்த வானம்|என்பதாகும். அதை தற்காலத்தில்தான் அறிவியலாளர்கள் கண்டு பிடித்தார்கள் என்று அவர் சொன்னார். உதாரணத்திற்கு, வெளிப்புற வானில் ஒரு பொருள்;; ஏதேனும் ஒரு திசை நோக்கி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பறக்கின்றது. பிறகு அதே தூரத்தை வேறொரு திசையில் பறக்கின்றது என்றால், (அதனுடைய) கன எடை எல்லா திசைகளிலும் ஒரே மாதிரி இருப்பதை காண்பீர்கள். ஏனெனில் இந்த உருவம் அதனுடைய சொந்த சம நிலையை கொண்டுள்ளது. அதாவது எல்லா திசையிலுமுள்ள அழுத்தங்கள் ஒரே மாதிரியாக உள்ளன. இந்த சமநிலை இல்லையெனில், முழு பிரபஞ்சமுமே குலைந்து விடும். திருக்குர்ஆனிலுள்ள அல்லாஹ்வின் வசனத்தை நான் நினைவு கூர்ந்தேன்:

அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (திருக்குர்ஆன் 50:6)

The Helix Nebula (Images  courtesy: NASA)

பிரபஞ்சத்தின்; கோடியை அடைய அறிவியலாளர்களின் முயற்சிகளையும் அதில் அவர்கள் வெற்றியடைந்தார்களா என்பது பற்றியும் பேராசிரியர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களிடம் கேட்டோம். பிரபஞ்சத்தின் கோடியை அடைய அவர்கள் தீவீரமாக போராடிக் கொண்டிருக்கின்றனர் என்று அவர் கூறினார். பிரபஞ்சத்தை உற்று நோக்க சக்தி வாய்ந்த சாதனங்களை நாங்கள் நிறுவிக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் புதிய நட்சத்திரங்கள் நம்முடைய கேலக்ஸிக்குள்ளேயே இருப்பதைப்பதான் எங்களால் காண முடிகின்றது. பிரபஞ்சத்தின் கோடியை நாங்கள் இன்னும் அடைய முடியவில்லை. கீழ்வரும் திருக்குர்ஆன் வசனத்தை அவர் அறிவார்:

அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்;. (திருக்குர்அன் 67:5)

உண்மையில் இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் கீழ் வானத்திற்கான அலங்காரங்களே. அறிவியலாளர்கள் பிரபஞ்சத்தின் கடைசியை அடைந்திடவில்லை என்று அவர் கூறுகின்றார். பூமியிலிருந்து தொலை நோக்கி மூலம் உற்று நோக்கும் போது தூசுகளாலும் மற்ற சுற்றுச்சூழல் தடைகளாலும் சரியாக கவனிக்க முடியவில்லை என்றும் இதன் காரணமாக, விண்வெளியில் மேலும் பல தொலைநோக்கி நிலையங்களை நிறுவுவது பற்றி அவாகள் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். ஒளியை உபயோகிக்கும் விஷன் தொலை நோக்கிகள் நீண்ட தூரங்கள் செல்ல இயலாதவை. ஆகவே மேலும் தெரியும் வகையில், அவைகளை அகற்றி விட்டு விட்டு, ரேடியோ மூலம் இயக்கப்படும் தொலை நோக்கிகளை வைத்தோம். ஆயினும் இன்னும் நாங்கள் எல்லைக்குள்ளேதான் உள்ளோம் என்றார் அவர். அவருக்கு இந்த வசனத்தை நான் குறிப்பிட்டேன்:

பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா? பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.

ஒவ்வொரு முறையும் பேராசிரியர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் ஒரு அறிவியல் உண்மையை கூறும் போது அது சம்பந்தமான திருக்குர்ஆன் வசனத்தை அவருக்கு எடுத்துக் காண்பித்தோம். அவைகள் அனைத்தும் சரியென அவர் ஒப்புக் கொண்டார்;. பின்பு நாம் அவரிடம் கேட்டோம்: மனிதர்களால் உண்டாக்கப்பட்ட நவீன கருவிகள், ராக்கெட்டுகள், விண்வெளிக் கப்பல்கள் ஆகியவற்றின் உதவி கொண்டு நவீன விண்ணியலின் உண்மையான இயல்பை தாங்கள் பார்த்தும் கண்டுபிடித்தும் உள்ளீர்கள். இதே உண்மைகள் திருக்குர்ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடப்பட்டுள்ளதையும் தாங்கள் கண்டீர்கள். ஆகவே இது பற்றி தங்களின் கருத்து என்ன?

