Emulsion என்றால் என்ன ?

image001எண்ணெய் கப்பல்கள் கடலில் பயணிக்கும் போது சிந்தும் எண்ணெய் கடலின் மேற்ப்பரப்பில் அந்த எண்ணெய் மிதந்து கொண்டு இருப்பது சுற்றுப்புறச்சூழலுக்கு மிக கேடுகளை விளைவிக்கிறது. முக்கியமாக கடல்வாழ் உயிரனங்களான மீன்கள் மற்றும் கடல் பறவைகள் போன்றவை. எண்ணெய் தண்ணீரில் மிதக்க காரணம் அது தண்ணீரை விட எடை குறைவாக இருப்பது அதாவது அடர்த்தி குறைவாக இருப்பதாகும். எண்ணெயும் தண்ணீரும் கலக்காதென்பது நாமெல்லாம் அறிந்த செய்தியே !இது தொடர்பான பின் வரும் பரிசோதனை உங்களை மிகச்சிறந்த விஞ்ஞானியாக ஆக்கும்.

தேவையான பொருட்கள்:

1/ பாதிவரை நீரால் நிரப்பப்பட்ட நான்கு கண்ணாடி குவளைகள்

2/ சமையல் எண்ணெய் தேவையான அளவு

3/ உணவில் சேர்க்கும் வண்ணம் சிகப்பு அல்லது நீல வண்ணங்கள் நன்கு பயன்படும். பவுடராக இருப்பின் தண்ணீரில் கலந்து வைத்துக்கொள்ளவும்.

4/ பாத்திரம் கழுவ பயன்படுத்தும் லிக்விட் சோப் (விம் போன்றவை)

செய்முறை:

1/ முதல் கண்ணாடி குவளையில் சில சொட்டுக்கள் உணவு வண்ணத்தை இட்டு நன்றாக கலக்கவும். நீரில் வண்ணம் சமமாக கலந்து நீர் வண்ணமயமாவதை கவனி.

2/ இரண்டாவது குவளையில் சிறிதளவு எண்ணெய் சேர். அது முதல் குவளையில் வண்ணம் கலந்தது போல் இலகுவாக தண்ணீரில் கலக்கிறதா ? என்று கவனி. ஒரு குச்சியின் உதவியால் நன்றாக கலக்கி விட்டு சிறிது நேரம் கழித்து கவனி. எண்ணெய் துளிகளெல்லாம் மேல் மட்டத்தை அடைவதை பார்.

3/ மூன்றாவது கண்ணாடி குவளையில் ஒரு எண்ணெய் அடுக்கு ஏற்படும் வரை எண்ணெயை ஊற்று. எண்ணெய் அடுக்கின் அளவு குறைந்தது ஐந்து செ.மீ. அளவு கனம் இருக்க வேண்டும். எண்ணெய் முழுவதும் மிதந்து முழுமையான அடுக்காக ஏற்பட்டவுடன் அதண் மேல் சில சொட்டுக்கள் வண்ணத்துளிகளை இடு( கலக்க வேண்டாம்). வண்ணத்துளிகள் எண்ணெய் அடுக்கின் மேல் ஏற்படுத்தும் விளைவுகளை கவனி. பிறகு குச்சியின் உதவியால்  கலவையை நன்கு கலக்கி விடு. இப்போழுது கவனி. சில வண்ணத்துளிகள் எண்ணெயின் அடுக்கின் இடையில் தங்கியிருப்பதை காணலாம்.சிறிது நேரம் கழித்து ஏற்படும் நிகழ்வுகளை கவனி.

