எளிய வெப்பமானி Thermometer

image002

வெப்பத்தை அளக்க பயன்படும் வெப்பமானி பல்வேறு வடிவங்களிலும், பல்வேறு உபயோகங்களுக்கு தகுந்தவாறும் தயாரிக்கப்படுகின்றன. இங்கு நாம் செய்யவிருப்பது வெப்பமானி செயல்படும் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஒரு எளிய வெப்பமானியாகும்.

தேவையான பொருட்கள்:

 • இறுக்கமாக மூடக்கூடிய மூடியுடன் கூடிய காற்றுபுகாத பிளாஸ்டிக் பாட்டில் (500  ml குளிர்பான பாட்டில் )
 • உறுதியான பிளாஸ்டிக் ஸ்ட்ரா
 • ஒட்டும் சிமிண்ட்  (M seal போன்றவை)
 • உணவில் சேர்க்கும் வண்ணம் Food colour
 • சொட்டு மருந்து போடும் ட்ராப்பர்  தேவையானால்
 • மார்க்கர் பேனா ( வாட்டர் ப்ரூஃப் மார்க்கர்)

செய்முறை:

 1.  பாட்டிலில் பாதிவரை நீரை ஊற்று அதில் வண்ணத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்
 2. பாட்டிலின் மூடியின் நடுப்பாகத்தில்  ஸ்ட்ரா செல்லும் அளவு துளையிட்டுக்கொள்ளுஙகள். ( ஒரு கம்பியை ஒரு மெழுகு வர்த்தியில் காட்டி சூடேறியதும் அதைக்கொண்டு துளையிடலாம். ஆனால் இதை பெரியவர்களின் துணையோடு மட்டுமே செய்யவேண்டும்)
 3. பாட்டிலை மூடியால் மூடிய பின் அந்த துளையினுள் ஸ்ட்ராவை சொருகி ஸ்ட்ரா தண்ணீரில் நன்றாக மூழ்கி இருக்கும் வரை சொருகிவிடவும். மூடிக்கு மேலே குறைந்தது மூன்று இஞ்ச் வரை வெளியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். உயரம் பற்றவில்லையானால், சிறிதளவு தண்ணீரை சேர்த்து நீரின் மட்டத்தை உயரமாக்கிக்கொண்டு ஸ்ட்ராவை வெளியில் இழுத்துக்கொள்ளவும்.
 4. மூடியின் துளையருகே இருக்கும் இடைவெளியை எம் சீலைக்கொண்டு மூடியின் உட்புறமுன் வெளிப்புறமுன் நன்றாக மூடிவிடவும். அந்த துளையின் வழியாக காற்று வெளியேறக்கூடாது என்பதால் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். ஒட்டும் போது ஸ்ட்ரா நசுங்கிவிடாமல் கவனமாக ஒட்ட வேண்டும்.
 5. ஒட்டிய பகுதி நன்றாக காய்ந்த உடன் மூடியை பாட்டிலில் பொருத்தி காற்று புகா வண்ணம் நன்றாக மூடிவிடவும்.
 6. வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கும் ஸ்ட்ராவின் முனையில் வாயயை வைத்து நன்றாக அழுத்தி ஊதவும்.  ஸ்ட்ராவிலிருந்து வாயை எடுத்த உடன் பாட்டிலில் உள்ள நீர் ஸ்ட்ரா வழியாக மேல் நோக்கி வரும். நீங்கள் அதிக அழுத்தத்துடம் ஊதியிருந்தால் வெளியில் பீச்சி அடிக்கும். அப்படி இல்லாமல் ஸ்ட்ராவினுள் நீர் மூடிக்கும் மேலே சுமார் ஒரு இஞ்ச் அளவு இருந்தால் போதுமானது. அதிகமாக உள்ள நீரை ட்ராப்பர் கொண்டு நீக்கலாம். அல்லது பாட்டிலின் மூடியை சிறிதளவு லேசாக திறந்து மூடி நீரின் மட்டத்தை குறைக்கலாம்.
 7. மூடியின் மேல் உள்ள ஸ்ட்ரா பகுதியின் நீர் மட்டத்தை மார்க்கர் பேனாவால் குறித்துக்கொள்ளவும். நீங்கள் குறிக்கும் நேரத்தில் அந்த சுற்றுப்புறம் வெப்பமாக இருந்தால் அந்த நீர்மட்டம் காட்டுவது வானிலை வெப்பமாக இருக்கிறது என்று குறித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இப்பொழுது இருக்கும் அந்த சூழ்நிலை மாறினால் ஸ்ட்ராவினுள் உள்ள நீரின் மட்டம் கூடியோ குறைந்தோ காணப்படும். அதாவது நீங்கள் குறிக்கும்போது சூழ்நிலை வெப்பமாக இருந்தால் வெப்பம் தனிந்த பிறகு பார்த்தீர்களானால் நீரின் மட்டம் குறைந்து காணப்படும். மாறாக அந்த சூழ்நிலை குளிர்ச்சியாக இருந்து பிறகு வெப்பமாக மாறினால் நீர் மட்டம் உயர்ந்து காணப்படும்.
 8. இதை பரிசோதிக்க குறியிட்ட பின் பாட்டிலை சிறிது நேரம் குளிர்சாதனப்பெட்டியிலோ அல்லது ஏ சி ரூமிலோ வைத்துப்பாருங்கள். நீரின் மட்டம் குறைந்திருக்கும்.

image001

காரணிகள்:

வெப்பத்தால் பொருட்கள் விரிவடையும் என்பது நாம் அறிந்ததே !.

பாட்டிலினுள் உள்ள காற்று வெப்பத்தால் விரிவடையும் போது ஏற்ப்படும் அழுத்தத்தால் நீர் உந்தப்பட்டு ஸ்ட்ராவினுள் நீர் மட்டம் உயருகிறது. அதே போல் வெப்பம் குறைந்தவுடன் காற்று சுருங்குவதால் வெற்றிடம் ஏற்ப்பட்டு ஸ்ட்ராவினுள் உள்ள நீர் பாட்டிலினுள் இறங்கி விடுவதால் நீர் மட்டம் குறைகிறது.

இதன் அடிப்படையிலேயே வெப்பமானிகள் இயங்குகின்றன. மருத்துவ வெப்பமானிகளில் நீருக்கு பதிலாக பாதரசம் பயன்படுத்தப்ப்டுகிறது. பாதரசம் குறைந்த அளவு வெப்பத்தால் கூட விரிவடையும் தன்மை படைத்ததால் பெரும்பாலும் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது பாரம்பரிய ம்ருத்துவ வெப்பமானிக்கு பதிலாக மின்னனு வெப்பமானிகள் பயன்படுத்தப்படுகின்றன.  அவை செயலாற்றும் விதம் பற்றி இன்னொரு பாடத்தில் பார்ப்போம்.

சுற்றுப்புறச்சூழலில் வெப்பத்தை அளக்கப்பயன்படுத்தும் வெப்பமானிகளில் பாதரசத்துக்கு பதிலாக ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. அவை வெப்பத்தையும், குளிரையும் விரைவாக பிரதிபலிப்பதாலும், அதன் உறையும் தன்மை (freezing point ) நீரைவிட அதிகம் என்பதாலும் அதைப்பயன்படுத்துகிறார்கள்.

புகைப்பட உதவி: CSIRO

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s