விஞ்ஞானி vs டிரைவர்

conferenceபிரபலமான அறிவியல் விஞ்ஞானி  ஒருவர் நாட்டின் பல பாகங்களுக்கு சென்று அறிவியல் மாநாடுகளில் கலந்து கொண்டு அறிவியல் தொடர்பான கேள்விகளுக்கு விடையளிப்பார். சகஜமாக பழகும்  பழக்கமுடைய அவர் தனது பயணத்தின் போது தன் டிரைவரிடம் அவர் கண்டுபிடித்த விஷயங்கள் அறிவியல் செய்திகள் பற்றி விவாதித்துக்கொண்டு செல்வது வழக்கம்.

டிரைவரும் அந்த அறிவியல் விஞ்ஞானி பங்கேற்க்கும் அனைத்து மாநாடுகளிலும் ஒரு ஓரமாக நின்று நடப்பவற்றை கவனித்துக்கொண்டு இருப்பார். இதனால் அவருடைய பேச்சுக்கள், மக்கள் கேட்கும் கேள்விகள் போன்றவை இந்த டிரைவருக்கு அத்துபடியாகி விட்டது.

ஒருமுறை ஒரு மாநாட்டிற்க்காக நீண்ட பயணம் மேற்க்கொள்ள வேண்டியிருந்தது. வழக்கம் போல் இருவரும் பேசிக்கொண்டே சென்று கொண்டிருக்கும்போது யாருடைய வேலை சிரமம் மிக்கது என்ற பேச்சு  தொடங்கியது.

விஞ்ஞானி சொன்னார்: எங்கேயாவது வெளியில் சென்றால்தான் உனக்கு வேலை, மீதி நேரமெல்லாம் சும்மா உட்கார்ந்து விட்டு முழு மாதத்திற்க்கான சம்பளத்தை வாங்கிவிடுகிறாய் ! எனக்கு அப்படியா ? முழு நேரமும் ஆராய்ச்சி செய்தால்தான் விஷயங்களை விளக்க முடியும். புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் மக்கள் கேட்டும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.. என்று நீட்டிக்கொண்டே போக..

டிரைவரோ, ”நீங்க மட்டும் என்னவாம், ஒரு சில விஷயங்கல படிச்சு வைச்சிக்கிட்டு பேசுறீங்க, அதப்பத்தி கேள்வி கேட்டா பதில் சொல்றீங்க இது ஒரு கஷ்டமான விஷயமா ?: போங்க சார் என்றவர் தொடர்ந்து ” நீங்க ஏதாவது தப்பு பண்ணீட்டா மறுபடி திருத்திக்கொள்ளலாம், எங்க வேலை அப்படியல்ல ! வண்டி ஓட்டும் போது கொஞ்சம் அசந்தாலும் அவ்வளவுதான் போய்ச்சேரவேண்டியதுதான்”

தொடர்ந்து விவாதமாகி கடைசியில் சவால்விடும் நிலையில் வந்து நின்றது. அதாவது ஒருவர் வேலையை மற்றொருவர் மாற்றி செய்து காண்பிப்பது என்று முடிவாகிற்று. அன்று செல்லவிருந்த மாநாடு நடக்கும் ஊருக்கு முதல் முறையாக செல்வதும், இதற்க்கு முன் இந்த அறிஞரை அவர்கள் பார்த்ததில்லை எனபதும் சாதகமாக அமைய, அன்றைய மாநாட்டில் டிரைவர் அறிவியல் விஞ்ஞானியாக பங்கேற்பதும், விஞ்ஞானி வாகனத்தை ஓட்டிச்செல்வதும் என் முடிவு செய்யப்பட்டது.

வழியில் வாகனத்தை நிறுத்தி உடைகளை மாற்றிக்கொண்டு டிரைவர் அறிவியல் விஞ்ஞானியாகவும், அறிவியல் விஞ்ஞானி வாகன ஓட்டியாகவும் மாநாடு நடக்கவிருந்த  ஊர் போய்ச்சேர்ந்தனர்.

அந்த ஊரில் நடக்கும் முதல் மாநாடு என்பதால் அதிகமான கூட்டமும் ஆராவரமும் காணப்பட்டது.வழக்கமான வரவேற்ப்புகளுக்குப்பின் அன்று கொடுக்க்பபட்டிருந்த தலைப்பில் அருமையாக பேசி முடித்து அசத்தினார் விஞ்ஞானி வேடத்தில் இருந்த டிரைவர்.

அறிஞருக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும், சந்தோஷமும் ஒன்று சேர ஏற்ப்பட்டன.. சரி பேசுவதில்  சமாளித்து விட்டாலும் அடுத்து வரும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பையன் எப்படியும் மாட்டிக்கொள்வான் என்ற நினைப்பில் அடுத்த நிகழ்வுக்காக காத்திருந்தார் விஞ்ஞானி.

கேள்வி பதில் நிகழ்ச்சி தொடங்கியது அதிலும் அசராமல் கேட்ட கேள்விகளுக்கு பட் பட் என்று பதிலளித்துக்கொண்டிருந்தார் விஞ்ஞானி வேடத்தில் இருந்த டிரைவர்.

கேள்வி பதில் நிகழ்ச்சியில் எப்படியும் மடக்கிவிடலாம் என்று இருந்த விஞ்ஞானிக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க அருகில் இருந்த ஒரு பார்வையாளரிடம் நைசாக தான் இது வரை எங்கும் பேசாத தலைப்பில் இருந்து ஒரு கேள்வியை சொல்லி அவர் சார்பாக கேட்க சொன்னார்..

அந்த பார்வையாளர் அந்த கேள்வியை கேட்க.. சிறிது நேரம் மவுனமாக இருந்தார் விஞ்ஞானி வேடத்தில் இருந்த அந்த டிரைவர்.

அரங்கம் முழுவதும் நிசப்தமாக பதிலை நோக்கி காத்திருக்க..

விஞ்ஞானி ’ஆஹா, பையன் மாட்டிக்கிட்டான்’ என்று மனதுக்குள் குதூகலித்துக்கொண்டு என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்.

சிறிது நேர மவுனத்திற்க்குப்பின்  பேச ஆரம்பித்த விஞ்ஞானி வேடத்தில் இருந்த டிரைவர்.“ இது இந்த தலைப்பிற்க்கு உட்பட்ட கேள்வி இல்லையானாலும் நான் பதிலளிப்பேன்.. ஆனால் இது போன்ற சாதாரண கேள்விக்கு பதிலளிக்க நான் தேவையில்லை ! இந்த கேள்விக்கு பதிலளிக்க என் டிரைவர் போதும்.. எனவே எனது டிரைவரை மேடைக்கு வந்து பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம் !

விஞ்ஞானி முகத்தில் ஈயாடவில்லை !

 

Image courtesy:http://www.bttprojects.co.za/

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s