அசைந்தாடும் மெழுகுவர்த்தி

சிறு குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்களில் ஒன்றான Seesaw எனப்படும் இச்சாதனத்தை அனைத்து சிறுவர் பூங்காக்களிலும், பள்ளி விளையாட்டுத்திடல்களிலும் காணலாம். அதனடிப்படையில் செயல்படும் ஒரு எளிய இயற்பியல் பரிசோதனையை இங்கு காண்போம்.

candle seesaw

எச்சரிக்கை: இப்பரிசோதனைக்கு பெரியவர்களின் மேற்பார்வை மிகவும் அவசியம்.

தேவையான பொருட்கள்:

 1. நீளமான மெழுகுவர்த்தி
 2. இரண்டு ஒரே உயரமுள்ள கண்ணாடி குவளைகள்
 3. மூன்றல்லது நான்கு அங்குலம் நீளமான மெல்லிய கம்பி (சைக்கிள் சக்கர கம்பி போன்றவை)
 4. தீப்பெட்டி

செய்முறை:

மெழுகுவர்த்தியின் ஒரு பக்கம் நெருப்பை பற்ற வைப்பதற்க்கு ஏற்ப திரி சிறிதளவு வெளியில் நீண்டு கொண்டும் பின் பக்கம் தட்டையாகவும் திரி மெழுகின் உள்ளே அமிழ்ந்திருக்கும். இங்கு நமக்கு இருபுறமும் நெருப்பு பற்றவைக்க வேண்டியிருப்பதால் தட்டையாக இருக்கும் அடிப்பாக்ததில் சிறிதளவு மெழுகை நீக்கி விட்டு திரியை பற்றவைப்பதற்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளவும்.

மெல்லிய நீண்ட கம்பியை எடுத்து மெழுகுவர்த்தியின் நடுப்பாகத்தில் கவனமாக சொருகவும். கம்பியை நெருப்பில் காட்டி சூடுபடுத்திக்கொண்டால் மிக எளிதாக நுழைத்து விடலாம்.

seesaw

புகைப்பட உதவி wpcliparts.com

வெப்பத்தால் பாதிப்பு ஏற்ப்படாத   இடத்தில் இரண்டு கண்ணாடி குவளைகளை ஒன்றிற்கு ஒன்று அருகில் தலைகீழாக கவிழ்த்தி  மெழுகுவர்த்தியில் நுழைத்த கம்பியின் இருஓரங்களும் கண்ணாடி குவளைகளின் அடிப்பாகத்தில் இருக்குமாறு படத்தில் காட்டியவாறு அமைக்கவும்.

மெழுகுவர்த்தியின் இருபுறங்களிலும் நெருப்பை பற்ற வைக்கவும். சிறிது நேரத்தில் மெழுகுவர்த்தி தானாக இருபக்கங்களிலும் ஏறி இறங்கும் காட்சியை கண்டு களிக்கவும்.

Advertisements

3 Comments Add yours

 1. sangeetha சொல்கிறார்:

  please give reason

  1. ebrahimsha சொல்கிறார்:

   Very Simple ! when one side leans towards the floor or the surface the but flame stands straight the result the melts. Hence the leaned side looses its weight and it moves upwards.
   The same thing happen on the other side and it become lighter than the other side it repeats..

   சாய்ந்த பக்கமுள்ள சுடர் நேராகவே எரிவதால் நெருப்பு பட்டு மெழுகு கரைந்து விடுவதால் அப்பக்கம் எடை குறைகிறது. அதன் காரமாக மேலும்புகிறது. எதிர்ப்பக்கம் சாய்ந்தவுடன் அப்பக்கம் மெழுகு கரைந்து எதிர்ப்பக்கத்தை விட எடை குறைவதால் மீண்டும் இது மேலே செல்கிறது, இப்படியாக தொடர்ந்து நிகழ்கிறது..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s