அடர்த்தி வரிசை

Density

ஒவ்வொரு பொருளுக்கும் அடர்த்தி என்பது வேறுபடும் என்பது நமக்கு தெரிந்த விஷயம். திடப்பொருள்களின் அடர்த்தியை அதன் தன்மைகளை கொண்டும் எடையை கொண்டும் சாதாரண நிலையில் அறிந்து கொள்ளலாம். நாம் இங்கே காணவிருப்பது மூன்று வெவ்வேறான திரவங்களின் அடர்த்தியை வரிசைப்படுத்தி பார்க்க இருக்கிறோம்.

image001

தேவையான பொருட்கள்:

  • ஒரு கண்ணாடி பாட்டில்
  • தேவையான அளவு தேன்,சமையல் எண்ணெய்,தண்ணீர்
  • ஸ்குரு,பேப்பர் க்ளிப்கள் போன்ற நீரில் மூழ்க கூடிய சிறிய பொருட்கள்
  • உணவில் சேர்க்கும் வண்ணங்கள் (Food colour)
  • ஐஸ் கட்டிகள்
  • திரவ சோப் ( VIM போன்றவை)

செய்முறை:

  1. முதலில் தேன் பிறகு தண்ணீர் கடைசியாக சமையல் எண்ணெயை கவனமாக பாட்டிலுல் ஊற்றவும்.தேவையானால் உணவு வண்ணங்களை நன்றாக தெரிவதற்காக இவற்றில் சேர்த்துக்கொள்ளலாம். இப்போது என்ன நிகழ்கிறது கவனி !
  2. பாட்டிலினுள் சேகரித்து வைத்த சிறிய பொருட்களான திருகானி, பேப்பர் க்ளிப் போன்றவற்றை போட்டுப் பார் ! அவை பாட்டிலின் அடிப்பாகத்தை அடைகின்றனவா ? பிறகு ஐஸ் கட்டிகளை போடு, நிகழ்வுகளை கவனி !
  3. இப்பொழுது ஒரு சொட்டு திரவ சோப்பை சேர், நிகழ்வுகளை கவனி !

காரணிகள்:

image002தேன்,தண்ணீர்,சமையல் எண்ணெய் போன்றவை வெவ்வேறான அடர்த்தியை கொண்டிருப்பதனால் அவை ஒன்றோடு ஒன்று கலப்பதில்லை. அதன் விளைவாக வெவ்வேறு அடுக்குகளாக உருவாகின்றன.

அடர்த்தி அதிகமுள்ளவை அடிப்பாகத்திலும் குறைவானவை அதற்கு மேலும் மிதக்கின்றன. அதனுள் பொருட்களை இடும்பொழுது அப்பொருட்களின் அடர்த்திக்கேற்ப அந்தந்த திரவங்களின் மிதக்க மிதக்க ஆரம்பிக்கின்றன. சில பாட்டிலின் அடிப்பாகத்திற்கு சென்று விடுகின்றன.

வெப்பம் திட மற்றும் திரவ பொருட்களின் அடர்த்தியை பாதிக்கின்றன. நீரின்  அதிசயத்தக்க ஒரு விஷயமென்னவெனில் அதன் அடர்த்தி திரவ நிலையை விட திட நிலையில் குறைவாக இருப்பதாகும். எனவேதான் ஐஸ் கட்டி எண்ணெயின் மீது  மிதக்கிறது ஆனால் எண்ணெய் தண்ணீரின் மீது மிதக்கும் !  இருந்தாலும் சூடான தண்ணீரின் அடர்த்தி குளிர்ந்த நீரின் அடர்த்தியை விட குறைவாக இருப்பதால் சூடான நீரை குளிர்ந்த நீருடன் சேர்த்தால் சூடான நீர் மேல் மட்டத்தில் தங்கும்.

பெரியவர்களின் துணையுடன் சிறிதளவு சூடான நீரில் சில சொட்டுக்கள் உணவு வண்ணத்தை கலந்து நாம் ஏற்கனவே இட்டு வைத்திருக்கும் கலவையில் சேர் என்ன நிகழ்கிறது என்று பார் ! ஏற்கனவே நாம் ஊற்றிய தண்ணீருடம் கலக்கிறதா ? அல்லது அதற்க்கு மேல் ஒரு தனி அடுக்காக நிற்கிறதா என்று கவனி !

இன்னும் தொடரும்..

Source & Photos: CSIRO

Advertisements

One thought on “அடர்த்தி வரிசை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s