நகரும் தீக்குச்சிகள் (Turgor pressure)

capillary செயல்பாடு என்பதும்,  Turgor அழுத்தம் என்பதும் உயிரியலில் முக்கியமான செயல்பாடுகள் ஆகும். அவற்றின் பொருளை புரிந்து கொள்ள இந்த எளிய பரிசோதனை உதவும்.

வளைத்த தீக்குச்சிகள் மீது நீர் தெளித்த பின் உருவாகும் ஒரு அழகிய வடிவத்தை காணீர்.

தேவையான பொருட்கள்:

 1. தீக்குச்சிகள்
 2. சொட்டு மருந்திடும் ட்ராப்பர்
 3. தண்ணீர்
 4. ஒரு தட்டு

செய்முறை:

 • ஐந்து தீக்குச்சிகளை எடுத்து நடுவில் கவனமாக வளைக்கவும். முறித்து விடக்கூடாது
 • அவற்றின் முனைகள் ஒன்றாக இருக்குமாறு ஒரு தட்டின் மேல் வைக்கவும். அவற்றை ஒன்றாக இணைத்த பின் அது ஐந்து முனைகள் கொண்ட ஒரு நட்சத்திர குறி  போல் தோற்றமளிக்கும்.
 • குச்சிகளின் முனைகள் இணைந்து இருக்கும் நடுப்பகுதியில் ட்ராப்பரின் உதவியால் நான்கைந்து சொட்டுக்கள் தண்ணீர் துளிகளை இடவும்.

image001தண்ணீர் துளிகள் இட வேண்டிய இடம்

 • ஓரிரு நிமிடங்கள் உற்றுக்கவனி. என்ன நிகழ்கிறது ?
 • நட்சத்திர குறிபோல் தோற்றமளித்த அக்குச்சிகள் ஒரு குறிப்பிட்ட அளவு வரை நிமிர்ந்து நட்சத்திர தோற்றத்தை அளிப்பதை பார்க்கலாம்.

image002

முழு நட்சத்திர  தோற்றம்

காரணிகள்: 

இந்தப் பரிசோதனையில் இரண்டு வித செயலாக்கங்கள் நடைபெறுகினறன.

ஒன்று: *capillary action என்றழைக்கப்ப்டும் நிகழ்வு. தீக்குச்சி உலர்ந்த மரத்தினால் செய்யப்பட்டதாகும். அதண் செல்களில் உள்ள நீரின் பெரும்பகுதி காய்ந்து அச்செல்களில் வெற்றிடம் ஏற்ப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி செல்களுக்கு இடையிலும் வெற்றிடங்கள் இருக்கும். நீரின் புறப்பரப்பு விசையானது இவ்வெற்றிடங்களுக்கு இடையே தண்ணீரை இழுக்கிறது. எனவே  மரக்குச்சியான தீக்குச்சியால் தண்ணீர் உறிஞ்சப்படுகிற்து. இந்த capillary நிகழ்வுதான் இரண்டாவது செயலாக்கத்தை தொடங்கி வைக்கிறது.

தீக்குச்சியை வளைக்கும் போது அதன் முனையில் உள்ள செல்களும் அவற்றிற்கு இடையில் உள்ள வெற்றிடங்களும் நசுக்கப்படுகின்றன. அவற்றின் மேல் நீர் தெளிக்கப்பட்டவுடன் அச்செல்களுக்குள்ளும் அவற்றிற்கு வெளியில் உள்ள வெற்றிடங்களை அந்நீர் நிரப்புகிறது. அப்பொழுது ஏற்படும் உள்ளிலிருந்து ஏற்படும் நீரின் அழுத்தத்தால்  தீக்குச்சி தனது பழைய நிலையை அடைய முயற்சி செய்கின்றன.

நீர் ஒரு பொருளின் உள்ளிலிருந்து ஏற்ப்படுத்தும் அழுத்தத்தால் அப்பொருள் தனது பழைய நிலையை அடைய முயற்சி செய்கிறதோ அந்த அழுத்தத்தை உயிரியலில் ’turgor’ அழுத்தம் என்று அழைக்கிறார்கள் .

*நீரை தக்க வைத்துக்கொள்ளக் கூடிய  பொருட்களில் உள்ள நீரினை உறிஞ்சிய அல்லது காயவைத்த பின் மீண்டும் அவற்றின் மீது நீர் இடப்பட்டால் அதில் உள்ள நுண் குழாய்கள் அவற்றை உறிஞ்சும் போது ஏற்ப்படும் நிகழ்வை ’capillary action’ என்றழைக்கிறார்கள்.

நன்றி:  csiro  ஆங்கில மூலத்திக்காகவும் மற்றும் படங்களுக்காகவும்

Advertisements

One Comment Add yours

 1. rafeek சொல்கிறார்:

  அறிவியல் பராக் ஐக்ட்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s