எளிய மின்சுற்று (A simple circuit )

buttons-light-onமின்சார மற்றும் மின்னனுவியலில் மின்சுற்று அல்லது சர்க்யூட் என்பது அடிப்படையான ஒன்றாகும். இந்தப்பரிசோதனையில் ஒரு எளிய மின்சுற்றை உருவாக்கவும் அதே போல் இனி வரும் பாடங்களில் நமக்கு மின்சார சப்ளை தேவைப்படுவதாலும் மின்கலன்களை அதாவது பேட்டரிகளை இணைத்து எப்படி மின்சார சப்ளை பெறுவது என்றும் இப்பாடத்தில் காணவிருக்கிறோம்.

தேவையான பொருட்கள்:

  1. டார்ச் லைட்டுக்கு உபயோகிக்கும் மின்கலன்கள் அல்லது பேட்டரிகள் -2
  2. பழைய சைக்கிள் டியூப் ஒரு துண்டுப்பகுதி
  3. பெண்கள் ஜாக்கெட்டுக்களில் உபயோகப்படுத்தும் பிரஸ்ஸிங் பொத்தான் ஒரு செட்.
  4. ஒயர் துண்டுகள்
  5. சில்வர் ஃபாயில் ( உபயோகப்படுத்திய மாத்திரை அலுமனிய மேலுரை துண்டுக்கள்
  6. கத்தரிக்கோல்
  7. டார்ச் லைட் பல்ப் ஹோல்டருடன்

செய்முறை:

1/ பழைய சைக்கிள் ட்யூப் துண்டை எடுத்து கால் அங்குல அகலமான ரப்பர் பேண்ட் போல் துண்டுகளாக நான்கிலிருந்து ஆறு துண்டுகள் வெட்டிக்கொள்ளவும்.

Battery-rubber-cutting

2/ இரண்டு பேட்டரிகளையும் எதிரெதிர் முனைகளை ஒன்றாக வைத்து அதாவது ஒரு + முனையையும் ஒரு – முனையையும் ஒருபக்கம் வைத்து இரப்பர் பேண்டுகளால் நேராகவும் பக்கவாட்டிலும் இனைக்கவும்.

Battery-rubber-fixing

Battery-rubber-fixed

3/ அலுமனிய ஃபாயிலை இரண்டு அங்குல நீளமும் கால் அங்குல அகலமும் துண்டாக வெட்டி பேட்டரிகளின் ஒரு பக்கத்தின் இரு முனைகளையும் (அதாவது ’+’ மற்றும் ‘ – ‘ முனைகளை.) ஏற்கனவே போடப்பட்டுள்ள இரப்பர் பேண்டுகளின் கீழ் வைத்து இணைக்கவும்.

Battery-fixing-foil

4/ சுமார் நான்கைந்து அங்குலம் நீளமுள்ள இரண்டு தனிதனி வயர் துண்டுகளை ஒரு அங்குல நீளம் பிளாஸ்டிக் பகுதியை இரு முனைகளிலும் நீக்கி ஒரு பக்க வயர்பகுதியில் ஒரு சிறிய அலுமனிய ஃபாயிலை இணைக்கவும். அதேபோல் இரண்டு வயர் துண்டுகளிலும் இணைத்துக் கொள்ளவும்.

Battery-wire-fixing

5/ நாம் ஏற்கனவே அலுமினியம் ஃபாயிலைக்கொண்டு இனைத்த பக்கத்தின் எதிர்பக்கத்தில் பேட்டரிகளின்  + மற்றும் – முனைகள் தனித்தனியாக இருக்கும். அவற்றின் முனைகளில் தனித்தனியாக இரண்டு வயர்களின் அலுமனிய ஃபாயில் இணைத்த பக்கத்தை இணைக்கவும். இணைத்த இரு வயர்களின் மற்றொரு பக்கங்களில்  3 வோல்ட் சக்தியுள்ள (இரண்டு 1.5 பேட்டரிகளின் இணைப்பு) மின்சாரம் கிடைக்கும். இதை நமக்கு மின்சக்தி தேவையானவற்றில் இதை இணைத்து மின்சக்தி பெறலாம்.

குறிப்பு: பேட்டரியின் மேல் முனை + அதாவது பாஸிடிவ் முனை என்றும் கீழ் முனை  – நெகடிவ் முனை என்றும் அழைக்கப்படுகின்றன. + முனைக்குசிவப்பு வயரையும் – முனைக்கு கறுப்பு வயரையும் பயன்படுத்துவது வழக்கம். இதைக்கொண்டு +, – மின்தொடர்பை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

Battery-wire-connected

இத்துடன் ஒரு பல்பை இணைத்து எளிய மின்சுற்றை உருவக்குவது எப்படி என்று பார்ப்போம்.

ஓரங்களில் பிளாஸ்டிக் நீக்கிய ஒரு சிறிய வயர் துண்டை எடுத்து ஒருமுனையில் பிரஸ் பட்டனின் ஒரு பாகத்தை எடுத்து அதில் இருக்கும் சிறிய துளையில் நுழைத்து முறுக்கி வைத்துக்கொள்ளவும்.வயரின் மற்றொரு முனையை பல்ப் ஹோல்டரில் உள்ள ஒரு இணைப்பில் இணைக்கவும்.

buttonsbuttons-wire-connection

பல்ப் ஹோல்டரின் மற்றொரு இணைப்பை பேட்டரியிலிந்து வரும் மற்றொரு வயரில் இணைக்கவும்.

பட்டனின் மற்றொரு பாகத்தை எடுத்து பேட்டரியிலிருந்து வரும் ஒரு முனையில் இணைக்கவும்.

buttons-battery-connected

முடிவுற்ற தோற்றம்

பிரஸ் பட்டன் தனித்தனியாக இருக்கும் நிலையில் ஆஃப் நிலையிலும் பட்டனை ஒன்று சேர்த்தால் ஆன் நிலையிலும் இருக்கும்.

buttons-light-on

simple_circute_diagram

சிம்பிள் ஸர்க்யூட் டையக்ராம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s