அவர்; கூறினார்: நம்முடைய உரையாடல் தொடங்கியதிலிருந்தே நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கலான கேள்வி அதுதான். புராதான குறிப்புக்களில் சில எந்த அளவிற்கு நவீன விண்ணியலுடன் ஒத்துப் போகின்றது என்பது குறித்து நான் மிகவும் புல்லரித்துப் போனேன். 1400 ஆண்டுகளுக்கு முன் நிலவி சூழ்நிலைகள் பற்றி (அதாவது அவர்களுக்கு எந்த அளவிற்கு விண்ணியல் பற்றிய அறிவு இருந்தது என்பது பற்றி) முழுமையாகவும் நம்பும் வகையிலும் எடுத்துக் கூறும் அளவிற்கு போதுமான நிபுணத்துவம் பெற்ற மானிட சரித்திரம் பயின்ற சரித்திர அறிஞரல்ல நான்.

நிச்சயமாக, நான் இங்கு கண்டது மிக மிக முக்கியமானது என்பதை கூறிக் கொள்கின்றேன். அதற்கு அறிவியல் விளக்கம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். நமக்குத் தெரிந்த மனித உணர்வுகளுக்கு அப்பாலுள்ள ஏதோ ஒன்றுதான் நாம் கண்ட இந்த வசனங்கள்; உருவாவதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும். இந்நேரத்தில் அது சம்பந்தமாக பதிலளிப்பது என்னுடைய நோக்கமும் அல்ல என்னுடைய நிலமையும் அதுவல்ல. நான் எதை கூற வேண்டுமென்று தாங்கள் விரும்புகின்றீர்களோ அதை குறிப்பிட்டு கூறாமலேயே அது பற்றி அதிகமான வார்த்தைகளை உதிர்த்து விட்டேன் என்று நான் நினைக்கின்றேன். விஞ்ஞானி என்ற முறையில் குறிப்பான ஒரு சில கேள்விகளை விட்டும் ஒதுங்கியிருப்பது என்னுடைய கடமை என்று நான் கருதுகின்றேன். நீங்கள் விரும்பும் பதிலை முழுமையாக கொடுக்காமல் சற்று குறைத்து இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது என்று நான் கருதுவதுதற்கு அதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கின்றேன்.

ஆம். பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு அல்லாஹ்வின் வேதத்தில் இறக்கப்பட்ட இந்த அறிவு நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஒரு மனித மூலத்திருக்கு வந்திருக்க முடியும் என்று நினைப்பது மிகவும் கடினமானது. அறிவியலாளர்கள் தங்களின் அறிவைப் பெறும் மற்றொரு மூலம் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் வானங்கள் பூமி ஆகியவற்றின் ரகசியங்களை அல்லாஹ் மாத்திரம்தான் அறிவான். பல்வேறு அறிவியலாளர்களிடமிருந்து பல மாநாடுகளில் நாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் எண்ணிப் பார்த்தால் நாம் புதியதொரு சகாப்தத்தின் நுழைவாயிலில் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

மதமும் அறிவியலும் ஒன்றையொன்று தழுவிக் கொள்ளும் காலமாகும் இது. அதாவது, உண்மையான மதமும் உண்மையான அறிவியலும். அந்த இரண்டுக்குமிடையே எந்த வித முரண்பாடும் இருக்க முடியாது மேலும் எந்த எதிர்ப்பும் இருக்கக்கூடாது. இப்படித்தான் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். அதாவது, இறை வெளிப்பாட்டின் மூலம் வந்த, தெளிவாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையோடு முரண்படுவதற்கான சாத்தியமே இல்லை. நாம் தற்பொழுது விண்வெளிக்குப் போய் கொண்டிருக்கும் காலத்தில் இருக்கின்றோம் என்று அவர்கள் சொன்னால், அது உண்மைதான், மதமும் அறிவியலும் இசைந்து போகும் காலம் இதுதான் என்று நாம் அவர்களிடம் கூறுவோம். ஆனால் உண்மையான அறிவிற்கும் உண்மை மார்க்கமான இஸ்லாத்திற்கும் இடையேதான் இது நடக்க முடியும். அந்த மார்க்கத்தைத்தான் அல்லாஹ் எல்லா விதமான பொய்மைகளிலிருந்தும் மாற்றங்களிலிருந்தும் காத்துள்ளான்.

(source: http://www.it-is-truth.org/it-is-truth/IslamAndScience.shtml)

தமிழில்: தமிழ் இஸ்லாம்.காம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s