மலைகளைப்பற்றி திருமறை

ch1-1-b-img4

திருமறையும் மலைகளும்

இன்று உலகமெங்கும் நிலவியல் சம்பந்தமான ஆதார நூலாகப் போற்றப்படுவதும் பயிற்றுவிக்கப்படுவதும் ‘பூமி’ (Earth) என்ற புத்தகம் தான். இந்த ஆய்வு நூலை எழுதிய இருவரில் ஒருவர் தான் ஃபிராங்க் பிரஸ் (Prof. Emeritus Frank Press). இவர் முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டடருக்கு அறிவியல் ஆலோசகராகவும், வாஷிங்டனில் உள்ள தேசிய அறிவியல் கழகத்தில் 12 ஆண்டுகள் தலைவராகவும் பண்யாற்றியுள்ளார்;. இவர் ‘பூமி’ (Earth) என்ற தனது ஆய்வு நூலில், மலைகள் வேர்களைப் பெற்று அமைந்துள்ளன எனக் குறிப்பட்டுள்ளார். (Earth, Press and siever.  P.435, Also see Earth Science, Tarbuck and Lutgens. P.157)

mountain1

Fiq-1. Mountains have deep roots under the surface of the ground. (Earth, Press and Siever, p. 413

Figure 2: Schematic section.  The mountains, like pegs, have deep roots embedded in the ground. (Anatomy of the Earth, Cailleux, p. 220.)  (Click on the image to enlarge it.)

Figure 3: Another illustration shows how the mountains are peg-like in shape, due to their deep roots. (Earth Science, Tarbuck and Lutgens, p. 158.)

இந்த வேர்கள் நிலத்தில் மிக ஆழமான நிலையில் அமைந்து, மலைகளுக்கு முளைகளாக அமைந்து, அது (கூடாரங்கள் காற்றில் பறந்து விடாமல் தடுப்பதற்கு அதன் பக்க வாட்டில் உள்ள கயிறுகளை இழுத்துக் கட்டுவதற்காக நிலத்தில் அறையப்படும் முளைக்குச்சிகள்) போன்ற தோற்றத்தை அளிக்கின்றன. (படம். 7,8,9)

இதையே, திருமறைக் குர்ஆன் மலைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக ஆக்கவில்லையா? மலைகளை முளைகளாக (நாம் அமைக்கவில்லையா?) (அல்-குர்ஆன் 78:6-7) என்று கூறுகின்றது.

மலைகள் பூமிக்கடியில் புதைந்துள்ள ஆழமான தன்னுடைய வேர்களின் மேல் அமைந்துள்ளது என்றும், இந்த வேர்கள் பூமியின் மேற்பரப்பில் உள்ள மலைகளின் உயர அளவைக் காட்டிலும் பன்மடங்கு மிக அதிகமான அளவு ஆழம் கொண்டு பூமிக்கடியில் வேர்கள் போல் அமைந்து பூமிக்கு முளைகளாகச் செயல்படுகின்றன என்று இன்றைய அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.*(Geological concept of Mountain in the Qur’an, E-El-Naggar, P.05).

மேற்கண்ட குர்ஆனின் வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘முளைகள்’ (Pநப) என்ற வார்த்தையானது மிகச் சரியான முறையில் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ள அந்த வார்த்தையின் ஆழத்தைப் போலவே, மலைகளின் வேர்கள் முளைகளாக பூமியில் ஆழப்பதிந்துள்ளன என்பதை சமீபத்திய 19-ம் நூற்றாண்டின் பிற் பகுதியில் தான் அறிவியல் உலகம் கண்டறிந்தது.* (Geological concept of Mountain in the Qur’an, E-El-Naggar, P.05).

மேலும் மலைகள் பூமியின் மேற்பகுதியை அசையவிடாமல் கெட்டியாகவும் உறுதியாகவும் பிடித்துக் கொள்வதற்கும் பயன்படும் அதே வேளையில், இத்தகைய தன்மை மூலம் பூமிக்கு உறுதித் தன்மையையும் தருகிறது. *(Geological concept of Mountain in the Qur’an, pp.44-45).

பூமியின் மீது-அது உங்களைக் கொண்டு அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை உறுதியாக அவன் அமைத்தான்! (உங்கள் போக்குவரத்துக்கு சரியான வழியை) நீங்கள் அறிவதற்காகப் (பல) பாதைகளையும், ஆறுகளையும் (அமைத்தான்). (அல்-குர்ஆன் 16:15)

மலைகள் யாவும் பூமியை அசைவின்றி கெட்டியாகப் பிடித்துக் கொள்ளப் பயன்படுகின்றன என்ற அறிவியல் உண்மை நவீன அறிவியலில் நிலவியல் (Geology) துறையின் புதிய கண்டுபிடிப்பான பிளேட் டெக்டானிக்ஸ் (Plate tectonics) முறையைப் பின்பற்றி 1960-ம் ஆண்டுக்குப் பின்பு தான் அறிந்து கொள்ள முடிந்தது. *(Geological concept of Mountain in the Qur’an, pp.5).

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலமான 1400 ஆண்டுகளுக்கு முந்தைய, விஞ்ஞானம் எது என்றே அறியப்படாத அஞ்ஞான காலத்தில் மலைகளின் தன்மைகளைப் பற்றி யாராவது சிந்தித்தாவது இருந்திருக்க முடியுமா? நம் முன்னால் தோன்றுகின்ற பிரம்மாண்டமான மலையின் உருவம் உண்மையிலேயே தனது அடிப்பாகத்தில் வேர்கள் போன்ற முளைகளைப் பெற்றிருக்கின்றன என்ற இன்றைய அறிவியல் உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த யாராவது கற்பனையாவது செய்து பார்த்திருக்க முடியுமா? இன்று இருக்கும் நிலவியல் சம்பந்தமான நூல்களில் பெரும்பான்மையானவை பூமியின் மேற்பாகத்தில் தெரியும் மலைகளைப் பற்றித்தான் விவரிக்கின்றன. ஏனெனில் இவை யாவும் நிலவியலில் அதிகம் நிபுணத்துவம் பெற்றவர்களால் எழுதப்படாதது தான். மேலும், இன்றைய நவீன அறிவியல் துறையில் புதிய கருவிகளின் துணையுடன், நிபுணத்துவம் பெற்ற நிலவியல் அறிவியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகள் யாவும், மலைகளைப் பற்றி குர்ஆன் குறிப்பிடும் பேருண்மைகளை சந்தேகத்திற்கிடமின்றி ஒப்புக் கொண்டுள்ளன.

ஏனெனில் குர்ஆன் மனிதக் கரங்களால் வரையப்பட்டதல்லவே!! மாபெரும் கருணையாளன் முற்றும் அறிந்த ஏக வல்லோனாகிய அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதமன்றோ, அது மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடையுமன்றோ!!!!!

மூலம் (source: http://www.islam-guide.com) தமிழில்:தமிழ்இஸ்லாம்.காம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s