4/ மூன்றாவது குவளையில் செய்தது போல் நான்காவது குவளையிலும் எண்ணெய் அடுக்கை உண்டாக்கி பல சொட்டுக்கள் வண்ணத்துளிகளை சேர். அத்துடன் ஒரு தேக்கரண்டி திரவ சோப்பை (விம்) சேர்த்து நன்றாக கலக்கு. இம்முறை என்னென்ன மாற்றங்களை காண்கிறாய் ? எண்ணெய் அடுக்கின் வண்ணத்தை கவனி. அது தண்ணீரின் அடுக்கைப்போல் தோற்றமளிக்கிறதா ?

emulsion2 emulsion

காரணிகள்:

தண்ணீரும் எண்ணெயும் ஒன்றாக கலப்பதில்லை. அவற்றை ஒன்றாக கலக்கினாலும் சிறிது நேரத்தில் அவை வேறுபட்டு விடுகின்றன. தண்ணீரை விட எண்ணெய் எடை குறைவானதால் (குறைந்த அடர்த்தியானதால்) மிதக்கிறது. உணவு வண்ணத்தில் தண்ணீரே உட்பொருளாக இருப்பதனால், அது நீருடன் எளிதாக கலந்து விடுகிறது. ஆனால் எண்ணெயுடன் கலப்பதில்லை. எண்ணெய் அடுக்கின் மேல் வண்ணத்துளிகளை இட்டபின் ஏற்பட்ட நிகழ்வுகளை கவனித்தீர்களா ? சில நேரங்களில் வண்ணத்துளிகள் எண்ணெயில் சிறிய முத்துக்கள் போன்ற தோற்றத்துடன் ஊடுருவிச்செல்வதை காணலாம்.

இரண்டையும் கலப்பது எப்படி ?

எண்ணெயையும், தண்ணீரையும் சிறு துகள்களாக சிதைப்பதன் மூலம் ஒன்றாக சேர்க்கலாம். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பால் இந்த முறையிலேயே ஒன்று சேர்க்கப்படுகிறது. பசுவிலிருந்து கிடைக்கும் பால் வெண்ணெய் சேர்ந்திருக்கும் பகுதி மேற்பரப்பிலும், தண்ணீர் சேர்ந்த பகுதி (skim milk)   அடிப்பகுதியிலும் பிரிந்து நிற்கும். பாக்கெட்டுக்களில் பாலை அடைக்கும் முன் ஜல்லடை போன்ற அமைப்பில் அதிவேகமாக பீச்சி அடிக்கப்படுகிறது. இதனால் அவை மிகச்சிறு துகள்களாக மாற்றப்பட்டு மீண்டும் பிரியாவண்ணம் ஒன்று  சேர்க்கப்படுகினறன.

இம்முறையில் இரண்டு திரவங்களை ஒன்று சேர்க்கப்படுவதை Emulsion (பால்மம்,குழம்பு) என்றழைக்கப்படுகிறது. Emulsion எனப்படுவது கோடிக்கணக்கான நுண்நீர்த்துளிகளாக மாற்றப்பட்ட ஒரு திரவத்தினும் மற்றொரு நுண்நீர்த்துளிகளாக மாற்றப்பட்ட திரவத்தின் இடைச்சொறுகளாகும்.

ஆயில் பெயிண்ட் எனப்படும் எண்ணெய் கலந்த வண்ணங்கள் Emulsion  என்றே அழைக்கப்படுகின்றன. பல்வகை மருந்துகள், அழகு சாதன்ங்கள் இம்முறையிலேயே தயாரிக்கப்ப்டுகின்றன. இவை அனைத்தும் நீர் மற்றும் எண்ணெய் பொருட்கள் சேர்ந்த கலவைகளாகும். இவை கூழ்மமாக்கி எனப்ப்டும் emulsifier மூலம் ஒன்று சேர்க்கப்படுகின்றன.

முட்டை மஞ்சள் கரு, இயற்கை கூழ்மமாக்கியாக உள்ளது. ஓவியக் கலைஞர்கள் பல்வேறு பொருட்கள் கலந்த  வண்ணகலைவையை ஒன்று சேர்க்க இதை பயன்படுத்துகிறார்கள்.

courtesy: http://www.csiro.au/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s