எளிய சூரிய அடுப்பு

பரந்து விரிந்திருக்கும் இப்பிரபஞ்சத்தில் இறைவன் நமக்களித்திருக்கும் வற்றாத ஆற்றல் சூரிய சக்தி. மாற்று எரிபொருளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆய்வை மனிதன் தொடங்கிய போது சூரிய வெப்பமும் வெளிச்சமும் (Solar energy) அவன் கவனத்தை கவர்ந்தன. ஆனால் பிற தொழில் நுட்பங்கள் வளர்ந்த வேகத்தில் இத்துறை வளரவில்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கு காரணம்  அதில் ஏற்படும் சில குறைபாடுகளை  சரியான முறையில் தீர்க்க இயலாமையே காரணம்.

 

உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றி உபயோகப்படுத்தும் விதத்தை கண்டுபிடித்து பல ஆண்டுகள் ஆகியும் அதை முழுவதுமாக அல்லது திறன்மிக்கதாக உருவாக்க இயலவில்லை.

அதற்கு காரணம் சூரிய சக்தியை நேர்மின்சாரமாக மாற்றி மின்கலங்களில் (பேட்டரிகளில்) சேமித்து வைத்து அதை மாற்று மின்சாரமாக மாற்றி உபயோகபடுத்த  வேண்டும். மின்கலங்களின் செயல்பாட்டு திறன், அதன் வாழ்நாள் மற்றும் அதிக விலை போன்றவை சாதகமாக அமையவில்லை.

அதைப்போலவே சூரிய அடுப்பும் (solar cooker) பலவித குறைபாடுகளால் திண்டாடுகிறது.

 • உதரணமாக சமையல் செய்வதற்கு சூரிய வெளிச்சம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
 • இம்முறையில் வேகவைத்தல் முறை ஒன்றே எளிதாக செய்ய இயலும் ஆனால் நம் நாட்டு சமையல் முறையில் வடித்தல் தாளித்தல் போன்ற வேலைகளை சூரிய அடுப்பில் செய்வதென்பது கடினமான செயல்களாகும்.

இது போன்ற சில குறைபாடுகள் இருப்பினும் இவையனுத்தும் வருங்கால விஞ்ஞானிகளின் ஏன் இதைப்படிக்கும் மாணவர்களில் ஒருவர் கூட கண்டுபிடிக்கலாம். எனவே இங்கு மிக எளிய முறையில் ஒரு  சூரிய அடுப்பு உருவாக்குவதை காண்போம்.

தேவையான பொருட்கள்:

 1. பழைய அட்டைப்பெட்டிகள்
 2. சூரிய வெளிச்சத்தை பிரதிபலிக்கக்கூடிய பளபளப்பான காகிதம், தகரம், பிளாஸ்டிக் அல்லது அலுமினிய ஃபாயில்  போன்றவற்றில் ஏதேனும் ஒன்று.
 3. கறுப்பு நிற மூடியுள்ள ஒரு சமையல் பாத்திரம் அல்லது டப்பா போன்றவை
 4. அரிசி, பருப்பு அல்லது உருளைக்கிழங்கு போன்ற வேக வைக்கும் பொருள் (தேவையானால்)

செய்முறை:

 1. படத்தில் காட்டப்பட்டிருக்கும் வகைகளில் உங்களிடம் இருக்கும் பொருள் மற்றும் வசதிக்கேற்ப ஒரு வகை தயாரித்து கொள்ளவும்.FMKVS6FFTK89I58.MEDIUM
 2. அதை சூரிய வெளிச்சம் வரும் திசையை நோக்கி சூரிய ஒளி நன்றாக படும்படி வைக்கவும்.F3JY7DVFTK89HYO.MEDIUM
 3. பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி (தேவையானால்) வேக வைக்கவேண்டிய பொருளை சேர்த்து நன்றாக மூடி நீங்கள் தயாரித்த சூரிய அடுப்பின் நடுப்பாகத்தில் வைக்கவும்.
 4. எதிர்பார்த்த விளைவு ஏற்பட,  சூரிய வெளிச்சத்தை பிரதிபளிக்க நீங்கள் உபயோகித்த பொருட்கள்,சூரிய வெளிச்சம் படும் தன்மை, வெப்ப அளவு  மற்றும் நீங்கள் பாத்திரத்தில் வைத்திருக்கும் பொருள் போன்றவற்றின் தன்மையை பொறுத்து முப்பது நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரை ஆகும்

 

FZV8NECFTK89HYL.MEDIUM

காரணிகள்:

 • பரவலாக இருக்கும் சூரிய ஒளியின் வெப்பத்தை ஒரு முகப்படுத்தி அதண் வெப்பசக்தியை அதிகப்படுத்துவதின் மூலம் இச்செயல் நடைபடுகிறது.

 

 

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s